செவ்வாய், செப்டம்பர் 30, 2014

வாயைத் திற... வாசம் வரும்! துர்நாற்றத்தைத் துரத்த சூப்பர் டிப்ஸ்

வாய் மணக்கப் பேசுவதற்காகத் தாம்பூலம் தரிக்கும் வழக்கத்தையே உருவாக்கியவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று நம்மில் பலரைப் படுத்தி எடுக்கும் பிரச்னைகளில் முக்கியமானது... வாய் துர்நாற்றம்!
 யாரிடமும் சகஜமாகப் பேச முடியாது. யாருடனும் நெருங்கிப் பழக முடியாது. குற்ற உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் தலை தூக்கும். வெளிநாடுகளில், இந்தப் பிரச்னை விவாகரத்துவரைகூட போவது உண்டு. வாய் துர்நாற்றத்தைத் தவிர்த்து மணக்க மணக்கப் பேசுவது எப்படி என்பதுபற்றி இங்கே பேசுகிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

பல் மருத்துவர் யஷ்வந்த்: ''வாய் துர்நாற்றத்தை (Bad Breath ) 'ஹாலிடோஸிஸ்' (Halitosis) என்று குறிப்பிடுவர். சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, சாப்பிட்ட பின் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைதான் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம். நாம் சாப்பிடும்போது பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும் உணவுத் துகள்கள் வாய் கொப்பளிக்கும்போதோ அல்லது பல் துலக்கும்போதோ வெளியேறவில்லை என்றால், அழுகிப்போய் கெட்ட வாடை வீசத் தொடங்கும். அந்த உணவுத் துகள்களில் கந்தகம் (சல்பர்) உருவாவதுதான் துர்நாற்றத்துக்குக் காரணம். பல் சொத்தை இருந்தாலும் இந்த நாற்றம் ஏற்படும்.
தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர். சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர். இரண்டுமே தவறான விஷயங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, அழுத்தமே இல்லாமலோ பல் துலக்கக் கூடாது. மிதமான அழுத்தம் கொடுத்து (படத்தில் காட்டியிருப்பது மாதிரி) குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும். ஜெல் உள்ள பற்பசையைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. அதில் உள்ள சிலிக்கா பவுடர், பல்லின் எனாமலைப் பாழாக்கிவிடும். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.
தினமும் ஃபிளாஸ்ஸிங் (Flossing) முறை மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை அகற்றலாம். அதாவது, இரண்டு பற்களுக்கும் இடையில் (படத்தில் காட்டி இருப்பதுபோல) நூலைச் செலுத்தி மேலும் கீழுமாக இழுக்கும்போது, அங்கு உள்ள உணவுத் துகள்கள் வெளியேறிவிடும். எல்லாவிதமான நூலையும் இதற்குப் பயன்படுத்த முடியாது. இதற்கெனவே பிரத்யேகமாக உள்ள டெண்டல் ஃபிளாஸ் (Dental Floss) என்ற நூலை மட்டுமே பயன்படுத்தி பிளாஸ்ஸிங் செய்ய வேண்டும். தரமான மவுத் வாஷைப் பயன்படுத்தியும் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
சில நேரங்களில் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டாலும் துர்நாற்றம் ஏற்படலாம். தொற்று ஏற்பட்டு புண் உருவாகும்போது, அதில் உள்ள சீழ் நாற்றத்தை ஏற்படுத்தும். வருடத்துக்கு ஒரு முறையாவது பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னை வராமல் தவிர்க்க முடியும்.''

இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களுக்கான மருத்துவத்தின் துறைத் தலைவர் (சென்னை மருத்துவக் கல்லூரி) சந்திரமோகன்:
''உணவுக் குழாயில் நோய்த் தொற்று ஏற்படும்போது துர்நாற்றம் உண்டாகலாம். உணவுக் குழாயும் இரைப்பையும் சேரும் இடத்தில் சுருக்குத் தசை இருக்கும். இந்தத் தசை இறுக்கமாக இல்லாமல், தளர்வாக இருந்தால், இரைப்பையில் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்கு வரும். இப்படி வருவதை நெஞ்சு எரிச்சல் என்பர். இதுபோல் நெஞ்சு எரிச்சல் வரும்போது வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, புகை மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் அல்லது வயிறு முட்டச் சாப்பிடுபவர்களுக்கு சுருக்குத் தசை தளர்வாக இருக்கும்.
மசாலா நிறைந்த உணவுகள் மற்றும் வறுத்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடும்போது, ஜீரணம் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும். நீண்ட நேரம் வயிற்றுக்குள் மசாலாப் பொருட்கள் இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படலாம். பொதுவாக, இரைப்பையில் இருந்து உணவு முன் குடலுக்குப் போக இரண்டரை முதல் நான்கு மணி நேரம் ஆகும். இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவு முன் குடலுக்குப் போகாமல் இரைப்பையிலேயே இருந்தாலும்... மேலும்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை 
மாயும் என் மாயா உயிர். (1230)
 
பொருள்: பிரிவுத் துன்பத்தால் மாயாமல் இருந்த என் உயிர், காதலரை நினைந்து மயங்குகின்ற இந்த மாலை நேரத்தில் மாய்கின்றது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் உன் பேச்சில் அதன் வாசனை தெரியும்.

திங்கள், செப்டம்பர் 29, 2014

அசட்டையாக இருப்பவரா நீங்க?

இனி உஷார்

“சே, இவ்ளோ தானா… கண்டிப்பா இனி பாலோ பண்ணனும்…ன்னு நினைப்பீர்கள். ஆனால், அசட்டையாக இருந்து விடுவீர்கள், இனி அப்படி வேண்டாமே. கொழுப்பு எவ்ளோ: ஆண்களின் மொத்த எடையில், 12ல் இருந்து 18 சதவீதம் வரை கொழுப்பு இருக்கலாம்; அது போல பெண்களுக் குள்ள மொத்த எடையில் 19ல் இருந்து 26 வரை இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் கவனிக்க வேண்டும். ஒரு நாள் உணவில் 30 -40 கிராம் தான் கொழுப்பு நம் உடலில் சேரும் படி சாப்பிட வேண்டும். அதனால், தான் அதிக சதவீதம், கொழுப்புள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

லிபிட் ப்ரொபைல்: முன் பெல்லாம் கொலஸ்ட்ரால் என்றாலே என்னவென்றே தெரியாது. இப்போது இதய பாதிப்பு வருவதை சொல்ல, கொலஸ்ட்ரால் மட்டுமல்ல லிபிட் ப்ரொபைல் சோதனை முக்கியம். ரத்தப்பரிசோதனை செய்து கொண்டால், கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் எல்லாம் தெரிந்து விடும்.

ரத்தப்பரிசோதனையில், ட்ரைகிளிசரைட்ஸ் என்பது கொழுப்பு அளவை காட்டிக்கொடுக்கும். இது அதிகமாக இருந்தால் கொலஸ்ட் ரால் அதிகம் இருக்கிறது என்று பொருள்.

பி.எம்.ஐ., 30: பாடி மாஸ் இன் டெக்ஸ் என்று சொல்லப்படும் பி.எம்.ஐ., ஒருவரின் ஒபிசிட்டி, அதிக எடையை காட்டிக்கொடுக் கும். உடல் எடை எவ்வளவு கிலோ என்பதை பார்த்து, அதில் இருந்து உயரம் அளவை மீட்டரில் வகுக்க வேண்டும்.

பி.எம்.ஐ., 22.9ஐ தாண்டக் கூடாது. அதிக பட்சம் 30க்கு இப்படி, அப்படி என்று இருந்தால், டாக்டரிடம் காட்டி விடுவது தான் நல்லது. இதய பாதிப்பு, சர்க்கரை நோய் என்ற பலவற்றுக்கும் இது தான் அடித்தளம்.

