ஞாயிறு, ஜூலை 10, 2011

யாமறிந்த மொழிகளிலே

ஆக்கம்: சுஜீதா கண்ணன்,
கனடா

யாமறிந்த மொழிகளிலே
கடந்த எண்பதுகளில்இசையமைப்பாளர்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. அதாவது அவர்கள் இசையமைத்த ஒரு மெட்டு அல்லது பாடல் ஏதாவது ஒரு மொழியில் பிரபலமாகிவிட்டால் அதே மெட்டை/பாடலை மீண்டும் ஒரு வேற்று மொழிப் படத்தில் உபயோகிப்பார்கள். இதில் இளையராஜா மிகவும் கைதேர்ந்தவர். அதைவிடவும் இன்னுமொரு பலவீனம்/குறைபாடு அவரிடம் உள்ளது என்றும் கூறலாம். அதாவது ஒரு திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு பாடல் பிரபலமாகும் என அவர் நம்புகின்ற பட்சத்தில், மேற்படி பாடலைத் திரைப்படத்திற்காகப் பாடிய பாடகருக்குப் போட்டியாக தானும் ஒரு தடவை மேலதிகமாகப் பாடி, மேற்படி பாடகருக்குக் கிடைக்கும் புகழில் 'பங்கு கேட்பார்'. சில வேளைகளில் இவ்வாறு அவர்(இளையாராஜா) இரண்டாம் தடவையாகப் பாடிய பாடல் மேற்படி திரைப்படத்தில் இடம்பெறாவிட்டாலும், நிச்சயமாக அத்திரைப்படத்தின் பாடல் இசைத்தட்டில் 'கண்டிப்பாக இடம்பெறுமாறு' பார்த்துக் கொள்வார். இதில் இளையாராஜா அவர்களை விமர்சனம் செய்வதில் எனக்கு ஆர்வமில்லை, ஆனால் இது முற்றாகத் தவிர்க்கப் படவேண்டும் என்பதே எனது ஆவலாகும். இத்தகைய பாடல்களுக்கு உதாரணமாக இதயக் கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற "இதயம் ஒரு கோயில்" எனும் பாடலை SPB மற்றும் இளையராஜா இருவரும் இரண்டுதடவை பாடியதையும், புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாடலை SPB மற்றும் இளையராஜா தனித்தனியே பாடியதையும், இதயம் திரைப்படத்தில் இடம்பெற்ற "பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா" பாடலை K J ஜேசுதாஸ் அவர்களும், இளையராஜாவும் தனித்தனியே மொத்தம் இரண்டு தடவைகள் பாடியதையும் கூறலாம்.
இவ்வாரம் இளையராஜா அவர்கள் ஒரே மெட்டினை இரண்டு வெவ்வேறு மொழித் திரைப்படங்களில் உபயோகித்து வெற்றி பெற்ற பாடல்களைப் பார்ப்போம்.


முதலாவது பாடல்:


பாடல் இடம்பெற்ற திரைப்படம்: ஒளங்கள்
மொழி: மலையாளம்
பாடியவர்: S.ஜானகி 




காணொளி உதவிக்கு நன்றி:HridayaGeetham




இரண்டாவது பாடல்:

பாடல் இடம்பெற்ற திரைப்படம்: ஆட்டோ ராஜா
மொழி: தமிழ் 
பாடியோர்: இளையராஜா மற்றும் ஜானகி 


காணொளி உதவிக்கு நன்றி: rkpnbk
காட்சித் தெளிவின்மைக்கு வருந்துகிறோம்.

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.


3 கருத்துகள்:

Vijitha Kamal சொன்னது…

"தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்" பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது. பாடல் வரிகள் விளங்கவில்லை என்றபோதிலும், ஜானகி அம்மாவின் குரல் எனது காதுகளுக்கு தேனாக உள்ளது.
இந்தப் பாடல் மெட்டை இளையராஜா ஹிந்தி மொழியில் வந்த படமான "Aur Ek Prem Kahani" (1996). இந்த படத்தில் அவர் இசை அமைத்த 4 பாடல்களும் அவரின் தமிழில் (3 "காற்றில் எந்தன் கீதம்..." , "காதல் ஓவியம்..." , "பொத்தி வைச்ச மல்லிகை...") மற்றும் மலையாளத்தில் (1) வந்து வெற்றி பாடல்கள்தான்.
சுஜிதா கண்ணனுக்கு பாராட்டுக்கள்.

vinothiny pathmanathan dk சொன்னது…

உண்மை தான் சுஜித்தா .எவ்வளவு தான் புகழேணியின் உச்சியில் இருந்தாலும் அடுத்தவர்களின் புகழில் தானும் பங்கு போட்டுக் கொள்ளும் எண்ணம் வழக்கம் தானே. அதற்கு இவர் மட்டும் என்ன விதிவிலக்கா ? இதே வேலையை தான் திரு கங்கை அமரன் அவர்களும் செய்கிறார்கள் என்பதுவும் உண்மை .அருமையான பாடல்கள். பாடலின் பொருள் விளங்கியதோ இல்லையோ கேட்க இனிமையாக இருந்தது. நன்றி

suthan frans சொன்னது…

very good from your explein ( a rolling stone gathers no moss)

கருத்துரையிடுக