டேனிஷ் மொழியில்: Johan Joelsson மற்றும் Jonathan Jacobson
தமிழில்: இ.சொ.லிங்கதாசன்
"நாங்கள் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், மிருகங்களின் நலனிலும் அதேயளவு கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு ஒட்டகமும் நாளாந்தம் சோதனை செய்யப்படுகிறது" என்கிறார் ஐக்கிய அரபுக் குடியரசில் இயங்கி வரும் EICMP பால் ஏற்றுமதி சம்பந்தமான நிறுவனத்தின் தலைவராகிய திரு.பீட்டர் நாகி(Peter Nagy).
"பாலைவனத்தின் வெள்ளைத் தங்கம்" என அழைக்கப்படும் ஒட்டகப்பால் ஏற்றுமதியின் வரலாறு பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்தது. 'Beduiner' என்றழைக்கப்படும் 'பாலைவன நாடோடிகள்' ஆதி காலத்தில் ஒட்டகப் பால் மற்றும் இறைச்சியினை நம்பியே வாழ்ந்து வந்தனர். அராபிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 'எண்ணெய் வளம்' கண்டு பிடிக்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மேற்படி ஒட்டகப்பால், ஒட்டக இறைச்சி ஏற்றுமதியின் மீதான ஆர்வம் குறைந்து போனது. கடந்த சில வருடங்களாக 'துபாய்' மீண்டும் பால் ஏற்றுமதியில் நாட்டம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
முதன் முதலில் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த மிருக வைத்தியராகிய உல்ரிச் வேர்னறி(Ulrich Wernery) என்பவரே இத்திட்டத்தை முன்மொழிந்தார்.
(தொடரும்)
நன்றி: Samvirke juli 2011
1 கருத்து:
Very interesting. Thanks for the essentials
கருத்துரையிடுக