ஆக்கம்:ரஹ்மத் பரூக், மலேசியா.
- வணக்கம் என்பது மகிழ்ச்சியானது. இறை வணக்கத்திற்கு அடுத்தபடியாக, உன் பெற்றோர்களை, புனிதமானவர்களை, அறிஞர் பெருமக்களை, அன்பானவர்களை, பண்பானவர்களை, உன் ஆசிரியர்களை வணங்கு.
- சீர்திருத்தம் என்பதே வெற்றிதான். அதிகமான பிரார்த்தனையிலும் பாவமன்னிப்பிலும் ஈடுபடுகிறவர் இந்த உலகிற்கு நன்மை செய்பவர்களில் ஒருவர்.
- நல்ல நண்பன் என்பவன் உறுதியோடு இருப்பான். ஆறுதல் அளிப்பான். உனது களைப்பை நீக்குவான். உனது கவலையில் பங்கு கொள்வான். இரகசியத்தைப் பேணுவான்.
- நீயிருக்கின்ற நிலையை விட அதிக மகிழ்ச்சியை எதிர்பார்க்காதே. நீ உனது கைகளாலேயே நஷ்டமடைந்து விடுவாய். பதவிகளை எதிர்பார்க்காதே. அது கவலையையும் சோகத்தையும் தரும்.
- மறதி என்பது நன்மையையும் தரும் அதே மடங்கு தீமையும் தரும். நல்ல மனிதர்களின் குறைகளை மன்னித்து விடு கூடுமானவரை மறந்து விடு.
- பழி வாங்குவதனை விட மன்னிப்பதானது இனிமையானது. ஓய்வினை விடச் செயல் இன்பமளிக்கக் கூடியது. செல்வத்தை விட திருப்தி பெரியது. சொத்துக்களை விட தேக ஆரோக்கியம் சிறந்தது.
- இரவுத் தொழுகை பகலின் சிறப்பாகும். தூய உள்ளமானது மனிதர்களுக்கு நல்லதையே விரும்பும். சுதந்திரத்தை எதிர் பார்ப்பது வணக்கமாகும்.
- சோதனையில் பின்பற்ற வேண்டிய நான்கு கடமைகள் :
- பொறுமையோடு வாழ்தல்
-நல்லதை நினைத்தல்
-வெற்றியை எதிர்பார்த்தல்
- இறைவனின் கட்டளைக்குப் பணிந்து நடப்பதை எவ்வாறு தெரிவிக்கலாம்?
- மடமையின் அடையாளங்கள்:
- மனிதர்களைப் பகைத்துக் கொள்ளுதல்
- பெற்றோரை மனம் வருந்தச் செய்தல்.
- இரகசியங்களை அம்பலப்படுத்தல்.
1 கருத்து:
சிறந்த பகிர்வு
கருத்துரையிடுக