ஐ.ஜி.ஐ., உணவு: பச்சைக்காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவு பொருட்கள் தான் ஆரோக்கியமான உணவு வகைகள்.”லோ கிளிசமிக் இன்டெக்ஸ்’ (ஐ.ஜி.ஐ.,) உணவுகள் தான் மிக நல்லது. பார்லி, சப்பாத்தி, சேமியா, மக்காச்சோளம், கோதுமை பிரட், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தக்காளி, பட்டாணி போன்ற தானியங்கள் ஆகியவை நல்லது.

“ஹை கிளிசமிக் இன்டெக்ஸ்’ (எச்.ஐ.ஜி.,) எனப்படும், பைனாப் பிள், உலர்ந்த திராட்சை, உருளை, பரங்கி, சக்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவை தவிர்க்க வேண்டும். ரீபைண்ட் ஆயிலை தவிர்க்க வேண் டும்; சனோலா ஓகே.
மொடாக்குடியரா: என்னவோ கற்பனை செய்யாதீங்க, காபியில் மொடாக் குடியரா? அதை குறைத்துக் கொள்ளுங்களேன். எல்.டி.எல்., கொழுப்பு அதிகமாகும்; கால்சியம் குறையும். மிதமான காபி குடியர்களுக்கு பிரச்னை இல்லை. ஆன்டி ஆக்சிடென்ட் கிடைக்கிறது. அது மிகவும் நல்லது.
காபி பற்றி நல்ல செய்தியே இல்லையா? இருக்கிறது; நரம்பு தளர்ச்சி பிரச்னை வராது; பர்கின்சன் நோய் எட்டிப்பார்க்காது. டயபடிக்ஸ் உள்ளவர்கள் கூட காபி குடிக்கலாம், டாக்டர் ஆலோசனைப்படி.

எவ்ளோ குடிக்கலாம்: உடலில் 60 சதவீதம் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. உடலில் தண்ணீர் வற்றிப்போனால் ஆபத்து தான். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. வியர்வை, மூச்சு வழியாக ஒரு லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் 20 சதவீதம் தண்ணீர் கிடைக்கிறது. பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது, ஆண்கள் 13 கப், பெண்கள் ஒன்பது கப் குடிக்க வேண்டும்.

தூக்கம் வரலியா: பல விஷயங்களால் தூக்கம்... மேலும்
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி,  இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும். - See more at: http://www.tamilkathir.com/news/13155/58//d,full_article.aspx#sthash.S7IPIB5E.dpuf
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி,  இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும். - See more at: http://www.tamilkathir.com/news/13155/58//d,full_article.aspx#sthash.0mVkkvat.dpuf
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி,  இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும். - See more at: http://www.tamilkathir.com/news/13155/58//d,full_article.aspx#sthash.0mVkkvat.dpuf
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி,  இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும். - See more at: http://www.tamilkathir.com/news/13155/58//d,full_article.aspx#sthash.0mVkkvat.dpuf
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி,  இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும். - See more at: http://www.tamilkathir.com/news/13155/58//d,full_article.aspx#sthash.0mVkkvat.dpuf
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி,  இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும். - See more at: http://www.tamilkathir.com/news/13155/58//d,full_article.aspx#sthash.0mVkkvat.dpuf
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி,  இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும். - See more at: http://www.tamilkathir.com/news/13155/58//d,full_article.aspx#sthash.0mVkkvat.dpuf

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. (1229)
 
பொருள்: அறிவை அழிக்கவல்ல மாலை நேரம் எங்கும் படரும்போது இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

இன்றைய பொன்மொழி

ஆரோக்கியப் பழமொழி 
healthy-living-300x300 

தண்ணீர்தான் உணவுகளின் அரசன். 
முறையாகப் பருகும் தண்ணீர் பல நோய்களுக்கு மருந்தாகும்.

ஞாயிறு, செப்டம்பர் 28, 2014

உயிருக்கு உயிரான கிட்னியை (சிறுநீரகங்களை) பாதுகாப்பது எப்படி?

இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டுஅங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.
அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரகவியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும்தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகமாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகவியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.
ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.
நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்.

காரணங்கள்:
  • சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள்,
•வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல்
•சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.
 
