தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும்:
ஓவியம்: இளையராஜா |
- `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.
- தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
- காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
- * விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது.
- * எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.
- * திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.
- எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.
- ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
- படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
ஓவியம்: இளையராஜா |
- அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.
- வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.
- கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
- இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
நன்றி: இருவர் உள்ளம்
1 கருத்து:
உண்மையில் பெண்கள் மகிழ்ச்சியாய் இருந்தாலே வீடும் நிம்மதியாய் இருக்கும் .இல்லையென்றால் தெரியுமே.....
கருத்துரையிடுக