வியாழன், ஜூலை 31, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்

கொடியார் கொடுமையின் தாம்கொடிய, இந்நாள் 
நெடிய கழியும் இரா. (1169)
 
பொருள்: பிரிவுத் துயரால் வருந்தும் போது, மிக நீண்டது போலக் கழிகின்ற இந்த இரவுப் பொழுது என்பது என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் காதலனை விட மிகக் கொடியது.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அவன் நின்றாலும், ஓடினாலும் யாருக்கும் பயனில்லை.

இதோ மகிழ்ச்சிக் கதவின் திறவுகோல்(சாவி) உங்கள் கையில் !

ஆக்கம்:  வினோ ரூபி, சென்னை இந்தியா
தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள், பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.


சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.


தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால் உடலில் ஏற்படும் சுருக்கங்களை கண்டறியலாம்.


உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.

முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள், அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

தினமும் குறைந்தது 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும், தொந்தியும், வயிறும் குறையும்.

குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.

படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.

முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.

கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.

உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.

அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 


இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால் மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள், அது உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

தினமும் காலையில் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

புதன், ஜூலை 30, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்
 
 
மன்உயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா 
என்அல்லது இல்லை துணை. (1168)

பொருள்: இந்த இரவு நேரம் என்பது உலகில் உள்ள உயிர்களையெல்லாம் தூக்கத்தில் ஆழ்த்திவிட்டு, என்னையன்றி வேறு துணையில்லாமல் என்னைப் போலவே பிரிவுத் துயரில் ஏங்குகிறது.

இன்றைய சிந்தனைக்கு

 புனித குரான்
 

"உன்னை உன்னுடைய வாயல்ல, மற்றவர்களுடைய வாய் புகழட்டும்; உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும்"

"நோக்குமிடமெல்லாம் நீயின்றி வேறில்லை ஜெயகாந்தா(ன்)!"

எழுத்தாளர் ஜெயகாந்தன் 80தாவது பிறந்த நாள் விழா நேரடிப் பதிவு!.
Picture Courtesy: A.S.Ganesh, Dinamani
    ஜெயகாந்தன் 80-ஆவது
பிறந்த நாள் விழாவில் ஜெயகாந்தன் கதைகள் நூலை விகடன் குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் வெளியிட தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெறுகிறார். உடன் (இடமிருந்து) மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியம், நடிகை லட்சுமி,
நடிகர் சிவக்குமார், ஓவியர் மாயா, நூலை தொகுத்த வனிதா ராம் அவரது கணவரும்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான லண்டன் மருத்துவர் ராம்.
சென்னை மியூஸிக் அக்காடமிக்குள் நுழைய முடியவில்லை. வழியெங்கும் கார்களும் பைக்குகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. கிடைத்த இடத்தில் பைக்கை நுழைத்துவிட்டு விழா அரங்கிற்குள் நுழையத் தொடங்கினால்,  வழியிலேயே எழுத்தாளர் தமிழ்மகன் நின்றுக் கொண்டு இருந்தார்.  நலம் விசாரித்துவிட்டு அரங்கிற்குள் நுழைந்தால் அரங்கம் மக்களால் நிரம்பி இருந்தது. அப்படி ஒரு ஜனத் திரளை நான் பார்த்ததில்லை. எள் போட்டால் கீழே விழ வழியில்லை என்று சொல்வார்களே அப்படி இருந்தது விழா அரங்கு. திரும்பிய திசையெங்கும் மனிதத் தலைகள்.

தமிழ் எழுத்துலக பிதாமகன் ஜெயகாந்தனின் எண்பதாவது பிறந்த நாள் விழா மற்றும் கதைகள் வெளியீட்டு விழா கடந்த 24ம் தேதி சென்னை மியூசிக் அக்காடமியில் நடைபெற்றது.  ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரு கூட்டமா....? என்று நாம் மலைக்கத் தேவையே இல்லை. நேரு ஸ்டேடியத்தில் வைத்திருந்தாலும் ஸ்டேடியம் நிரம்பி வழிந்துதான் இருக்கும் என்பது உண்மை. லண்டன் வாழ் தமிழரான டாக்டர் ராம் தனது மானசீக எழுத்தாளருக்கு எடுத்த பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர்கள் முதற்கொண்டு ரசிகர்கள்வரை வந்து குவிந்துவிட்டனர்..

அரங்கில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய  வீடியோ காட்சிகள் திரையில் ஓடிக்கொண்டு இருந்தது. அவரைப்பற்றிய குறிப்புகள் பெரும் மலைப்பைத் தந்தன. மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரிடம் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்...என்று பல பரிணாமம் பெற்று இருக்கிறார்.  இது நாள்வரையில் மலையாள எழுத்துலக பிதாமகன் வைக்கம் முகமது பஷீர் மட்டுமே பல்வேறு தொழில்களை செய்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன்,  ஜெயகாந்தனும் அந்த வரிசையில் வருகிறார் என்கின்றபோது அவரது எழுத்தின் வீச்சு வரும் திசை தெரிந்தது.