அறிகுறிகள்:

ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன:

•உடல் எடை இழப்பு
•குமுட்டல் வாந்தி
•பொதுவான உடல்நலக்குறைவு
•சோர்வு
•தலைவலி
•அடிக்கடி ஏற்படும் விக்கல்
•உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)


பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன:

வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
•இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
•சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
•வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
•மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
•தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
•தோலில் வெள்ளைநிற படிகங்கள்
•கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
•அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
•அதிக தாகம் ஏற்படுதல்
•தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
•நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
•சுவாசம் நாற்றம் எடுத்தல்
•உயர் இரத்த அழுத்தம்
•பசியின்மை


எப்பொழுது மருத்துவ நிபுணரை அணுகுவது?

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருப்பின் மருத்துவரை அணுகலாம். அன்றாடம் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலே மருத்துவரை அணுகலாம்.

தடுப்புமுறை:
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரத்தத்திலுள்ள சர்’க்கரை அளவினை மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதின் மூலமும் புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்துவிலகியிருப்பதன் மூலமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதினை தடுக்கலாம்.

சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சிறுநீரகம் என்பது முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் பாதி மூடப்பட்டுள்ள அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும். நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது. இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப்பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்யிறமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம். சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் மூலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்துகொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.

சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது. திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும்.

இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும். சிறுநீரகம் கழிவுப் பொருள்களைவெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும். பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது. பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம். கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள நீர் பருகக் கூடாது இறைச்சி, மீன், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது. மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த மூலிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.


"அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை".
பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது.


இது உண்மைதானா?
நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.

நன்றி:சி .ஆர்.இப்ராகீம் மற்றும் 'சிந்திக்கவும்' நெட் 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

அழல்போலும் மாலைக்குத் தூதுஆகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. (1228)  
 
பொருள்: ஆயனுடைய(ஆடு மாடு மேய்ப்பவன்) புல்லாங்குழல், நெருப்பைப் போல் வருத்தும் மாலைப் பொழுதிற்குத் தூதாகி காதல் நோயில் என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.

இன்றைய பொன்மொழி

மேன்சியஸ்
நீங்கள் அன்பு காட்டும் மனிதர்கள் உங்களிடம் சிநேகமாக இல்லையென்றால், உங்கள் அன்பை ஆராயுங்கள்.உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்கள் , கீழ்ப்படியாமல் நடந்து கொண்டால் நீங்கள் இட்ட கட்டளையைப் பற்றி சிந்தியுங்கள்.  நீங்கள் காட்டுமளவு மரியாதையைப் பிறர் காட்டவில்லையானால் உங்கள் மரியாதையை நுணுகிப் பாருங்கள். நீங்கள் எது செய்து வீணானாலும் காரணத்தை உங்களுக்குள்ளேயே தேடுங்கள் .

சனி, செப்டம்பர் 27, 2014

ஓட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

காலை உணவு வேளையில் ஓட்ஸ் சாப்பிடுவது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? ஆமாம். இது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. உங்கள் உணவில் தினசரி 100 கிராம் ஓட்ஸ் சேர்த்துக் கொண்டால் 2 மாதத்தில் ஒன்றரை கிலோ வரை எடை குறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியில் நிரூபணம் ஆகியுள்ளது.

ஆனால் சிலருக்கு ஓட்ஸ்சை சரியாக சமைத்து சாப்பிடத் தெரிவது இல்லை. இப்படித்தான், என் தோழி ஒருத்தி சிறிது குண்டாக இருப்பாள்.
ஒரு முறை அதைப் பற்றி கூறி மிகவும் வருத்தப்பட்டாள். ‘நான் தினமும் ஓட்ஸ் சாப்பிடுகிறேன் ஆனால் உடல் எடை ஏறுகிறதே தவிர குறையவில்லை’ என்று கூறினாள்.

