செவ்வாய், ஜூலை 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44 குற்றம் கடிதல் 


குற்றமே காக்க பொருள்ஆகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை. (434)

பொருள்: தனக்கு இறுதி பயக்கும்(அழிவைத் தரும்) பகை குற்றமே, ஆதலால் அக்குற்றம் செய்யாமல் இருப்பதே நன்மை தரும்.


இன்றைய பொன்மொழி

நபிகள் நாயகம்

நிச்சயமாகவே, நெருப்பு விறகைச் சாப்பிடுவது போல, பொறாமை நன்மைகளைச் சாப்பிட்டுவிடும்.

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்


கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும்சிலருக்கு சோப்பில்உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்சிலர்பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள்வரும்கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்  இதோ:
 • வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும்நீங்கள்தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால்வெடிப்பு மறையும்.
 • கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறுபயிற்றம் பருப்பு மாவுவேப்பிலை,கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்துகால் வெடிப்புகளில் பூசி வரகால்வெடிப்பு மறைந்துபளபளப்பாகும்.
 • இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்துஅதில் கால்களை ஊற வைத்துபிரஷினால் தேய்க்கவும்கால் வெடிப்புமறையும் வரைக்கும் செய்யவும்குளிக்கும்போது தேங்காய் எண்ணைதேய்த்து குளிக்கவும். (கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதைவாங்கி தினமும் குளிக்கும்போது கால் பாதங்களை தேய்க்கவும்சரியாகிவிடும்.) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ்ஸ்டோன் கொண்டு தேயுங்கள்பின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம்போட்டு மசாஜ் செய்யுங்கள்தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ்ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளியுங்கள்சரியாகி விடும்.
 • பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்துவிடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.
 • ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாகதேய்த்து கழுவ வேண்டும்இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளைநீக்கிபாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.
 • கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்துகழுவி வந்தால்சொரசொரப்பு தன்மை நீங்கிமிருதுவாகும்.
 • முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு வெடிப்புகளில்தேய்க்க வேண்டும்மறுநாள் மேலும் 

திங்கள், ஜூலை 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44 குற்றம் கடிதல் 


தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாம்
கொள்வர் பழிநாணு வார். (433)

பொருள்: பழிச்சொல்லுக்கு நாணுகிற பெருமக்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதி குற்றம் செய்யாமல் காத்துக் கொள்வர்.

இன்றைய பழமொழி

இந்தியப் பழமொழி

நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

’அதிர்ஷ்டம்’


அன்றைய படப்பிடிப்பில் கதாநாயகனுக்குத் தங்கையாக நடிக்க வேண்டிய நடிகை வராமல் போகவே,  பத்தோடு பதினொன்றாக குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த புவனாவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

அந்தப் படத்தின் டைரக்டர் மாலன் ஏற்கெனவே ஏழெட்டுப் படங்கள் எடுத்துச் சிறந்த டைரக்டர் என்று பெயர் வாங்கியவர்.

"இந்த டைரக்டர் படத்துல, அதுவும் கதாநாயகனுக்குத் தங்கச்சி வேடம், அதிர்ஷ்டக்காரி தான்டி நீ" என்று சக நடிகைகள் வாழ்த்துத் தெரிவிக்கவே, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள் புவனா.

எத்தனையோ நாள் கண்ட கனவு இன்று நனவாகியிருக்கிறது, இந்த வாய்ப்பை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவளது உள்மனது சொல்லவே, உயிரைக் கொடுத்து நடித்தாள்.

"ம். நல்லா நடிக்கிறியே, இவ்ளோ நல்லா நடிப்பேன்னு நான் எதிர்பார்க்கல" என்று டைரக்டர் பாராட்டியபோது, வசிஷ்டர் வாயிலிருந்து கிடைத்த பாராட்டு எனப் புளகாங்கிதமடைந்தாள் அவள்.

"இந்தப் படம் வெளிவந்தவுடனே  பெரிய ஸ்டார் ஆயிடுவே, எங்களையெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கம்மா"
என்று தோழிகள் கிண்டல் செய்ய, கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கலானாள். 