---------

    மிழ் தாய் வாழ்த்துகளுடன் விழா தொடங்க...மேடையில் இடமிருந்து வலமாக ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரும், மொழிபெயர்ப்பாளரும், முன்னாள் ஆசிய வளர்ச்சி வங்கி இயக்குநருமான கே.எஸ்.சுப்பிரமணியம், நடிகை லட்சுமி, நடிகர் சிவக்குமார்,  தொழிலதிபர் நல்லி குப்புசாமிசெட்டி, விழா நாயகர் எழுத்தாளர் ஜெயகாந்தன், ஆனந்த விகடன் நிறுவனங்களின் தலைவர் பாலசுப்பிரமணியன், ஓவியர் மாயா, இவ் விழாவினை நடத்தும் லண்டன் வாழ் தமிழரான டாக்டர் ராம், அவரைத் தொடர்ந்து அவரது துணைவியார் வனிதா ராம் ஆகியோர் வரிசைக்கிரமமாக அமர்ந்து இருந்தனர்.

விழாவில் மூத்த ஓவியர் கோபுலு கலந்துக் கொள்வதாக இருந்தது. எதிர்பாராத விதமாக அவரது மனைவி இறந்துவிட்டதால் அவர் வரமுடியாமல் போய்விட்டது. அவர் வராத குறையை நடிகர் சிவக்குமார் தீர்த்துவைத்தார். விகடனில் அவர் வரைந்த ஓவியங்கள் பற்றி சிவக்குமார் கூறியது அவர் ஒரு ஓவியக் கலைஞன் என்பதைக் காட்டியது. விகடன் தீபாவளி மலருக்கு கோபுலு வரைந்த ஓவியங்களைப் பற்றி இஞ்ச் பை இஞ்சாக வர்ணித்தார். கோபுலு அய்யாவை பார்த்தபோது,  "இந்த கையால படங்கள்ல நிறைய ஸ்டோக்ஸ் போட்டோன்ல்லியோ அதான் எனக்கும்  ஸ்டோக் வந்துடுத்துரா....." என்று அந்த நேரத்திலேயும் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தினார் என்றார்.  ஜெயகாந்தனின் கதைகளில் வரும் கதாபாத்திர பெயர்களையும், கதை சுருக்கத்தையும் சுவைப் பட பேசி பெரும் கைத் தட்டலை பெற்றார்.

முன்னதாக விழாவை தொடங்கிவைத்து டாக்டர் ராம் வரவேற்புரையாற்றினார். ஜெயகாந்தனின் தீவீர ரசிகர் என்பது அவரது ஒவ்வொரு செய்கையிலும் பேச்சிலும் தெரிந்தது. இல்லையென்றால் இப்படி பல லட்சங்களை செலவு செய்து இந்த விழாவை நடத்துவாரா?. ஜெயகாந்தனின் தீவிர ரசிகர் என்று இவரைத்தான் சொல்லவேண்டும். இவரால்தான் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. இவ் விழா எடுக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழர் செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும். நல்லவேளை டாக்டர் காப்பாற்றினார்.

இவ் விழாவில் பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டும் அல்லாமல் ஜெயகாந்தன் 70-80களில் அவர் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த கதைகளில் 20 கதைகளை தேர்ந்தெடுத்து, அதே அச்சு வடிவில், அதே ஓவியங்களை கொண்டு  நல்லதொரு தொகுப்பையும் வெளியீட்டு இருக்கிறார்கள்.  இத் தொகுப்பை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி வெளியீட விகடன் நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். ஓவியங்களை ஓவியர் மாயாவும், ஓவியர் கோகுலும். வரைந்துள்ளனர். ஜெயகாந்தனை விட மூத்தவரான மாயா அந்த ஓவியங்களை இப்போதும் அப்படியே வரைந்திருப்பது  இத் தொகுப்பிற்கு பெரும் வரவேற்பை கூட்டி இருக்கிறது!.

நடிகை லட்சுமி எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

"பதினோரு வயதுவரை எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவோம் படிப்போம். தமிழ் படிக்கத் தெரிந்த பிறகு எனது ஆதர்ஷ எழுத்தாளராக ஜெயகாந்தனே இருந்தார். மிஸ்டர் ஜேகேயோட 'அக்னி பிரவேசம்' என்ற நாவலைத்தான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள்.  அதில் முக்கியமா ஒரு சீன்:  கல்லூரி முடிந்து பஸ் ஸ்டாப்பில் அந்த பெண் நிற்க; அவள் ஏற வேண்டிய பஸ் மட்டும் அன்றுப் பார்த்து வர லேட்டாகிறது. அவளோடு கூட இருந்தவர்கள் எல்லோரும் அவரவர் பஸ் வந்தவுடன் ஏறி போய்விட, இந்தப் பெண் மட்டும் தனிமையில் மழையில் நனைந்துக் கொண்டு இருக்கிறாள். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞன் அவள் நிற்பதை பார்த்துவிட்டு, அவளை அவள் வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்று கூறி அவளை தனது காரின் பின் சீட்டில் ஏற்றிக் கொண்டு அவளை யாரும் அற்ற இடத்தில் வைத்து கற்பழித்து விடுகிறான். பின்னர் அவளை அவளது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு பறந்துவிடுகிறான்".