ஓட்ஸ்சை எப்படி சமைத்து சாபிடுகிறாய்? என்று கேட்டேன்….
‘ஓட்ஸ்சை பாலுடன் நன்கு வேகவைத்து, அதனுடன் சர்க்கரை மற்றும் சிறிது ஏலக்காய் சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுவேன்’ என்று கூறினாள்.
எனக்கு சிரிப்புத்தான் வந்தது. தினமும் நன்றாக பாயசம் செய்து கும்மென்று சாப்பிட்டு விட்டு, உடல் எடை ஏறுகிறதே என்று வருத்தப்பட்டால் எப்படி?
ஓட்ஸ் சமைக்கும் பொழுது அதனுடன் அதிக கொழுப்புத் தன்மை உடைய எதையும் சேர்க்காதீர்கள். வெறும் நீரில் அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி: asathal.com

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி
மாலை மலரும்இந் நோய். (1227)
 
பொருள்: ந்தக் காம நோய், காலையில் அரும்பாய்த் தோன்றி, பகற் பொழுதில் பேரரும்பாய் வளர்ந்து மாலைப் பொழுதில் மலர்கிறது.  

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 
வாழ்க்கை என்பது வானத்து நிலாவொளி  மாதிரி. சில சமயம் இருட்டு, சில சமயம் முழு நிலவு.

இந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்

crime against women
இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படும் ஒருவகை மனநிலைக்கு ஆளாகிறார்கள் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று. அதென்ன ஸ்டாக்ஹோம் சின்ரோம்?
கடத்தப்பட்டவருக்கும் கடத்தல்காரருக்கும் இடையே ஏற்படும் ஒரு வகையான நேர்மறையான உறவே ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படுகிறது. 1973ல் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளைக்காரர்கள், 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 6 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட அந்த பிணைக்கைதிகள், தங்களை பிடித்து வைத்திருந்த கொள்ளையர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க மறுத்ததோடு, அவர்களுக்கு எதிரான வழக்குக்கு பொதுமக்களிடன் பணம் வசூலித்து கொடுத்தனர். தங்களை கடத்தியவர்கள் மீது கடத்தப்பட்டவர்கள் காட்டும் இந்த கரிசன மனநிலையை குறிக்க அதன் பின்னர் 'ஸ்டாக்ஹோம் சின்ரோம்' என பிரபல உளவியலாளர் நீல்ஸ் பெஜொருட் பெயரிட்டார்.
இதற்கு சமீபத்திய உதாரணத்தைச் சொல்ல முடியும் ஈராக்கில் தங்களை கடத்தி வைத்திருந்த தீவிரவாதிகள் பற்றி அவர்களிடமிருந்து தப்பிய செவிலியர்கள் சொன்ன கருத்துக்கள் இந்த மனநிலையில் சொல்லப்பட்டவைதான். தங்களை தீவிரவாதிகள் நன்றாக நடத்தியதாகவும் நேரம் தவறாமல் உணவளித்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். பவரை கொன்று குவித்தவர்களாக அவர்கள் இருந்தபோது தங்களை நன்றாக நடத்தினார்கள் என்று அவர்கள் சொன்ன கருத்து ஒருவகையான இக்கட்டான மனநிலையில் தோன்றுவது என்கிறார் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
founder-img2‘பலவிதங்களில் மனதில் குடிகொள்ளும் பயம், பதட்டம், இனி உயிர் வாழ்வோமா என்கிற கேள்வி இதையெல்லாம் சேர்ந்து கடத்தப்பட்டவர்கள் ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். கெட்டதிலே நல்லதைப் பார்க்கும் விதமாக இவர்களுக்கு தங்களை கடத்தியவர்கள் மீதே ஒரு நேர்மறையான தாக்கம் உண்டாகும். அவர்களிடம் உள்ளதை தேடி ஆரம்பிப்பார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணத்தை நம் அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலேயே பார்க்க முடியும். கணவன் எப்படிப்பட்ட வன்முறையாளனாக இருந்தபோதும் அவனிடம் உள்ள நல்லதைப் பற்றி பேசுவாள் அந்த மனைவி. இது ஒருவகையில் உயிர்வாழ்தலுக்கான கட்டாயத்தில் வரும் எண்ணம். இதுவும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்தான்!
வீடுகளில், அலுவலகங்களில் என்று  தினசரி வாழ்க்கையில் ஸ்டாக்ஹோம் சின்ரோம் உள்ளவர்கள் நிறையவே பார்க்க முடியும். இந்த பிரச்னையிலிருந்து மீள முடியாது, இனி வாழ்வதற்கு வேறு வழியில்லை, மிகவும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு தப்பிக்கவே முடியாது என நினைப்பவர்கள் தங்களை துன்பப்படுத்துபவர்கள் மீது அன்பு கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தவனையே திருமணம் செய்துகொண்ட சம்பவங்கள் உலகம் முழுக்க நடந்ததுண்டு. இதுவும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்தான்!” என்கிறார் பிருந்தா ஜெயராமன்.