கதாநாயகியாக அவளிடம் மேலும் 

ஞாயிறு, ஜூலை 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44குற்றம் கடிதல் 


இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. (432)

பொருள்: ஈயாத லோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும்.

இன்றைய பொன்மொழி

சோக்கிரட்டீஸ்

அறிவுக்காகச் செய்யப்படும் முதலீடு எப்போதும் கொழுத்த வட்டியையே தரும்.

சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா…….?


tabletநமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே காரணம்.
கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்.
நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும். எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.
முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.
இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் (Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache) போன்றவை) மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.
இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.
நன்றி: pirabuwin.wordpress.com

சனி, ஜூலை 28, 2012

சரும அழகிற்கு உதவும் உணவுகள்


மிளிரும், மென்மையான, புத்துணர்ச்சியான மற்றும் மிருதுவான என, பல்வேறு வகையான சருமங்கள் இருக்கின்றன. இத்தகைய சருமங்களை பெறுவதற்காக, ஏராளமான அழகு சாதனப் பொருட்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் மூலமே, சருமத்தை அழகாகவும், ஒளிரும் தன்மை உடையதாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாகவே, சரும ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, பி, சி, இ, ஆன்டி ஆக்சிடன்ட்கள், சிங்க் மற்றும் செலேனியம் ஆகியவை மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தோலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கியமானது. பருப்பு வகைகள், எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்கள் போன்றவற்றில் இந்த அத்தியாவசிய கொழுப்புக்களான, ஒமேகா-3 கொழுப்பு சத்துக்கள் காணப்படுகின்றன. மிளிரும் சருமம் பெற விரும்புபவர்கள், காபின் போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது. இதோ ஒருவரின் சரும வகைகளுக்கு ஏற்பட சில ஆரோக்கிய டிப்ஸ்கள்…


சென்சிடிவ் சருமத்தினர்:

* உணவு முறைகளை திட்டமிட்டுக் கொள்வதோடு, ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

* பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை நிறைந்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* சென்சிடிவ் சருமத்தினருக்கு தோலில் எரிச்சல் மற்றும் வைட்டமின் பி பற்றாக்குறையால், வறட்சி, செதில்கள் உதிர்தல் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அவர்கள் வைட்டமின் பி சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.


எண்ணெய் பசை சருமத்தினர்:

* எண்ணெய் பசை சருமத்திற்கு ஹார்மோன்களே காரணம். எனவே, இத்தகைய சருமத்தினர், ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம்.

* பழங்கள், காய்கறிகள் மற்றும் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

* எண்ணெய் பசை சருமத்திற்கும் வைட்டமின் பி2 மற்றும் பி5 பற்றாக்குறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்த வைட்டமின்கள் அதிகளவு நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* முட்டைகோஸ் மற்றும் மேலும் 

வெள்ளி, ஜூலை 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44குற்றம் கடிதல் செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் 
பெருக்கும் பெருமித நீர்த்து. (431)
பொருள்:ஆணவமும்(மதமும்), வெகுளியும், அற்பத்தன்மையும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம் மேம்பாட்டுத் தன்மையை உடையது.

இன்றைய பழமொழி


மூத்தோர் சொல்பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறுதான் காயும்.

ஆரோக்கிய அழகுக் கலை

உடற்ப்பயிற்ச்சியும் நமக்கு அழகு செர்க்கும்:  1. நின்றபடியே கைகளிரண்டையும் மேலே தூக்கி, முழங்கால் மடங்காமல், குறைந்தது 25 முதல் 50 தடவை தரையைத் தொடலாம். கைகளை உயர்த்தும்போது மூச்சை இழுத்தும், குனியும்போது மூச்சை வெளியே விடுவது எளிதாய் இருக்கும்.

*

2. கைகளை பக்கவாட்டில் விரித்தும், கால்களை அகல விரித்தும், வலக்கையால் இடதுகால் பாதங்களைத் தொட்டு, இடக் கையை மேலே உயர்த்தி, தலையை இடக்கையாய் பார்க்கும்படி செய்ய வேண்டும். (இதையும் இருபத்தைந்து தடவை, கைகால்களை மாற்றிச் செய்யலாம்). யோகாசனத்தில் இது ‘திரிகோணாசனம்’ எனப்படும்.