"இந்தப்படத்தில் இந்த சீன் மிகவும் முக்கியமானது. அந்த பிராமணாத்து  வெகுளிப் பெண் கேரக்ட்டருக்கும், மழையில நணைஞ்சி நிக்கிற கேரக்டருக்கும்  நான் தான் பொருத்தமா இருப்பேன்னு ஜேகே, இயக்குனர் பீம்சிங்கிடம் கூறிவிட்டார். அப்போது நடிக்காம ஒதுங்கி இருந்த ஒரு நடிகை ஜெயகாந்தனின் இந்த கதைக்கு நான்தான் நடிப்பேன்னு ஒத்தக்கால்ல பிடிவாதமா நிற்கிறார். அப்படத்தில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டு இருந்தார்.  இயக்குனர் பீம்சிங்கும் இதை ஜேகேயிடம் அடிக்கடி கூறி இருக்கிறார். அப்போ ஜேகே ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க......அய்யோ.....அதை எப்படி நான் சொல்வேன்" என்று இரண்டு மூன்று சொன்னவர், எல்லொரும் ஆவலுடன் அமைதி காக்க.... அவரே ஜேகே சொன்னதை பின்வருமாறு கூறினார்  "அந்த நடிகையையெல்லாம் தனியா அழைச்சிக்கிட்டு போய் கெடுக்க முடியாதுப்பா!"  என்று கூற.... அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது!. அந்தப் படம் 1977ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது என்றார். பேசிமுடித்தவர் ஜெயகாந்தன் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று  கைகளை பற்றிக் கொண்டு நெக்குருகி அவரது கால்களை தொட்டு வணங்கினார்.

இவ் விழாவிற்கு கவிஞர் வைரமுத்து வருவதாக இருந்தது.  கடைசி நேரத்தில் வர முடியாமல் போக....அவர் வராத குறையை அவரது வீடியோ பேச்சு தீர்த்துவைத்தது. ஜெயகாந்தனின் தீவிர  ரசிகர் கம் நண்பரான இசையமைப்பாளர் இளையராஜா இவ் விழாவிற்கு ஏன் அழைக்கப்படவில்லை  என்ற காரணமும் புரிந்தது. விழாவை ஏற்று   நடத்தியவர்கள் வைரமுத்துவின் உறவினர்கள் என்பதால் இளையராஜாவை இவ் விழவிற்கு அழைக்கவில்லை போலும்?!.

ஏற்புரையாக ஓவியர் மாயாவை பேச அழைத்தனர் "எனது இந்த வெற்றிக்கு விகடன் ஆசிரியரே காரணம், அவர்தான் எனக்கு இந்த வாழ்க்கையை அளித்தார். இங்கே கோபுலு வரவில்லை வந்திருந்தால் அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருப்பேன். இங்கே அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் என்னைவிட வயதில் இளையவர்கள். அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்" என்றார்.

இறுதியாக ஏற்புரையாற்ற ஜெயகாந்தனை அழைத்தனர்.  எழுந்து நடக்க முடியாததால் அவரது இருக்கைக்கு மைக் வைக்கப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு பேசிய அவர் " இங்கு வந்து நீங்கள் நன்றி வணக்கம் சொன்னால் போதும் என்றார்கள், இங்கு வர முடியாதவர்கள் மனம் இங்குதான் உலாவிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றி வணக்கம் என்று குளறலுடன் முடித்துக் கொண்டார். ஜெயகாந்தன் பேசுவதற்கு பெரிதும் சிரமப்பட்டார்.  அதனால் அவரது ஒற்றை வார்த்தைக் கூட நமக்கு கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. தமிழுக்கு கிடைத்த ஒரு யதார்த்தமான எழுத்தாளரின் பிறந்த நாளை அன்று தமிழகமே கொண்டாடியது எனலாம்.

இனி விழா துளிகள்....

விழாவில் தனிப்பட்ட முறையில் பஜாக செயற் குழு உறுப்பினர் இல கணேசன்,  சால்வை போர்த்தினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விடியல் சேகர் ஜெயகாந்தனுக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு ஜெயகாந்தனுக்கு சால்வை போர்த்த மேடைக்குவர.... அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

விழாவிற்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், அவ்வை நடராசன், சிலம்பொலி செல்லப்பனார், எழுத்தாளர் விக்கிரமன், எழுத்தாளர் சுபா, முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் பப்பாசி தலைவர்கள் செண்பகா பதிப்பகம் ஷண்முகம் மற்றும் கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.

இறுதியில் தேசிய கீதம் பாடுவதற்கு, ஒலி பெருக்கி ஏதோ மக்கர் செய்ய....எழுந்து நின்று அனைவரும் ஒரே குரலில் தேசிய கீதம் பாடி விழாவை நிறைவு செய்தது,   எழுத்தாளர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள்  என்பதை சொல்லாமல் சொல்லியது.

பதிவு:தோழன் மபா, சென்னை

செவ்வாய், ஜூலை 29, 2014

நம்மிடமிருந்து விடைபெற்ற மற்றுமொரு 'வானொலிக் கலைஞன்'

இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்களில் ஒருவராகிய திரு.ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் இன்று காலை(29.07.2014) இலங்கை  சிலாபம் அரச மருத்துவ மனையில் காலமானார். அன்னாருக்கு வயது 80 ஆகும்.
இளமைக் காலத்தில்
திரு.இரா.சே.கனகரத்தினம்
திரு.கனகரத்தினம் அவர்கள் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான அறிவிப்பாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை சுமார் முப்பது ஆண்டுகள் பிரபல அறிவிப்பாளராகப்  பவனி வந்தார். இலங்கை வானொலியின் புகழ் பூத்த அறிவிப்பாளர்களாகிய கே.எஸ்.ராஜா, பி.எச். அப்துல் ஹமீத், மயில்வாகனம் சர்வானந்தா, வி.என்.மதியழகன், ஜோக்கிம் பெர்னாண்டோ, நடராஜா சிவம், ஜெயகிருஷ்ணா, ஜி.போல் ஆன்டனி, ராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி ஆகிய அத்தனை அறிவிப்பாளர்களுடனும் பணி புரிந்தவர் என்ற பெருமை மட்டுமல்லாது, இவர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடியும் ஆவார்.
இலங்கையின் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவதுதமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார்.திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.
வயது முதிர்ச்சியின்போது
திரு.கனகரத்தினம் அவர்கள் பிறந்தது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள சிலாபம் அருகே உள்ள 'மருதங்குளம்' என்னும் கிராமம் ஆகும். இவரது பெற்றோர் முத்தையா, பொன்னம்மாள் ஆவர். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடு அரசவம்சத்தை சேர்ந்தவர்.கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. 'ராஜகுரு சேனாதிபதி' என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரைப்  பெயர்.மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர்.
 அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு அவர்கள், இதன் காரணமாக 
இசைஞானி இளையராஜா மற்றும்,
பி.எச்.அப்துல் ஹமீத் இவர்களுடன்
இரா.சே.கனகரத்தினம் அவர்கள்.
இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். 'பொதிகைத் தென்றல்', 'காலைக்கதிர்', 'பாட்டொன்று கேட்போம்', இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார்.பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது 'ராஜகுரு சேனதிபதி' என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள். கடந்த 1988 ஆம் ஆண்டில் 'மனம் போன போக்கில்' என்னும் பெயரில் ஒரு சிந்தனை நூலையும்
(இ-வ) பின்வரிசையில் - பெனடிக், ஜோசப் ராஜேந்திரன், மயில்வாகனம், மஹதி ஹசன், ஜோக்கிம் பெர்னாண்டோ, சந்திரமோகன், சண்முகம் அமர்ந்திருப்போர் - விசாலாட்சி ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், பி. பி. தியாகராஜா, கனகரட்ணம், அப்துல் ஹமீத்.
வெளியிட்டிருந்தார். இவரது மறைவு குறித்து மற்றுமொரு மூத்த அறிவிப்பாளராகிய திரு.பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் தனது முகநூலில் பின்வருமாறு துயர் பகிர்ந்துள்ளார்:
"நமது மூத்த முன்னோடி அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி சற்று முன்னர் வந்தது. வானொலிக்காகவே தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வாழ்ந்த நல்லாத்மா. எனக்கும் அவருக்கும் 47 ஆண்டு கால நட்பு. இளவயதில் நான் அறிவிப்பாளராக இணைந்த காலத்தில் என்னோடு சம வயது ஒத்தவரைப் போன்று பழகிய பண்புள்ளவர். முகஸ்துதிக்காக, போலியாக எவரையும் பாராட்டத் தெரியாதவர். தவறு கண்டால் முகத்துக்கு நேரே விமர்சனம் செய்யும் துணிவுள்ளவர். வர்த்தக ஒலிபரப்பிலும் 'இலக்கிய மணம்' பரவச் செய்தவர். சமீப காலமாக ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு தனிமையில் அமைதியான வாழ்வைத்
தொடர்ந்தவர். எண்பது ஆண்டுகள் வாழ்ந்தது போதும் என்று இறைவன்
கணித்தானோ? 81 வயது பூர்த்தியாகும் முன்னரே நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார். அவரது ஆத்மா நற்பேறு பெற நம் இதயங்களால் பிரார்த்தனை செய்வோமாக" (இறுதிக் கிரியைகள் நாளை 30.07.2014 புதன்கிழமை மாலை 4 மணிக்கு சிலாபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது) 
 இலங்கை வானொலி என்னும் 'மனம் மயக்கும்' மந்திர ஊடகத்தில் இணைந்து மூன்று தசாப்தங்களாக எம்மையெல்லாம் மனம் மகிழச் செய்த அந்த வானொலிக் கலைஞனின் மறைவிற்கு அந்திமாலை ஆசிரிய பீடம் தனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் இழப்பால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.
ஈழத்தின் மூத்த அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் காலமானார். இந்த செய்தியை மூத்த அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஹமீத் கூறியது பின்வருமாறு, நமது மூத்த முன்னோடி அறிவிப்பாளர், -ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் சிலாபம் வைத்தியசாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி சற்றுமுன்னர் வந்தது.
வானொலிக்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வாழ்ந்த நல்லாத்மா. நானும், அவரும், இசைஞானி இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட இந்த படமே என்னிடம் அவருடைய நினைவாக இருக்கிறது என்று கூறினார்.
- See more at: http://www.cineulagam.com/eelatamil/news-tamil/celebrities/106749/#sthash.peIoYj5z.dpuf
ஈழத்தின் மூத்த அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் காலமானார். இந்த செய்தியை மூத்த அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஹமீத் கூறியது பின்வருமாறு, நமது மூத்த முன்னோடி அறிவிப்பாளர், -ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் சிலாபம் வைத்தியசாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி சற்றுமுன்னர் வந்தது.
வானொலிக்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வாழ்ந்த நல்லாத்மா. நானும், அவரும், இசைஞானி இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட இந்த படமே என்னிடம் அவருடைய நினைவாக இருக்கிறது என்று கூறினார்.
- See more at: http://www.cineulagam.com/eelatamil/news-tamil/celebrities/106749/#sthash.peIoYj5z.dpuf
ஈழத்தின் மூத்த அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் காலமானார். இந்த செய்தியை மூத்த அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஹமீத் கூறியது பின்வருமாறு, நமது மூத்த முன்னோடி அறிவிப்பாளர், -ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் சிலாபம் வைத்தியசாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி சற்றுமுன்னர் வந்தது.
வானொலிக்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வாழ்ந்த நல்லாத்மா. நானும், அவரும், இசைஞானி இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட இந்த படமே என்னிடம் அவருடைய நினைவாக இருக்கிறது என்று கூறினார்.
- See more at: http://www.cineulagam.com/eelatamil/news-tamil/celebrities/106749/#sthash.peIoYj5z.dpuf