நன்றி:fourladiesforum.com

வெள்ளி, செப்டம்பர் 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். (1226)
 
பொருள்: மாலைப்பொழுது என்பது பிரிந்திருக்கும் காதலருக்குக் காம நோயை ஏற்படுத்தி இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலருடன் நான் இன்பமாய் இருந்தபோது அறியவில்லை.

இன்றைய சிந்தனைக்கு

முகம்மது நபி
 

பிறருடைய நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள். பிறர் உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் நீங்கள் பிறருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.

வியாழன், செப்டம்பர் 25, 2014

ஆழ்மனதின் அற்புத சக்திகள்...!

மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன.

பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர்(Franz Anton Mesmer) என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதையும் உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். அதுவே காலப் போக்கில் மெஸ்மரிசம் எனும் உளவியல் சிகிச்சை முறையாக வளர்ச்சி பெற்றது.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing ) போன்ற சிகிச்சைகள்பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர்.

அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில்குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (னுச. துயஅநள நுளனயடைடந) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டுமுதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன.இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார்.

இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம். இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவேஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மன சக்திதான் நாம் உறங்கும் போதும்மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்சன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம். ஆழ்மனதை முறையாக இயக்குவதற்கு தியானமும், மூச்சுப் பயிற்சியும் ஈடு இணையில்லாமல் கைகொடுத்து உதவுகின்றன.
நன்றி: thinakaran.lk

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. (1225)
 
பொருள்: காலைப் பொழுதிற்கு நான் செய்த நன்மை தான் என்ன? என்னைக் காம நோயால் வருத்துகின்ற மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீவினை என்ன?

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

பணம் உண்மையான செல்வமல்ல;
ஒருவனிடம் உள்ள உண்மையான செல்வம் அவனது உயர்ந்த ஒழுக்கமே.

புதன், செப்டம்பர் 24, 2014

வருஷம் ஆனாலும் வயது ஏறாத இளமைக்கு உத்தரவாதம்.முத்தான 25 வழிகள்!

ஆக்கம்:கடலூர் அரங்கநாதன்.
யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ''சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க' என்று பெருமூச்சுவிடாத பெண்களோ, ''சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு' என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன? 

அவர்களுக்காக மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணருமான
டாக்டர்.

1 'ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வரவேண்டும். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம்,
செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

2 நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.

3 மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.

4மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும். கரிசலாங்கண்ணிக் கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள், தேமல் போன்றவற்றைப் போக்கி, மூப்பைக் குறைக்கும்.

5காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு!

6 ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.

7 ''மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது'' என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும், காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும். சரும நோய்கள் சரியாகும். 



8 ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.

9 நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.

10 அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

11 வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்கவைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

12 சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.

13 காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்தாலே போதுமானது.

14 முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.

15 குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.

16 வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம். தலைக்கு சீயக்காய்த்தூள் உபயோகிப்பதும், வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.




17 செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.

18 கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது. அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக 'ஃபேர்னெஸ் க்ரீம்’களை வாங்கிப் பூசுபவர்களுக்கு, தோல் சுருக்கம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது.