*

3. குப்புறப் படுத்துக்கொண்டு கைகளிரண்டையும் தொடைக்கு அருகில் வைத்து, கால்களையும் தலையையும், தரையிலிருந்து 2 அங்குலம் உயர்த்தி ஆறுவரை எண்ணிவிட்டு, பழைய நிலைக்கு வரவும். (இதுபோல் ஆறு தடவை செய்யலாம்).

*

4. குப்புறப் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, இரு கைகளால் பிடித்துக் கொண்டு, தலையை தரையிலிருந்து நிமிர்த்தி மேலே பார்த்துக் கொண்டே தொடைகளையும் உயர்த்த வேண்டும். இம்மாதிரி ஆறு தடவை செய்யலாம். யோகாவில் இது ‘தனுராசனம்’ எனப்படும்.

*

5. நேராகப் படுத்துக்கொண்டு தலை, கால்கள் ஆகியவற்றை தரையிலிருந்து 4 அங்குலம் மேலே உயர்த்தி 6 முதல் 10 தடவை எண்ணிவிட்டு, தலையைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். (இம்மாதிரி 6 தடவை செய்யலாம்).

*

6. கைகளிரண்டையும் பின்னால் உயர்த்தி, எழும்பி, படுத்தபடியே கால் கட்டைவிரல்களைத் (முழங்கால்களை மடக்காமல்) தொடலாம். இம்மாதிரி 10 முதல் 20 தடவை செய்யலாம்.

*

7. நின்றுகொண்டே மெதுவாய்த் தரையிலிருந்து 2 அங்குலம் உயர்ந்து, மெதுவாக 10 நிமிடம் ‘ஜாகிங்’ செய்து இரண்டு, மூன்று நிமிடம் நின்று ஓய்வெடுத்து, மெதுவாக மூச்சுப் பயிற்சி செய்து மீண்டும் பத்து நிமிடம் குதிக்கலாம்.

*

8. நேராக மல்லாந்து படுத்துக் கொண்டு, கைகளிரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி, மூச்சை நன்றாய் உள்ளிழுத்து எழும்பி, மூச்சைவிட்டுக் கொண்டே, கால் சட்டை விரல்களை முழங்கால்கள் மடங்காமல் தொடவேண்டும். தொடும்போது முகம் முழங்கால்களில் படுமளவு குனிந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைவது நிச்சயம்.

***

பாட்டி வைத்தியம்.
1. வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை மேலும் 

வியாழன், ஜூலை 26, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை


அறிவுஉடையார் எல்லாம் உடையார்; அறிவுஇலார்
என்உடைய ரேனும் இலர். (430)

பொருள்: அறிவுடையவர்கள் எல்லாம் உடையவராவர். அறிவில்லாதவர்கள் மற்ற எல்லாப் பொருள்களும் உடையவராயினும் ஒன்றும் இல்லாதவரே.

இன்றைய பழமொழி


மூத்தோர் சொல்னிதரில் நாவிதனும், பறவைகளில் காகமும் வாயாடிகள்.

பித்தம் தணிக்கும் கொத்தமல்லி


உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும். மக்கள் பிணி நீங்கி நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன. 

இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம். மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.

கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம். 


நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள். கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள். அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.

பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி. இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர். இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும். நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர். 

இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை. இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது. குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.

கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம் பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம் வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங் கச்சுமுலை மாதே! நீ காண் -அகத்தியர் குணவாகடம் பொருள் - சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும். 

கொத்தமல்லியின் பயன்கள் · சுவையின்மை நீங்கும். · வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும். செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும். · வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும்.

மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும். · புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.  

கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும் கண் சூடு குறையும். சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.  

உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மன அமைதியைக் கொடுக்கும். · உடலுக்கு வலுவைக் கொடுக்கும். விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு. · நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். 

இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். · வாய் நாற்றத்தைப் போக்கும். பல்வலி, ஈறுவீக்கம் குறையும். சிறுநீர், வியர்வையைப் பெருக்கும். 

கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி சின்ன வெங்காயம் – 5 மிளகு – 10 சீரகம் – 2 தேக்கரண்டி பூண்டு – 5 பல் மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 கொத்து உப்பு - தேவையான அளவு எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.


கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும். 5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும். 

கொத்தமல்லி சூரணம் கொத்தமல்லி – 300 கிராம் சீரகம் – 50 கிராம் அதிமதுரம் – 50 கிராம் கிராம்பு – 50 கிராம் கருஞ்சீரகம் – 50 கிராம் சன்னலவங்கப்பட்டை 50 கிராம் சதகுப்பை – 50 கிராம் இவை அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும்.


இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும். கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு. 

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது. இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.
நன்றி: இதயபூமி 

புதன், ஜூலை 25, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை


எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை 
அதிர வருவதுஓர் நோய். (429)

பொருள்: வரக்கூடிய துன்பத்தை முன்னரே அறிந்து அதனின்றும் காத்துக் கொள்ளக் கூடிய அறிவை உடையவர்க்கு, அவர் நடுங்கக் கூடிய வகையில் வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.


இன்றைய பொன்மொழி


மூத்தோர் சொல்


ற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது.

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்


ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார்கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கு ம். ஆகவே கட்டுப் பாட்டோடு அதை சாப்பி ட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பி ட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ் கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடு ம் அல்லது சளி பிடிக்கும் என்பதால். நல்ல து தான், ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இரு க்கிறது. அது என்னென்னவென்று பார்க்கலாமா!!!

1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இரு க்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவ தோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.
2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந் திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுட ன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.
3. சாக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சாக்லேட் சாப்பிட்டா ல் இதயத்திற்கு நல்லது. அதிலும் சாக்லே ட் ஐஸ் கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏ தேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகி விடும்.
4. ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் மேலும் 

செவ்வாய், ஜூலை 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (428)

பொருள்: அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத செயலாகும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையோர் செயலாகும்.  

இன்றைய பழமொழி


மூத்தோர் சொல்ன்பது வியாபாரம் செய்பவனுக்குத் தரித்திரத்தையும் சேர்த்துப் பத்தாகும்.

இளையராஜா

தமிழ் சுணங்கிப் படுக்கும்பொழுதெல்லாம், மீட்டெடுக்க ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதேனும் ஒன்று தமிழைத் தட்டி எழுப்பி ஃபீனிக்ஸாக மாற்றும். இந்தத் தலைமுறையில் யுனிகோடும், சென்ற தலைமுறையில் செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளும் அதைச் செய்ய, கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என மண்ணின் இசையுடன், தமிழை மட்டுமல்ல,ஒட்டு மொத்த தென்னகத்தின் அடையாளங்களையே மீட்டவர் இளையராஜா. 

அது ஒரு சிறிய வார இறுதி விருந்துக் கொண்டாட்டம், அமெரிக்க, ஸ்விடீஷ் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஒருப் பாடல் ஒலிக்கிறது, திடீரென ஒருவர் ஆனந்தத்தில் கத்துகிறார், இது ஐஸ்லாந்து இசை, என் ஊர் இசை ... அப்பொழுதுதான் இத்தனை நாள் வரை ஸ்விடீஷ் ஆள் என நினைத்துக் கொண்டிருந்தவர் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. மொழிக்கு அடுத்தபடியாக இசையே தான் இன்னார் எனக் பெருமையுடன் காட்டிக்கொள்ள ஏதுவாக இருக்கிறது என்பதை வேறு ஒருவர் மூலம் நான் உணர்ந்த தருணம் அது.

