ஆக்கம்: வினோதினி பத்மநாதன்
ஸ்கெயான், டென்மார்க்.
நான் வாசித்து கேட்டு அறிந்து கொண்ட விடயங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என நினைக்கின்றேன். நீங்களும் இதனை அறிந்து அதன்படி முயன்று
ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.

இன்று புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மில் பலரது பிரச்சனை 'மன இறுக்கம்'. இதனை
எவ்வாறு தீர்க்கலாம்? எல்லோரிடமும் நம் வேதனைகளை சட்டென்று சொல்லி விட முடியாது. அதன் விளைவு நாம் அதனை எண்ணி எண்ணியே மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொள்கின்றோம். இறுதியில் மன இறுக்கதிற்கு ஆளாகின்றோம். அப்படிப்பட்ட மன
இறுக்கத்திலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகளைப் பார்ப்போமா?

இதோ உங்களுக்காகச் சில ஆலோசனைகள்:
மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்
1) சத்தான உணவைச் சாப்பிடுங்கள்!
'ருசியான உணவு' என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித 'மந்த' நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
2) நன்றாக உறங்குங்கள்!
நல்ல ஆழ்ந்த உறக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே இளைப்பாறுகின்றன (Refresh).
தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் 'உடல்நலக்குறைவு' நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணிநேரத் தூக்கம் அவசியம்.
3) நடவுங்கள்! ஓடுங்கள்!
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும், மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா?
எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40 வயதுக்காரர் 20 வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.
4) ஓய்வெடுங்கள்!
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். 'ஓய்வெடுத்தல்' என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மூச்சை மெல்ல விடுங்கள்.
கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.
5.) சிரியுங்கள்!
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு" என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.
சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக
முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்.
எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர்களை யாவரும் விரும்புவர்.
அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

(தொடரும்)