19 தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதில், முதல் இடம் பிராணாயாமத்துக்குத் தான்(மூச்சுப் பயிற்சி). ஹார்மோன் செயல்பாடுகளைச் சீராக்க, பிராணாயாமத்தைவிடச் சிறந்த மருத்துவம் இல்லை.

20 தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுச் செய்யும் நாடிசுத்தி பிராணாயாமம், சீத்காரி மற்றும் சீதளி போன்ற பிராணாயாமப் பயிற்சிகள், மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கு நல்ல மருந்து.



21 உடல் 'ரிலாக்ஸேஷனு’க்கு சவாசனம், மக்ராசனம் போன்ற யோகப் பயிற்சிகள் மிகச் சிறந்தவை. அலுவலகத்திலிருந்து வந்ததும், கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் படுத்து எழுந்தால், அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் தியானம் இளமையைத் தக்கவைக்கும்.

22 யோகாசனம் செய்ய முடியாதவர்கள், நீச்சல் பயிற்சி அல்லது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியை, 'கடனே’ என்று செய்யாமல் ரசித்து, அனுபவித்துச் செய்தால் பலன் இன்னும் அதிகம்.



23 இஸ்லாமியர்கள் தொழுகையின்போது கால்களை மடக்கி அமரும் நிலைதான் வஜ்ராசனம். 'வஜ்ரம்’ என்றால் வைரம் என்று பொருள். வைரம் பாய்ந்த கட்டையாக நம் உடலை வைத்திருக்க, வஜ்ராசனத்தை விடச் சிறந்த பயிற்சி இல்லை. சாதாரணமாக வீட்டில் அமரும்போதும், வீட்டில்
மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், நாளிதழ் வாசிக்கும்போதும், வஜ்ராசனத்தில் இருக்கலாம். தினசரி 15 நிமிடங்கள் இருந்தால் போதும்.

24 வீட்டில் இடம் இருந்தால், பூச்செடிகள் வளர்க்கலாம். அந்த நறுமணம்கூட மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துதான்.

25 புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டால், இளமை உங்களை விட்டு எங்கே போகப்போகிறது?

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். (1224)
 
பொருள்: காதலர் அருகே இல்லாதபோது, கொலைக் களத்தில் பகைவர் வருவதுபோல் மாலைப்பொழுது என் உயிரைக் கவர வருகிறது.

இன்றைய சிந்தனைக்கு

கிருஷ்ண பரமாத்மா
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul 

"புத்தகங்கள் பல படித்திருப்பவனைப் பண்டிதன் என்று சொல்லுவது உலக வழக்கம். ஆனால் பண்டிதனுக்கு நான் தரும் இலட்சணம் வேறு. இயற்கையின் நடைமுறையை உள்ளபடி அறிந்திருப்பவன் பண்டிதன் ஆவான். சூரியன் தோன்றுவதையும் மறைவதையும் குறித்து யாரும் வருந்தாதிருப்பது போன்று பிறப்பு, இறப்புத் தத்துவத்தை அறியும் 'ஆத்மஞானி' சாவுக்கு வருந்துவதில்லை. வருத்தப்படுதலில் அவனுக்கு அர்த்தமில்லை. எதைக் குறித்தும் மனம் தளராமை பண்டிதனுடைய போக்கு"

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்...

ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர். 

தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும்:

ஓவியம்: இளையராஜா
  •  `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.
  •  தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
  •  காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
  • * விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது.
  • * எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.
  • * திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.
  • எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.
  • ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
  • படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
ஓவியம்: இளையராஜா 
  • அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.
  • வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.
  • கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
  • இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ.
நன்றி: இருவர் உள்ளம் 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்  
துன்பம் வளர வரும். (1223) 
 
பொருள்: ஒரு சமயம் குளிர்ச்சியோடு காட்சியளிக்கும் மாலை நேரம், பிரிவுத் துயர் கொண்டதால் இன்று வருத்தம் தோன்றித் துன்பம் வளரும்படியாக வருகின்றது.