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117 படர் மெலிந்திரங்கல் 

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளன். (1167)
 
பொருள்: காமம் என்ற ஆழமான ஆற்றை நீந்திக் கரையேற முடியாமல் தவிக்கின்றேன். என் காதலன் ஆருகில் இல்லாததால், இந்த நள்ளிரவிலும் நான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

எது தேவை என்பதைத் தீர்மானிக்க மனத்தையும், வழி வகுக்க அறிவையும், செய்து முடிக்கக் கைகளையும் தந்த இறைவனிடம் மேலும் மேலும் கேட்பது எந்த வகையில் நியாயம்?

'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்

ஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு
பாகம் 4.(கடந்த 22.07.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)
வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களெல்லாம் சதுரம் – 4 மற்றும் சதுரம் 3 இரண்டையும் புறக்கணித்து விட்டவர்களாகவும், சதுரம் – 1ஐ ஏறிட்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லாத வர்களாகவும் திகழ்வார்கள்.
காரணம் என்னவெனில் அவர்களின் கவனமும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் சதுரம் -2 லேயே குவிந்திருக்கும்.
அவர்களுக்கு “எது அவசியம்” – என்பது புரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அவசரமானாலும் கூட அவசியமற்றதென்றால் அவர்கள் அதனைப் 
புறக்கணித்துவிடத் தயங்காத உறுதியான உள்ளம் படைத்தவர்களாகவும் திகழ்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எல்லாம் தங்களுக்கென சில இலக்குகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருப்பதால் அவசியமில்லாமல் பிறரின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்து தமது காலத்தை வீணடிக்கும் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  
என்ன? – இனி நாமும் நமது அன்றாடச் செயல்களை மேற்கண்ட நான்கு சதுரங்களாக வரையறுத்து – இரண்டாம் சதுரத்தில் நமது மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி காண்போமா?
அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம்

நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.

கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்கிடுங்கள். அது என்ன சொல்கிறது என்பது நமக்குப் பிடிபடும். அந்தச் சதுரத்தின் கிடைக்கோடு நமது தைரியத்தைக் குறிப்பதாகக் கொள்வோம். செங்குத்துக் கோடு நமது கருணையைக் குறிப்பதாக கொள்வோம். இந்த இரண்டு கோடுகளை அடிப்படையாகக் கொண்டுஅமையும் நான்கு சதுரங்களை நன்கு கவனிப்போம்.

முதலில் “வெல்ல …. தோற்க….” – என்னும் முதலாம் சதுரத்தை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவெனில் “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” -என்கிற அடிப்படையில் தொடங்கப்படும் முயற்சியை அல்லது நடவடிக்கையைக் குறிக்கும். இத்தகைய மனோபாவம் – விளையாட்டின் போதும், போரின் போதும் காணப்படக் கூடியதாகும். வாழ்க்கைக்கோ, வர்த்தகத்துக்கோ, உறவுமுறைக்கோ ஒத்துவராததாகும். “நான் வெல்ல வேண்டும் நீ தோற்க வேண்டும்” – என்று முனைகிறபோது, அவரிடம் தைரியம் அதிகமாகவும் கருணை மிகவும் குறைவாகவும் உள்ளதென்று பொருள். அதாவது முரட்டுத் தனம் மிகுந்து காணப்படும். வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது. – இத்தகைய நிலை வாழ்க்கையை வசப்படுத்தவும் தலைமை தாங்கவும் உதவாது. “வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” என நடந்து கொள்ளும் இவர்களைப் பெரும்பாலானோர்க்குப் பிடிக்காமற்போகும். அவரது பேச்சில் பக்குவம் இருக்காது. இவர்களது செயலில் நிதானம் இருக்காது.. இதனால் உறவுகள் இனிமையாய் இருக்காது. இது அதிகாரம் தொனிக்கும் நிலைமையைக் குறிக்கும். “தானே முக்கியமானவன்” – என்னும் தன்மை தொனிக்கும்.

இரண்டாம் சதுரம்: “நான் தோற்கிறேன் நீ வெல்ல” என்பதாகும். அதாவது, “நான் விட்டுக் கொடுக்கிறேன் நீ வெல்ல” – என்னும் மனோபாவத்தைக் குறிக்கும் சதுரமாகும். இப்படிப்பட்ட மனோபாவம் யாருக்கு வாய்க்கும் எனப் பார்த்தால் – யாரிடம் தைரியம் குறைவாகவும் கருணை அதிகமாகவும் இருக்குமோ – அவர்களால் மட்டுமே இப்படித் தன்னைத்தானே விட்டுக்கொடுத்து பிறர் வெல்ல – ஏதுவாக இருக்க முடியும். இது ஒருவரது பலவீனத்தைக் காட்டும் தன்மையாகும். இந்த நிலையில் உறவு ஆரம்பத்தில் இனிப்பது போலத் தோன்றினாலும், நாளாக ஆக, இப்படிப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவர். இவர்களின் மதிப்புக் குறைய நேரும். பிறகு யாருமே கவனிக்கவில்லை, எனக்கென்று யாருமில்லை, என்னால் முன்னேற முடியவில்லை எனப் புலம்ப நேரிடும்.
மேற்கண்ட இரண்டு சதுரங்களையும் சற்றே உற்று நோக்கினால் ஒரு விபரீதம் புரியும். உறவில் சம்பந்தப்பட்ட இருவருள் ஒருவர் – முதல் சதுரத்துக்குச் சொந்தக்காரராகவும், மற்றவர் இரண்டாம் சதுரத்திற்குச் சொந்தக்காரராகவும் இருந்தால் – நடப்பதை யூகித்துப் பாருங்கள்….. அவர், “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” என்று களத்தில் இறங்குவார். இவர், “நான் தோற்பேன்…. நீ வெல்வாய்” என்று களத்தில் இருப்பார்.விளைவு என்னாகும்? எந்த வித சுவாரசியமும் இல்லாமல் ஒருவர் வெல்ல மற்றவர் தோற்றுக்கொண்டே இருப்பார். இது ஒருவித (துஷ்பிரயோக நிலைக்குச் சமமாகும்) மிகைப்படுத்துதலுக்குச் சமம்.

