புதன், ஜூலை 31, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை 
 
 
அழிவந்த செயினும் அன்புஅறார்; அன்பின் 
வழிவந்த கேண்மை யவர். (807)
 
பொருள்: அன்புடனே பழையதாய் வந்த நட்பை உடையவர், நண்பர் தமக்கு அழிவு தரும் செயல்களைச் செய்தாராயினும் தம் அன்பு நீங்காமல் இருப்பர்.
 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

நமக்கு சொந்தமானவை அனைத்தும் நிச்சயம் ஒருநாள் நம்மை வந்தடையும். 
அப்போது அவற்றை ஏற்றுக்கொள்ளும் தகுதியோடு இருக்க நம்மை நாம் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும்.

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி

Kidney Stone Descriptionஇடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகமாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.
நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு... மேலும்

செவ்வாய், ஜூலை 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 81 பழைமை


எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் 
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. (806)

பொருள்: நட்பின் எல்லையில் நின்றவர், தமக்குத் துன்பம் வந்தபோது உதவியவரின் நட்பை, அவரால் துன்பம் வந்தபோதும் விடார்.

இன்றைய பொன்மொழி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 

உண்மையான எந்த மாற்றமும் வெறுமனே விவாதிப்பதாலும், பேசிக்கொண்டிருப்பதாலும் உருவானதாக சரித்திரம் இல்லை.

திங்கள், ஜூலை 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 81 பழைமை பேதைமை ஒன்றோ பெரும்கிழமை என்றுணர்க 
நோதக்க நட்டார் செயின். (805)

பொருள்: தாம் வெறுக்கத் தக்கனவற்றை நண்பர் செய்தாராயின் அதற்குக் காரணம் அறியாமை என்றோ, மிகுந்த உரிமை என்றோ கொள்ளவேண்டும்.

அமுத வாக்கு

காஞ்சிப் பெரியவர்

மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய்ச் செய்வது பகிரங்கம்.
தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம்.
தான தர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்கும் தெரியும்படி செய்வதாகும். அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும்.
தியானத்திற்கு துணைசெய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், புலனடக்கம், திருடாமை ஆகியவை. இந்த நற்குணங்களால் மனதை அடக்குதல் கைகூடும்.திருடாமை என்பது பிறர் பொருள்மீது ஆசைப்படாதிருப்பதாகும்.
இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். இச்சாதனைகளைச் செய்வதற்கே நாம் சரீரம் என்னும் உடம்பைப் பெற்றிருக்கிறோம். இந்த ஐந்து ஒழுக்க நெறிகளை 'சாமான்ய தர்மங்கள்' என்றே சாஸ்திரங்கள் சொல்கின்றன. சாமான்யம் என்றால் மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டியவை என்பது பொருள். 

ஞாயிறு, ஜூலை 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 81 பழைமைவிழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால் 
கேளாது நட்டார் செயின். (804)

பொருள்: உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால் அதைத் தாமும் விரும்பினவரைப் போல் உடன் பட்டிருப்பவர் அறிஞர்.

இன்றைய பொன்மொழி

டாக்டர் அம்பேத்கர் 

வாழ்க்கை நீளமானதாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பானதாய் இருக்க வேண்டும்.

சனி, ஜூலை 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 81 பழைமைபழகிய நட்புஎவன் செய்யும், கெழுதகைமை 
செய்துஆங்கு அமையாக் கடை. (803)

பொருள்: பழகியவர் உரிமை பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால், அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயனைத் தரும்?

இன்றைய பொன்மொழி

சுவாமி சின்மயானந்தர் 
  • செய்ய வேண்டி இருப்பதைத் திட்டமிட வேண்டும். 
  • திட்டமிட்டதைச் சீரான வகையில் செயல்படுத்த வேண்டும். 
இவை இரண்டும் மனப்பூர்வமாக இணையும்போது வெற்றி சுடர்விட்டுப் பிரகாசிக்கும். வழியில் எத்தனை இடையூறுகள் குவிந்தாலும் வெற்றி உனக்கே!

குருவை மிஞ்சின சீடன்!