மேட்டிமைக் கனவான்களின் இசையையும் ரசிக்க முடியாமல், எங்கே தன் நிலம் சார்ந்த இசையை ரசித்தோமானால் தாழ்ச்சியாகிவிடுமோ என்று அல்லாடிக்கொண்டிருந்த சாமானிய தமிழ் இசை விரும்பிகளை, இதோப்பார் எனக்கான இசை, என் மக்களில் மத்தியில் இருந்து ஒருவனால் இசைக்கப்படுகிறது என இசையின் எந்த இலக்கணங்களும் தெரியாத என்னைப்போன்ற சராசரிகளைப் பெருமை கொள்ள செய்தவர். நல்ல ஆசிரியருக்கான அளவுகோல் , எத்தனைப் பெரிய சூத்திரமாக இருந்தாலும் அதை எத்தனை எளிமையாக சொல்லுகிறார் என்பதில்தான் இருக்கின்றது. இளையராஜா, இசைக்கு அரசனோ, சக்கரவர்த்தியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னைப்போன்றவர்களுக்கு இசை ஆசிரியன். மன்றம் வந்தத் தென்றலுக்கு பாடல் ஒலிக்கும்பொழுதெல்லாம் உடன் பாடும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இசைக்கும் எனக்குமான தூரத்தைக் குறைத்தவர் இளையராஜா என்ற ஆசிரியர் தான். 

நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்னது “இளையரஜா இல்லை எனில் 80 களில் ஒரு இளையத் தலைமுறையே பைத்தியமாகி இருக்கும் அல்லது தீவிரவாதியாகி இருக்கும்”. 80 களின் தலைமுறையென்ன, இன்றும் கூட, பலரின் சோகங்களுக்கு ஆறுதல் சொல்லப்படுவது இளையராஜாவின் இசையினால் தான். கொண்டாட்ட மனோபாவத்தில் இருக்கும்பொழுது நவீன புதுமையான இசை வடிவங்கள் வேண்டுமானால் ரசிக்கப்படலாம். ஆனால் ஆறுதலாக உடைந்திருக்கும் மனதை வருடிக் கொடுக்க பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் நாடுவது இளையராஜாவின் இசையைத்தான். மகிழ்ச்சியை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம், வருத்தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டுமே பகிரப்படும், இளையராஜாவின் இசை அத்தகையது. இரவு பத்து மணிக்கு மேல் இளையராஜாவுடன் தூங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என இது அல்லது அது என அரசியலைக் குழந்தைப் பருவத்தில் இருந்தேத் தொடங்கிவிடும் நாம், இளையராஜாவையும் விட்டு வைக்கவில்லை. இளையராஜாவைப் பிடித்தால் ஏ.ஆர்.ரகுமானையோ அல்லது வேறு யாரையுமேப் பிடிக்கக் கூடாது என்பதில்லை. மேலே சொன்னபடி ஏ.ஆர்.ரகுமானையும் ரசிக்க தேவையான அடிப்படைப் பாடங்களைச் மேலும் 

திங்கள், ஜூலை 23, 2012

குறள் காட்டும் பாதைஇன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை


அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர். (427)

பொருள்: பின்னால் வருவதனை முன்னர் அறியும் ஆற்றல் உடையவரே அறிவுடையவராவர். அதனை அறியும் ஆற்றல் இல்லாதவர் அறிவில்லாதவரேயாவர். 

இன்றைய பழமொழி


மூத்தோர் சொல்ஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம்.

கருஞ்சீரகம் நோய் நிவாரணி

கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா? வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்) கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன. கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)10pt; பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும். ;">குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
 • கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
 • கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
 • கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
 • தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
 • 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
 • கருஞ்சீரகத்தை  மேலும் 
 • ஞாயிறு, ஜூலை 22, 2012

  குறள் காட்டும் பாதை


  இன்றைய குறள்
  அதிகாரம் 43 அறிவுஉடைமை


  எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
  அவ்வது உறைவது அறிவு. (426)

  பொருள்: உலகில் உள்ள சான்றோர்கள் எவ்வழியில் ஒழுகுகின்றார்களோ, அவ்வழியில் தானும ஒத்து நடப்பதே அறிவுடைமையாகும்.
  சனி, ஜூலை 21, 2012

  குறள் காட்டும் பாதை


  இன்றைய குறள்
  அதிகாரம் 43 அறிவுஉடைமை  உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
  கூம்பலும் இல்லது அறிவு. (425)

  பொருள்: உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு. அத்தொடர்பில் முதலில் மகிழ்ந்து விரிதலும் பின்னர் வருந்திக் குவிதலும் இல்லாததே அறிவாகும்.

  இன்றைய பொன்மொழி


  மூத்தோர் சொல்


  ழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும் பகல் நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்.