மூன்றாவது சதுரம்: “நானும் தோற்பேன் நீயும் தோற்க வேண்டும்” – என்னும் மிகவும் மோசமான மனோபாவத்தைக் குறிக்கிறது. “தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” – என்னும் பழிவாங்கும் மனோநிலையைக் குறிக்கிறது.

இந்த நிலையை யார் அடைவர் என்றால், இந்த உறவில்...., 
(தொடரும்)
  இந்தத் தொடரின் பகுதி 5 ஐ அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை (05.08.2014) உங்கள் அந்திமாலையில் வாசியுங்கள்.

திங்கள், ஜூலை 28, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117 படர் மெலிந்திரங்கல் 

இன்பம் கடல்மாற்றுக் காமம் அஃதுஅடுங்கால்
துன்பம் அதனின் பெரிது. (1166)
 
பொருள்: காம இன்பம் அனுபவிக்கும்போது கடலளவு பெரியதாக இருக்கிறது. ஆனால் அதுவே காதலன்/காதலி அருகில் இல்லாதபோது 'காம நோயாக' மாறி வருத்தும்போது அதன் துன்பமோ கடலை விடப் பெரியது.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

ஒரு தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது மடைமை. அந்த மடைமையைத் திரும்பச் செய்பவன் எப்படி முழு மனிதனாக முடியும்?

சேர்ந்து இருப்பது தப்பா?

 "விமான பயணத்தின்போது நானும் எனது மனைவியும்  சேர்ந்து பயணம் செய்வதில்லை. நான் ஒரு நாள் முன்னதாகவோ... அல்லது அடுத்தடுத்த... விமானத்திலேயோ  பயணம் செய்வோம்.   ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து எங்களில் யாராவது ஒருவர்... மேலும்

ஞாயிறு, ஜூலை 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்

துப்பின் எவன்ஆவர் மன்கொல் துயர்வரவு 
நட்பினுள் ஆற்று பவர். (1165)
 
பொருள்: இனிமையான நட்புடைய என்னிடமே காதல் காரணமாகத் துன்பத்தைச் செய்யும் என் காதலர் பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும்போது பகைவனுக்கு எத்தகைய துன்பத்தைச் செய்வாரோ.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

ஒரு மனிதனின் தலை சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே.

சனி, ஜூலை 26, 2014

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் !

தலைவலி:
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
தேள் விஷம்:
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி:
சர்க்கரை வியாதி உள்ளவர்கவெற்றிலையின் மருத்துவ குணங்க இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
அல்சர்:
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
தாம்பூலம் தரித்தல்:
நமது உடலில் சுரக்கும் 24 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த உண்மை. ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.
நன்றி: atozthagavalkalangiyam.blogspot.com

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணை மன்னும் இல். (1164)
 
பொருள்: காம நோய் கடலைப் போலப் பெரியதாக இருக்கிறது. இந்தக் கடலைக் கடந்து செல்வதற்கு உதவக்கூடிய காவலான தோணியாகிய என் காதலன் என்னோடு இல்லை.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 
 

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை.

வெள்ளி, ஜூலை 25, 2014

சகல நோய்களையும் போக்கும் சுக்கு.

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். 4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். 5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். 6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும். 7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். 8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். 9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும். 10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். 11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். 12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும். 13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். 14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். 15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும். 16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். 17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும். 18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் 
இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும். 19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும். 20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும். சுக்கு பற்றிய பழமொழிகள் பத்து: 1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை. 2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை. 3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை. 4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம். 5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா? 6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு. 7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு. 8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும். 9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான். 10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம். 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117 படர் மெலிந்திரங்கல்

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. (1163)
 
பொருள்: பிரிவுத் துயரால் வருந்தும் என் உயிரைக் காவடித்(தராசு) தண்டாகக் கொண்டு காமமும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தொங்குகின்றன.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

வாழ்க்கையில் வெற்றி பெற சுருக்கமாகப் பேசுங்கள்; அதிகமாகச் செயலாற்றுங்கள்.

