வியாழன், செப்டம்பர் 04, 2014

எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறீர்களா? ஆபத்து காத்திருக்கிறது!

ஆக்கம்: சக்திவேல் பாலசுப்ரமணியம், சென்னை.
எவ்வளவோ விசயங்கள் மனதில் வைத்திருந்தேன்; ஆனாலும் ஒன்றிலும் அல்லது அதிகப்பட்ச வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தமோ ஆதங்கமோ உங்களுக்குள் உள்ளது என்றால் இந்த கீழ்க் கண்ட கேள்வியை உங்களை நோக்கி கேட்கத் தகுதிபெற்று இருக்கிறீர்கள் அல்லது கேள்வி கேட்கப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

‘நான் ஆர்வத்துடன் என் எண்ணங்களை செயல்படுத்தினேன் அல்லது செயல்படுத்துகிறேன் என்பது உண்மையா?Daily Poetry and Stories Portal - Where There is an Ambition, there will Always be a Way to get Things Doneகேள்விக்கு முன்னே உள்ள வரிகள் அனுபவமாக இருந்தால் நிச்சயம் கேள்விக்கு பதில் ‘இல்லை’ என்றுதான் இருக்கும். மனதில் ஆர்வம் ஆழமாக வேரூன்றினால் நிச்சயமாக ‘வெற்றி’ விசுவரூபமாகத்தான் வெளிப்படும். நன்றாக ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஆர்வக்கோளாறு ஒரு போதும் வெற்றியின் ஆரம்பத்தை அசைப்பதுவுமில்லை தடை போடுவதுமில்லை; ஆர்வமின்மைதான் வெற்றியின் ஆரம்பத்தை அழித்துவிடுகிறது. ஆதி இல்லாமல் அந்தம் ஏது? சில உண்மை நனவுகளை நினைவு கொள்ளுங்கள். ஆர்வம் எப்படி வெற்றியின் ஆரம்ப ஆதாரமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாக புரியும்.
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்.மனிதனாகப் பிறந்தேன் வாழத்தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்தது. கோடிக்கணக் கான மனிதர்களை போல நானும் வாழ்க்கை பயணத்தை கடத்துவேன் என்ற எண்ண மில்லாமல் என்னை ஏற்றுக்கொண்ட இந்த உலகத்திற்கு எதையாவது செய்வேன் என்றுகூட நினைக்காமல் இதை கண்டுபிடிப்பேன் என்றஆழ்ந்த ஆர்வத்துடன் ஒருவர் செயல்படுத்த முனைந்தார். வெற்றியும் பெற்றார் தாமஸ் ஆல்வா எடிசன். அவர்களின் ஆர்வம் எத்தனை கண்டுபிடிப்புகளுக்கு ஆரம்பமாக இருந்து இன்றும் பிகாசித்துக்கொண்டு இருக்கின்றன.

எனக்கு எதற்கு இந்த வேண்டாத முயற்சி என்று நினைக்காமல் ஒருவர் நடந்தார்… ஏறினார்… ஏறினார்… பூமியின் உச்ச உயரத்திற்கே. ஆமாம், நண்பர்களே! பீட்டர் ஹேப்பர் என்ற ஆஸ்திரேலியர் முதன் முதலில் ஆக்சிஜன் குடுவை இல்லாமலே எவரெஸ்ட் சிகரம் ஏறினார் என்றால், அந்த வெற்றி அவரின் ஆர்வத்தினால் விளைந்தது தானே.

தத்தி தத்தி இந்த உலகில் நடக்க முயற்சி செய்த ஒரு குழந்தை மனிதனாக வளர்ந்த பிறகு மனிதனின் மகத்தான காலடி இதுதான் என்று நிலவில் முதன்முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரின் ஆர்வத்தில் உருவானதுதான் மாபெரும் சரித்திர விஞ்ஞான சாதனை.

நான் இதைச் செய்வேன் என்று வீட்டை விட்டு ஒரு பெண்மணி போக லாமா? முடியுமா? என்ற விவாதம் இப்போது கூட இருக்கத்தான் செய்கிறது. ஆர்வம் ஒரு பெண்மணியைத் தூண்டியது. கடைக்குச் சென்று கத்தரிக்காய் வாங்க அல்ல கடல்மார்க்கமாக தன்னந்தனியாக உலகைச் சுற்றிப் பயணித்தார் என்பது ஆர்வத்தின் வலிமை தானே.