"குரு பக்தி’ பற்றி மிகவும் உயர்வாக சொல்லப் பட்டுள்ளது. குரு என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்ய வேண்டியது சீடனின் கடமை. குரு வாக்குக்கு மறுவாக்கு கிடையாது. அப்படியானால், குரு எதையெல்லாம் செய்யச் சொல்கிறாரோ, அதையெல்லாம் சீடன் அப்படியே செய்யத்தான் வேண்டுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், "அப்படி செய்ய மாட்டேன்…’ என்று சீடன் சொல்லலாமா? இதற்கு யக்ஞவல்கியர் என்ற மகானின் கதையைச் கேளுங்கள்…

யக்ஞவல்கியர் என்பவர், தன் மாமாவிடமே யஜுர் வேதம் பயின்று, கங்காதீரத்தில் வேத விசாரம், பிரசங்கம் எல்லாம் செய்து கொண்டிருந்தார். மக்கள் இவருடைய வேத சாஸ்திர ஞானத்தை வெகுவாகப் புகழ்ந்து, பாராட்டினர். தன் சீடன் தன்னை விட பிரபலமாவதைக் கண்ட மாமா (குரு) பொறாமைப்பட்டார்; இருந்தாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை.
அந்த ஊர் அரசனுக்கு ஏதோ ஒரு நோய் கண்டது. அரண்மனை வைத்தியர்கள் எல்லாம் வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை. யக்ஞவல்கியரின் மாமாதான் அரசனுக்குப் புரோகிதர். அதனால், அரசர், இவரை கூப்பிட்டு, "உங்களுக்குத் தான் மந்திர சாஸ்திரங்கள் தெரியுமே… நீங்கள் இந்த நோய்க்கு ஏதாவது பரிகாரம் செய்யுங்கள்…’ என்றார்.

இவரும் தினமும் பரிகாரம் செய்து, ஜலத்தை மந்திரித்து ஒரு சீடனிடம் கொடுத்து அனுப்புவார். இப்படி, 364 சீடர்கள் மூலம் தினமும் தீர்த்தம் அனுப்பி னார்; அரசனும் அதைச் சாப்பிட் டான். ஆனாலும் நோய் தீரவில்லை. அரசனுக்கு இவர் மீது மதிப்பும், மந்திர தீர்த்தத்தின் மீது நம்பிக்கையும் குறைந்தது.

கடைசி நாள் யக்ஞவல்கியரை வைத்து மந்திர ஜெபம் செய்து, அந்த தீர்த்தத்தை அவரிடமே கொடுத்து, அரசனுக்கு அளிக்கும்படி சொன்னார். யக்ஞவல்கியரும் அதை அரசனிடம் கொடுக்கப் போனார். இதைக் கண்ட அரசனுக்கு கோபம் வந்தது. "என்ன… தீர்த்தமா? இது வரை, 364 பேர் சாந்தி செய்து, கொடுத்த தீர்த்தத்தால் ஒரு பயனுமில்லை. நீங்கள் கொண்டு வந்து கொடுத்த தீர்த்தத்தால் மட்டும் என்ன பயன் ஏற்படும்? இதைக் கொண்டு போய் குதிரை லாயத்தில் கொட்டி விட்டு, வீட்டுக்குப் போம்…’ என்றார்; யக்ஞவல்கியருக்கு அவமானமாகி விட்டது. அப்படியே அந்த தீர்த்தத்தை குதிரை லாயத்தில் கொட்டி விட்டு, வீடு வந்து சேர்ந்தார்.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. இவர் குதிரை... மேலும்

வெள்ளி, ஜூலை 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 81 பழைமைநட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்றுஅதற்கு 
உப்புஆதல் சான்றோர் கடன் (802)

பொருள்: நட்பிற்கு அவயவங்களாக இருப்பவை நண்பர் உரிமையோடு செய்வனவாகும். அதனால் அந்த உரிமைக்கு இனியராதல் சான்றோர்க்கு முறைமையாகும்.


இன்றைய பொன்மொழி

வி.எஸ்.காண்டேகர்

கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.

வியாழன், ஜூலை 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 81 பழைமை
பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும் 
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (801)

பொருள்: பழைமை எனப்படுவது யாதென்று வினவினால் அது பழகியவர் உரிமை பற்றிச் செய்யும் செயலைச் சிதைத்து விடமால் காத்து வரும் நட்பாகும்.

இன்றைய சிந்தனைக்கு

பர்மியப் பழமொழி 

துறவிகள் மெலிந்தால் அழகு, விலங்குகள் கொழுத்தால் அழகு, மனிதர்கள் படித்தால் அழகு, மங்கையர் மணந்து கொள்ளல் அழகு.

வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்

ஒரு சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் துர்நாற்றம் அடிக்கும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள்.
காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும். இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.
வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.
மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.
மருத்துவ ரீதியான காரணங்கள்
தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-fluxஎன்பார்கள்.
அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.
வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. Mouth Washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக் கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த மேலும் 

புதன், ஜூலை 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்

மருவுக மாசுஅற்றார் கேண்மை, ஒன்றுஈத்தும் 
ஒருவுக ஒப்புஇலார் நட்பு. (800)
பொருள்: குற்றமற்ற நல்லவரின் நட்பையே கொள்க. தீயோர் நட்பை அவர் வேண்டிய ஒன்றைக் கொடுத்தாவது கைவிடுக.

இன்றைய சிந்தனைக்கு

மாவீரன் நெப்போலியன் 

என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்! நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்குப் போதும்.

பப்பாளி – சத்துப்பட்டியல்

சுவையிலும், சத்து மிகுதியிலும் பப்பாளிப் பழத்திற்கு தனி இடம் உண்டு.
எளிதில் ஜீரணமாகும், மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும்.
பப்பாளியின் அறிவியல் பெயர் ‘காரிகா பப்பாயா’. அதிகபட்சம் 20 அங்குல நீளமும், 12 அங்குல அகல மும் விளையக் கூடியது. இதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்…

மிகக் குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது பப்பாளி. 100 கிராம் பழத்தில் 39 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

பப்பாளியில் கொழுப்புச்சத்து கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் ஏராளம் உள்ளன.

புதிதாக பறிக்கப்பட்ட பப்பாளியில் ‘வைட்டமின் சி’ அதிக அளவில் காணப்படுகிறது. 100 கிராம்பழத்தில் 61.8 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ உள்ளது. இது ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் கிடைப்பதைவிட அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி உடலில் சேர்க்க வேண்டிய ‘வைட்டமின் சி’யில் 103 சத வீதம் 100 கிராம் பப்பாளி உண்பதால் கிடைக்கிறது.

உடலுக்கு தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும், நோய்த்தடுப்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைப்பதிலும் ‘வைட்டமின் சி’ பங்கெடுக்கிறது.

பப்பாளிப் பழத்தில் ‘வைட்டமின் ஏ’, மிகுதியான அளவில் உள்ளது. பீட்டா கரோட்டின், லுட்டின், ஸி-சந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற புளோவனாய்டுகளும் இதிலுள்ளது. தோல் வளவளப்புத் தன்மையுடன் இருக்கவும், பார்வைத் திறனுக்கும் ‘வைட்டமின் ஏ’ அவசியம். இதர புளோவனாய்டுகள் பல்வேறு நோய்களுக்கு காரணமாகும் ஆக்சிஜன் பிரீரேடிக்கல்களை விரட்டுவதில் பங்காற்றுகிறது. புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும்.

போலிக் அமிலம், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயாமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலுக்கு... மேலும்

செவ்வாய், ஜூலை 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்


கொடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை 
உள்ளினும் உள்ளம் சுடும். (799)

பொருள்: துன்பம் வரும்போது விட்டுப் பிரிகின்றவர் நட்பை, இறக்கும் நேரத்தில் நினைத்தாலும் அது அதிகமாக வருத்தும்.இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

திங்கள், ஜூலை 22, 2013

இன்றைய சிந்தனைக்கு

ஜெர்மன் பழமொழி 

அற்பப் பொருளுக்கும் மதிப்பு உண்டு. சிறு ஊசிதான் தையல்காரருக்கு உணவளிக்கிறது.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்


உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க 
அல்லல்கண் ஆற்று அறுப்பார் நட்பு. (798)

பொருள்: சிறுமைக்குரிய எண்ணங்களை நினைத்தல் கூடாது. துன்பம் வரும்போது, விட்டுப் பிரிபவர் நட்பைத் தொடரக் கூடாது.

ஞாயிறு, ஜூலை 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் 
கேண்மை ஒரீஇ விடல். (797)

பொருள்: ஒருவனுக்குச் சிறந்த பேறு என்று கூறப்படுவது அறிவில்லாதாருடைய நட்பினின்றும் விலகி நிற்றலேயாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நல்ல கருத்துக்களுக்குக் கைதட்டுவதை விட அவற்றைக் கடைப்பிடிப்பது சிறந்தது.