வியாழன், ஜூலை 24, 2014

ரத்த தானம்

இப்பொழுது பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளின்போது ஆர்வத்துடன் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. நீங்கள் ரத்த வங்கிகளுக்கு சென்று ரத்தம் கொடுக்கலாம். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும், அரசோ- தனியார்களோ நடத்தும் ரத்ததான முகாம்களுக்கு சென்றும் ரத்தம் கொடுக்கலாம். நோயாளிகளுக்கு தேவைப்படும்போது அந்த ஆஸ்பத்திரிக்கே சென்று ரத்தம் வழங்கவும் செய்யலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது::
ரத்ததானம் செய்ய விரும்புகிறவர்களை ஒருங்கிணைக்கும் சங்கங்கள் வாயிலாகவும் இந்த சேவையை நீங்கள் செய்யலாம். சங்கத்தில் உங்களை பதிவு செய்யும்போது பெயர், வயது, எடை, ரத்தப் பிரிவு, விலாசம், செல்போன் நம்பர் போன்றவைகளை கொடுக்கவேண்டும். நோயாளிக்கு ரத்தம் தேவைப்பட்டால் நீங்கள் வழங்க உகந்த நேரம் எது? என்ற விபரத்தையும் கொடுக்கவேண்டும்.
பின்பு உங்களை அதற்கான `நெட் ஒர்க்கில்` இணைத்துவிட்டு, உங்களுக்கான `கோடு எண்ணும்` போட்டோ ஒட்டிய அடையாள அட்டையும் தருவார்கள். உங்களைப் பற்றிய முழு தகவலையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொள்வார்கள்.
உங்கள் ரத்த குரூப் ரத்தம் யாருக்காவது தேவைப்படும்போது, உங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தருவார்கள். தேவைப்படும் நோயாளி இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்தம் வழங்கலாம். நீங்கள் ஒருமுறை ரத்தம் வழங்கிவிட்டால், அடுத்த மூன்று மாதம் உங்களை ரத்ததானம் செய்ய அழைக்கமாட்டார்கள்.
ரத்த தானம் செய்வதால் ஏற்படும் பயன்கள்:::
18 வயது முதல் 60 வயதுவரை ரத்ததானம் செய்யலாம். 50 கிலோ எடைக்கு குறையாமல், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஆண்கள் 3 மாதத்திற்கு ஒருமுறையும்- பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் தானம் செய்யலாம்.
ஒருமுறை 350 மி.லி. ரத்தம் பெறுவார்கள். இதற்கு 15 முதல் 20 நிமிடங்களே ஆகும். கொடுக்கும் ரத்தத்தை, சிறிது நேரத்திலே உங்கள் உடல் ஈடுசெய்துவிடும். அதனால் தயங்காமல் ரத்ததானம் செய்யுங்கள். வருடத்திற்கு குறைந்தது 3 தடவையாவது ரத்ததானம் செய்துவிடுங்கள். ரத்த தானம் செய்வதால் உடலில் எந்த பிரச்சனையும் வருவதில்லை.
ஆனால் சிலரிடம்  இன்னும்  ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.மேலும் ரத்த தானம் செய்வதால் நம் உடல் எடை அதிகரிக்காமல் ஆரோக்கியத்துடன் இருக்கும். 
நன்றி:மாலைமலர்  

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117 படர் மெலிந்திரங்கல்

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு 
உரைத்தலும் நாணுத் தரும். (1162)
 
பொருள்: காம நோயைப் பிறர் அறியாமல் மூடி மறைக்கவும் முடியவில்லை. நோயை ஏற்படுத்திய என் காதலனுக்கு இதை எடுத்துச் சொல்லவும் வெட்கமாயிருக்கிறது.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்
 

பிறவியிலேயே ஒழுக்கமாக வாழ்பவனை விட, வாழ்வில் ஆயிரம் முறை இடறி விழுந்த ஒருவனால் மட்டுமே நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும். ஒழுக்கம் என்பது உயர் குலப் பிறப்பாலோ, கல்வி கற்பதாலோ வருவதல்ல, அது உயர்வான, உறுதிபடைத்த உள்ளத்தால் வருவது.

கவர்ச்சியான உடல் அழகைப் பெற...

  • ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங்கள் கழித்து கடலை மாவை உபயோகித்து முகம் கழுவ வேண்டும்.
  • சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
  • மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.
  • பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.
  • அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல்லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.
  • வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் `ஷவரில்` நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத் தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை ஒற்றி எடுக்க வேண்டும்.
  • வைட்டமின் `ஏ` மற்றும் `சி` அதிகமுள்ள உணவை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.
  • கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.
  •  பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் `பிளீச்` செய்யலாம்.
  •  வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
  • கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங்களுக்குத் தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.
  • ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.
  • உடலில் `புளோரின்` பற்றாக் குறையால் சருமம் சொரசொரப்பாக மாறுகிறது. உணவை சமைத்து உண்பதால் உணவில் இருக்கும் `புளோரின்` சத்து போய்விடுகிறது. இதைத் தடுக்கப் பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆட்டுப் பால், வெண்ணை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேன்டும்.
  • சருமத்தின் மீது சொறி சொறியாக வருவது `சிலிக்கான்` பற்றாக் குறையின் அறி குறியாகும். பார்லி, தக்காளி, ஸ்டிராபெர்ரி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது.
  • `குளோரோபில்` பற்றாக்குறையால் தோல் உறியும். இதைத் தடுக்க கோதுமை மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.
  • நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சருமம் மினுமினுப்பாக மாறும். 
நன்றி: மாலைமலர்

புதன், ஜூலை 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்
 
 
மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். (1161)

பொருள்: பிரிவுத் துன்பத்தைப் பிறர் அறியாதபடி மறைக்க முயல்கின்றேன். ஆனால் அது இறைப்பவர்க்கு கிணற்றில் நீர் (தண்ணீர்) மிகுவது போல. அதிகாமாக உருவாகி நின்று வருத்துகிறது.
 