போர் என்றால் பலவகை படைகள், வீரர்கள், கத்தி, கூர்வேள், துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களுடன் மட்டுந்தான் வெற்றி பெற முடியும் என்றகருத்தை தூள்தூளாக்கினார் ஒருவர். அந்த மனிதனின் அறப்போர் ஆர்வம் உலகை வியக்கத்தில் ஆழ்த்தியது. வெற்றி பெற்றார். அவர் மகாத்மா ஆவார். ஆமாம், அறப்போரில் நாம் சுதந்திரம் பெறமுடிந்தது.

பார்க்கவே முடியாத ஒருவரால் இயற்கை அழகை பார்க்க முடிந்த, நம்மை ரசிக்க தூண்டும் வகையில் கவிதையில் தன் கற்பனையில் விவரிக்க முடிந்தது கவிஞர் டென்னிஸ் அவர்களின் ஆர்வந்தானே அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது.

காது கேட்காத இயல்பு கொண்ட ஒருவர் நம் காதுகளுக்கு இனிய இசை வழங்கினார். ஒரு மனிதனின் இசை ஆர்வம் தன் இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெறமுடிந்தது என்றால் அது மைக்கேல் #பீத்தாவோன் என்ற இசை அறிஞரின் ஆர்வம் என்பதில் சந்தேகம் என்ன?!

பார்க்கத்தான் கண்கள், ஆனால் அதன நோக்கமிழந்த கண்களுடனும் கேட்காத காதுகளுடனும் ஒருவர் பிறந்தார். பின் பார்வையற்றமனித இனத்திற்கே கண்களாக மாறிப்போன ஹெலன் ஹெல்லரின் ஆர்வம் தான் அவரது தன்னம்பிக்கையை வளர்த்து வெற்றிபெறவைத்தது என்பதில் ஆர்வத்தின் அவசியம் தெளிவாகிறது.

படிக்கவே தெரியாத ஒரு நடிகர் பக்கம் பக்கமாக வசனங்களை தனக்கென்ற தனிப் பாணியில் உச்சரித்தப் பேசி இன்றுங்கூட எத்தனை நடிகர்களும் மற்றவர்களும் அவரை பின்பற்றி தொழில்புரிகிறார்கள் என்றால் அது நடிகவேல் எம்.ஆர். ராதா தன் நடிப்பின்பால் இருந்த ஆர்வம் தானே.

நண்பர்களே, இப்படி நிறைய உதாரணங்கள் இந்த உலகில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆர்வத்தின் சக்தியை திரு. மயில்சாமி அண்ணாதுரை, திரு. ஏ.ஆர். ரஹ்மான் என நம் கண்முன் நிதர்சனமாக காணமுடியும்.

ஒரு சுயசோதனை : நீங்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பவரா?

1.எதற்கெடுத்தாலும் வேண்டாம் (வேண்டாம் வேண்டாம் என்பதல்ல) என்று சொல்லுபவரா?

2. ஏதாவது, எப்போதாவது, எப்படியாவது போன்றவார்த்தைகளை அதிக அளவில் பயன் படுத்துபவரா?

‘ஆம்’ என்பது உங்களது பதிலாக இருக்கிறது என்றால் ஆர்வமின்மை உங்களை தாக்குகிறது அல்லது தாக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே மேற்கண்ட வார்த்தைகளை முடிந்தவரை தவிர்த்து ஒன்றை குறிப்பிட்டு அது வேண்டாம் இது வேண்டாம் என்றோ ஒரு குறிப்பிடும் நேரத்தை குறிப்பிட்டு சொல்லி பழகியோ இந்த வழியில்/ வகையில் என்பது போன்ற வார்த்தை களை மாற்றாக பயன்படுத்தினால் மனதில் ஆர்வம் தொடங்கும். இது ஒரு சின்ன உதாரணம் தான். ஆக மொத்தத்தில் எல்லா வெற்றிகளும் ஆர்வத்தில்தான் ஆரம்பிக்கின்றன என்கிறபோது அந்த ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் நாம் ஏன் நம் வெற்றியை ஆரம்பிக்கக்கூடாது? ஆர்வத்துடன் ஆரம்பிப்போம்

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல அறிவுரை. எல்லோரும், குறிப்பாக இளைஞர்கள், மனதில் இருத்த வேண்டியவை.

கருத்துரையிடுக