சனி, ஜூலை 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்


கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை 
நீட்டி அளப்பதுஓர் கோல். (796)

பொருள்: ஒருவனுக்குக் கேடு வந்தபோதும், அதன் மூலம் அவன் பெறக்கூடிய ஒரு நல்லறிவு உண்டு. அக்கேடு தன் நண்பர்களைத் துல்லியமாய் அளத்தற்குரிய ஓர் அளவு கோலாய்ப் பயன்படும்.


இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும், கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வெள்ளி, ஜூலை 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். (795)

பொருள்: தாம் உலக வழக்கு அல்லாததைச் செய்யக் கருதினால், அழுமாறு சொல்லி விலக்கியும், இடித்துக் கூறியும் உலக வழக்கறிந்து செய்விக்க வல்லாரை ஆராய்ந்தறிந்து நட்புச் செய்க.

இன்றைய பொன்மொழி

அன்னை தெரெசா

தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால் மன்னிப்புக் கொடுப்பதற்கு யோசனை கூடச் செய்யாதே.

வியாழன், ஜூலை 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு (794)

பொருள்: உயர்ந்த குடியில் பிறந்து தன் மீது பிறர் கூறும் பழிக்கு அஞ்சுபவனைச் சில பொருள்களைக் கொடுத்தாவது நட்புச் செய்துகொள்ளல் மிகச் சிறப்புடையதாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

பொய்த் தோற்றங்களால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை காணாது.

திராட்சை பழத்தில் உள்ளவை என்ன? அதன் நன்மைகள் எவை?

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது.
இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது.
நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.

திராட்சை பழத்தின் சத்துக்கள்:

நீர் =85%
கொழுப்பு =7%
மாவுப்பொருள் =10%
புரதம் =0.8%
கால்சியம் =0.03%
பாஸ்பரஸ் =0.02%
இரும்புச்சத்து =0.04%
விட்டமின் A =15%
நியாசின் =0.3%


மருத்துவக் குணங்கள்:

திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.
அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!”.
திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.
* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.
* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.
* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!
* ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை “டயட்”டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.
* “ரெஸ்வெரட்ரால் (Resveratrol)” எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது. ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!
உலக விளைச்சலில் மேலும் 

புதன், ஜூலை 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்குணனும் குடிமையும் குற்றமும் குன்றா 
இனனும் அறிந்துயாக்க நட்பு. (793)

பொருள்: ஒருவனுடைய குணத்தையும், குடிப் பிறப்பையும் குற்றத்தையும், குறைவற்ற சுற்றத்தையும் ஆராய்ந்து அவற்றில் நல்லவனாக இருந்தால் அவனோடு நட்புச் செய்ய வேண்டும்

இன்றைய பொன்மொழி

சோக்ரட்டீஸ் 

திருப்தி என்பது இயற்கையான செல்வம், சொகுசான வாழ்வு என்பது செயற்கையான வறுமை.

முலாம் பழம்/வத்தகைப் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்தும், பலவிதமான வைட்டமின்க‌ளும், நார்ச்சத்தும் நிறைந்துள்ள‌தால் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அதுமட்டுமின்றி இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாகவும் உள்ளது.

மேலும் அவை நெஞ்செரிச்ச‌லைக் குறைக்கவும்  சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. முலாம் பழத்தில் சர்க்கரையின் அளவும், கலோரியும் குறைவு.

அதனால், உடல் எடையைக் குறைத்து அழகான உடலமைப்பு பெற விரும்புகிறவர்களுக்கு ஏற்ற பழமாகவும் இருக்கிறது.

ஏனெனில் இந்த பழத்தில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்தது. இதனால், இதயம் தொடர்பான நோய்களையும், புற்றுநோயையும் தடுக்க ஏற்றதாகவும் உள்ளது.

நன்றி: செல்லியல்.com 

செவ்வாய், ஜூலை 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை 
தான்சாம் துயரம் தரும். (792)

பொருள்: ஒருவனுடைய குணம், செயல் முதலியவற்றைப் பல வழிகளிலும் ஆராய்ந்து நட்புச் செய்யாதவன் முடிவில், தான் இறந்ததற்குக் காரணமாகிய துன்பங்களைத் தானே விளைவிப்பான்.


அமுத வாக்கு

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

படகுக்காரனுக்குக் காலணாக் காசைக் கொடுத்தால் அக்கரையில் கொண்டு போய் விட்டு விடுவான். அந்தச் சின்னக் காரியத்துக்காக காலம் முழுவதும் காட்டிலும் மலையிலும் கடும் தவம் செய்து, "தண்ணீர் மேல் நடக்கும் வித்தையை இதோ அறிந்து கொண்டேன்" என்று நீர் மேல் நடந்து எதிர்க் கரையை அடைவது ஒரு சாதனை அல்ல.

புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு

‘இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடி விடேவண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பைத நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ் பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கைலகைளக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புரூஸ்லீ எவ்விதத் தயக்கமும் இன்றி, சவாலுக்குச் சம்மதித்தார். சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீ யின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது.

‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?’’ -நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது,நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவைலயின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்லி. 25 வயதுவைர ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ்லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக! சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சனத் தம்பதியின் மகனாக, 1940-ல் பிறந்தார் புரூஸ்லி. குடும்பம் சீனா திரும்பியதும், குழந்தை நட்சத்திரமாகப் பல நாடகங்களில் நடித்தார்.

பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக்கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18-வது வயதிலேயே பாக்ஸிங் சாம்பியன்ஷிப் வெற்றி. இதையடுத்து, புரூஸ்லி அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலிஸ் பிரச்சனை ஏற்படேவ,பெற்றோர் அவரை சான்பிரான்சிஸ்கோ அனுப்பினர்.

அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ்லி, வாஷிங்டன் பல்கலைகழகத்தில் தத்துவம் படித்தார். கூடவே, சனத் தற்காப்புக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத் தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் ல-யின் ‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வரேவற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்லி. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க... மேலும் 

திங்கள், ஜூலை 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்


நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின் 
வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு. (791)

பொருள்: நட்பை விரும்பி மேற்கொள்பவருக்கு , ஒருவரோடு நட்பு செய்த பிறகு அவரை விடுதல் இயலாது. ஆதலால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கேடு தருவது வேறு இல்லை.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

செல்வம் வந்ததும் அறிவற்ற மூடன் கூட அறிவாளியாகி விடுகிறான். அவன் வாயிலிருந்து வரும் முட்டாள்தனமான சொற்கள் கூட சமூகச் சட்டங்களாகி விடுகின்றன.

ஞாயிறு, ஜூலை 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 79, நட்புஇனையர் இவரெமக்கு; இன்னம்யாம் என்று 
புனையினும் புல்என்னும் நட்பு. (790)

பொருள்: 'இவர் எமக்கு இத்தன்மையர், யாம் இவருக்கு இத்தன்மையுடையேம்' என்று நட்பின் அளவைப் புனைந்துரைத்தாலும் நட்பு மாறிவிடும்.

இன்றைய சிந்தனைக்கு

ஆபிரிக்கப் பழமொழி 
அன்பின் உறைவிடம் அன்னை. அதைப் புரிந்து கொள்ளாமல் நாம் உலகம் முழுதும் தேடி அலைகிறோம்.

சனி, ஜூலை 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 79, நட்பு


நட்பிற்கு வீற்றிருக்கை யாதுஎனின்; கொட்புஇன்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (789)

பொருள்: நட்பு நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாதெனில் மனவேறுபாடு இல்லாமல் இயலும் இடமெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மௌனம்.

வெள்ளி, ஜூலை 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம்79, நட்பு


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு (788)

பொருள்: உடை நெகிழ்ந்தவனது கை உடனே அதைப் பிடிப்பதற்கு உதவி செய்வது போல, நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்போதே சென்று அதைக் களைவதுதான் நல்ல நட்பு.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

உயர்வு என்பது ஊக்கத்தின் அளவைப் பொறுத்ததே. ஊக்கம் உள்ளவனை அழிக்கவும் முடியாது, அவனது வெற்றியைத் தடுக்கவும் முடியாது.

வியாழன், ஜூலை 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 79, நட்புஅழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு. (787)

பொருள்: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து தடுத்து, நல்ல வழியில் நடக்கச் செய்து அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பம் அனுபவிப்பதே நட்பாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

உடலில் ஊனம் உள்ளவர்களுடன் பழகினாலும், மனதில் ஊனம் உள்ளவர்களுடன் ஒரு காலமும் பழகாதீர்கள்.

புதன், ஜூலை 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 79, நட்பு
முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து 
அகம்நக நட்பது நட்பு. (786)
பொருள்: பார்த்தபோது முகம் மட்டும் மலர நட்புச் செய்வது சிறந்த நட்பாகாது. அன்பினால் அகமும் மலர நட்புச் செய்வதே சிறந்த நட்பாகும்.