 

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

மனிதனுடைய வலிமையை அழிப்பான மூன்று. அச்சம், கவலை, நோய். அச்சமும், கவலையும் உள்ளவனிடம் நோய் தானாகவே வந்து சேர்ந்து விடுகிறது. முதல் இரண்டையும் தன்னிடம் அணுக விடாமல் காப்பவன் வாழ்க்கையில் வெல்லும் கலையை கற்றவன் ஆகிறான்.

செவ்வாய், ஜூலை 22, 2014

நோபல் பரிசு பட்டியலில் என் பெயர் !!!

 'சகலகலா வல்லவன்' படமும் நோபல் பரிசு பட்டியலில் என் பெயரும். 

நான் நான்காவது படிக்கும் போது வந்த படம் இது. ஒரு சிறுவனின் மனதில் நீங்காமல் தங்கிவிட்ட திரைப்படத்தினைப் பற்றிய பதிவே இது.

ஒரு படத்தின் உண்மையான வெற்றி தெரிய நான்கு வாரங்கள் கூட ஆகிய காலம் அது. 40 பிரிண்ட் போடுவதெல்லாம் பெரிய விஷயமாக, பத்திரிக்கைகளில் துணுக்குச் செய்தியாக வரும். ஓல்ட் எம் ஆர் என்று அழைக்கப்பட்ட பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆறு அல்லது எட்டு பிரிண்ட்தான் வரும்.

படம் வெளியாகி 50 நாட்களுக்குள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டால், அது சுமாரான படம். 100 நாட்கள் கழித்து வந்தால் வெற்றிப்படம், 175 நாள் கழித்து வந்தால் தான் சில்வர் ஜூப்ளி.

ஆனால் எங்கள் ஊரில் அந்தந்த காலகட்டத்தில் இளவட்டமாக இருப்பவர்கள் மதுரைக்கோ திண்டுக்கலுக்கோ சென்று படம் பார்த்து விட்டு வந்து படத்தைப் பற்றி சொல்லிவிடுவார்கள். படம் எப்படா வருமென மற்றவர்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். சில படங்களை எதிர்பார்த்து பசலையே வந்திருக்கிறது.

எதிர் வீட்டு ஞானசெல்வம், கமலின் விசிறி. அவர் திண்டுக்கலுக்கு போய் படம் பார்த்து விட்டு அதை விவரித்த விதத்தில், உடனேயே படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்கள் தெருவுக்கே ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் என்விஜிபி திரையரங்கில் படம் திரையிடப்பட்டு இருந்தது. ஏழு பேர் உட்காரும் பேக் பெஞ்சில் பத்துப்பேருக்கு மேல் நெருக்கியடித்து உட்கார்ந்து படம் பார்த்தார்களாம். மதியக்காட்சிக்கு கதவை மூடமுடியாதபடி மக்கள் நின்று கொண்டு படம் பார்த்தார்களாம். மாலைக் காட்சிக்கு வெளியில் நின்ற வரிசையை போலிஸாலேயே கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

அவர் சொன்னதில் சகதி சண்டை, கம்பு சண்டை, கார் சேஸிங், நியூ இயர் பாட்டு இவைதான் அந்தப் பிராயத்தில் என்னை கவர்வதாய் இருந்தது,
மதுரையில் என் சித்தப்பா இருந்தார். சென்ட்ரல் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே சைக்கிள் பார்க் செய்து டோக்கன் வாங்குபவர்களுக்கு டிக்கட்டில் முதல் மரியாதை. அவரிடம் அடம் பிடித்து, தியேட்டருக்கு கூட்டிப் போய்விட்டேன். தியேட்டர் வாசலையே நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம். திரும்பி வந்து விட்டோம்.

பின் ஒரு திருமணத்துக்கு திண்டுக்கலுக்கு குடும்பத்தோடு சென்று இருந்தோம். மண்டபத்தில் ராத்தங்கல். அங்கு இருந்த உறவினர்களை தாஜா செய்து அந்த படத்துக்கு போன குழுவோடு இணைந்து கொண்டேன். அப்போது படம் வந்து 50 நாளாயிருக்கும். ஆனாலும் டிக்கட் கிடைக்கவில்லை.

வாழ்க்கையில் முதன் முதலில் சந்தித்த ஏமாற்றம் இதுதான் என நினைக்கிறேன். எனக்குத்தெரிந்தவர்கள் எல்லாம் படத்தைப் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று சொல்ல என்னுள் ஆர்வம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

டீக்கடை ஸ்பீக்கர்கள், திருமண, சாமி கும்பிடு விழா ஒலிபெருக்கிகள் என எங்கும் சகலகலா வல்லவன் பாடல்கள் தான். பற்றாக்குறைக்கு சினிமாவைப் பற்றி தங்களுக்கு அதிகம் தெரியும் என பறைசாற்றிக்கொள்ளும் கல்லூரி மாணவர்கள் வேறு, நியூ இயர் சாங்குக்கு செட்டுக்கு ஒன்றரை லட்சம், கமல் அதில் ஆட ஒரு லட்சம் என்றெல்லாம், கிளப்பி விட்டுக் கொண்டேயிருப்பார்கள்.
ஒரு வழியாக பெட்டி, பெரியகுளம் அருளில் ஓடிவிட்டு, உசிலம்பட்டி மலையாண்டிக்கு வந்து விட்டது. அடுத்து வத்தலகுண்டு கோவிந்தசாமிக்குத்தான் என விவரமறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்திவிட்டன.

யோசித்துப் பார்த்தால்.... மேலும்