சனி, அக்டோபர் 28, 2017

இன்று நள்ளிரவில் நேர மாற்றம் மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (28.10.2017)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்படும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது. 
அமெரிக்கக் கண்டத்தில்(கனடா உட்பட) இந்த நேர மாற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி(05.11.2017) நள்ளிரவில் நடைபெற இருப்பதும் ,  

அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியா) இந்த நேர மாற்றம் கடந்த 01.10.2017 அன்றும் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்கது
அன்புடன் 
-நிர்வாகி- 
அந்திமாலை இணையம் 
டென்மார்க் 

புதன், அக்டோபர் 18, 2017

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், வாசகப் பெருமக்களுக்கும் எமது உளங்கனிந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
மிக்க அன்புடன்
-நிர்வாகி-
அந்திமாலை இணையம்
 

புதன், செப்டம்பர் 20, 2017

7 ஆவது ஆண்டில் உங்கள் அந்திமாலை

இணைய உலகில் கால் பதித்து ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து எட்டாவது  ஆண்டை நோக்கிப்
பயணிக்கும் இந்த நாளில் (20.09.2017) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை வழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம். 
"ஒன்றுபட்டு உயர்வோம்"
உளமார்ந்த அன்புடன் 
-நிர்வாகி- 
அந்திமாலை இணையம் 
டென்மார்க். 
www.anthimaalai.dk 

சனி, மார்ச் 25, 2017

இன்று நள்ளிரவில் நேர மாற்றம் மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் 25.03.2017 சனிக்கிழமை
நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 26.03.2017
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)  ஐரோப்பாவில் 'நேரமாற்றம்' நிகழ்கிறது என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து வைத்தபின் உறங்கச் செல்லுதல்  சாலச் சிறந்தது. 
ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த
12.03.2017 அன்று நிகழ்ந்தமையும், அவுஸ்திரேலியாவில் இந்த நேரமாற்றம்(கோடை காலத்துக்கான நேர மாற்றம்) எதிர்வரும் 02.04.2017 அன்று நிகழ உள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இங்ஙனம் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை இணையம் 

புதன், மார்ச் 08, 2017

மரண அறிவித்தல்

இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம் அல்லைப்பிட்டி 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 'பிரகாசம்' என்று அழைக்கப் பட்ட திரு.அபிராம்பிள்ளை சிவப்பிரகாசம்
தோற்றம்: 16.02.1930
மறைவு : 08.03.2017
அவர்கள் இன்றைய தினம்(08.03.2017) யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அபிராம்பிள்ளை, இக்னேஸியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவக்கொழுந்து( 'அல்லைப்பிட்டி ஆச்சி' ) தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தெய்வானையின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற செல்லத்துரை(நவ்வி , வவுனியா), காலஞ்சென்ற சாந்தா லூசியா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாருமதிதேவி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கமலாதேவி, சற்குணானந்ததேவி(அல்லைப்பிட்டி), பரிமளகாந்தன்(MSO, பிரதம தபால் அலுவலகம் யாழ்ப்பாணம்), விமலாதேவி('சேதா', லண்டன், U.K) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், லிங்கதாசன்(சமூக நலத்துறை, ஒல்போ பல்கலைக் கழகம், டென்மார்க்), லிங்கவாசன், லிங்கேஸ்வரி, சதீஸ்வரன்('வெற்றிமாலை எண்டர்பிரைசஸ்', யாழ்ப்பாணம்), சிவகாம சுந்தரி(வவுனியா) திரிபுர சுந்தரி((ஆசிரியை, இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலை, கிளிநொச்சி),  திரிலோகசுந்தரி(ஆசிரியை, அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்), கோபிகா(உயிரியல் துறை, யாழ் பல்கலைக் கழகம்), நிஷானி(மருத்துவத் துறை,St George's University of London) சமந்தா(லண்டன், U.K), நிலானி(லண்டன், U.K) ஆகியோரின் அன்புப் பேரனும். காலஞ்சென்ற சொர்ணலிங்கம், காலஞ்சென்ற வீரசிங்கம்(பேரின்பநாதன்), திருவேங்கட வல்லி(யாழ்ப்பாணம்), ஞானசூரியன்(லண்டன் U.K), ஆகியோரின் அன்பு மாமனாரும், தனுஷ்காந், கிருஷ்ணவி, சரண்யா, ஹாரீஸ் ராம், துஷாரா, மிதுஷாலினி, மிதுஷங்கர் ஆகியோரின் அன்புப் பூட்டனும், காலஞ்சென்றவர்களான சின்னத் தங்கச்சி(அல்லைப்பிட்டி), இராசம்மா(யோகபுரம், மல்லாவி), தங்கம்மா(விசுவமடு), காலஞ்சென்ற நாகம்மா(மண்டைதீவு) மற்றும் கனகம்மா(மண்டைதீவு), காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் (மண்டைதீவு), செல்லத்துரை/சாத்திரியார்(விசுவமடு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (வியாழக்கிழமை 09.03.2017) பிற்பகல் 2:00 மணியளவில் 2 ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் படும். உற்றார், உறவினர், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தகவல்:
இரா.சொ.லிங்கதாசன்(பேரன்) டென்மார்க்.
தொலைபேசி : 0045-98 40 80 05
0045 - 21 91 27 52

தொடர்புகளுக்கு: 
சாருமதி(மகள்) : 0094- 713-462-341
சற்குணானந்ததேவி(மகள்) : 0094 - 766-212-755
பரிமளகாந்தன்(மகன்) : 0094- 718-485-198
விமலாதேவி / சேதா (மகள்) : 0094 - 772- 085- 441 (Current Number)          

சனி, ஜனவரி 14, 2017

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும். இந்தப் பொங்கல் திருநாளும் இனிவரும் நாட்களும் உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என வாழ்த்துகிறோம்.
"ஒன்றுபட்டு உயர்வோம்"

மிக்க அன்புடன் 
ஆசிரியர் 

-அந்திமாலை

ஞாயிறு, ஜனவரி 01, 2017

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2017 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.


"ஒன்றுபட்டு உயர்வோம் "
மிக்க அன்புடன் 
-ஆசிரியர் -அந்திமாலை