சனி, ஜூலை 16, 2011

யாமறிந்த மொழிகளிலே

ஆக்கம்: சுஜிதா கண்ணன், 
கனடா.
தேமதுரத் தமிழோசை
கடந்த வாரம் இளையராஜா அவர்கள் ஒரே 'மெட்டினை' இரு வெவ்வேறு மொழித் திரைப்படங்களில் உபயோகித்திருந்தமையைப் பற்றிப் பார்த்தோம். அதேபோல் அவர் 1980 ஆம் ஆண்டில் இசையமைத்த 'ஜானி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற S.ஜானகி அவர்கள் பாடிய "காற்றில் எந்தன் கீதம்" எனும் பாடல் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாகிப் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. அந்தப் புகழ் தந்த போதையை மறக்கமுடியாத இளையராஜா அவர்கள் அப்பாடலின் மெட்டினை அண்மைக் காலத்தில்(1996 ஆம் ஆண்டில்) ஹிந்தித் திரைப்படமொன்றில் உபயோகித்திருந்தார். ஒரு படமோ அல்லது பாடலோ மிகவும் பிரபலமாகினால் அதனை ஆங்கிலத்தில் Master work அல்லது Masterpiece என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பாடலை திரும்பவும் அதே மெட்டுடன் உருவாக்க முயற்சிப்பது முன்பு கிடைத்த புகழைக் காற்றில் பறக்க விடும் செயல் மட்டுமன்றி முன்பு பாடிய பாடகியின்/பாடகரின் புகழை மங்கச் செய்யும் ஒரு செயலாகும் என்பது எனது அபிப்பிராயம். ஏ.ஆர்.ரஹ்மான், 'தேவா' போன்றவர்கள் ஒரே மெட்டில் இரண்டு பாடல்களைப் போட்டால் சரக்குத் தீர்ந்துவிட்டதா? எனக் கேள்வியெழுப்பும் 'இசை உலகம்' இதற்கு என்ன பதில் சொல்கிறது? உங்கள் கருத்தையும் அறிய விரும்புகிறேன். இந்தப் பாடல்களைப் பற்றிய விபரங்களைத் தந்துதவிய எனது தங்கை 'விஜிதா கமல்' அவர்களுக்கு எனது நன்றிகள்.

முதலாவது பாடல்

பாடல் இடம்பெற்ற திரைப்படம்:
ஜானி 

வெளிவந்த ஆண்டு:
1980

பாடியவர்:
S.ஜானகி 

மொழி:
தமிழ்

காணொளி உதவிக்கு நன்றி: halimali


இரண்டாவது பாடல்காணொளி உதவிக்கு நன்றி: Satabisha

பாடல் இடம்பெற்ற திரைப்படம்:
Aur Ek Prem Kahani

வெளிவந்த ஆண்டு:
1996


பாடியவர்:
ஆஷா போன்ஸ்லே

மொழி:
ஹிந்தி

3 கருத்துகள்:

selvan சொன்னது…

congratulation sugitha

V.Gopalsamy, Kampala (Uganda) சொன்னது…

Nice songs selection.

Mohan, Denmark சொன்னது…

மிகவும் இனிமையான பாடல்கள்.சுஜிதாவிற்கும் அந்திமாலைக்கும் பாராட்டுக்கள்.

கருத்துரையிடுக