திங்கள், ஏப்ரல் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய எல்லாம் ஒருங்கு. (343)

பொருள்: ஐவகைப் புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும். ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட்டு விட வேண்டும்.

இன்றைய பொன்மொழி

ராமகிருஷ்ண பரமஹம்சர்

பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதே மானுடத்தின் உயரிய பண்பு. பிறருக்கு நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிருப்பாயாக!

’என் வீட்டுத் தோட்டத்தில்’


என் வீட்டுத் தோட்டத்தில் அவ்வப்போது எடுத்த 
புகைப்படங்களின் தொகுப்பு

தங்க மஞ்சள் அரளியில்
செடி முழுக்க கொத்து கொத்தாகப்
பூத்து மஞ்சள் காடோ என
அதிசயிக்க வைக்கும் காட்சி!


அதில் ஒரே ஒரு கொத்து மட்டும்.


இரங்கூன் கிரீப்பர் என்று சொல்லப்
படும் இக்கொடி மேலிருந்து சரம்
சரமாகக் கீழே தொங்கும் இரகம்!
வாசலுக்கு அழகு சேர்க்கும்!


இரவில் மலரும் போது
வெண்மையாகவும் பகலில் ரோஸ்
நிறமாகவும் மாறும்.

                                                                           
மரமாக வளரக்கூடிய இதன் பெயர்
தெரியவில்லை ;போன்சாய் போல
தொட்டியில் வளர்த்த போது ...

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டியற் பால பல. (342)

பொருள்: துன்பம் இல்லாத வாழ்க்கையை விரும்பினால், ஆசைகளையெல்லாம் விட்டு விட வேண்டும். அப்படி விட்டுவிட்ட பின் இவ்வுலகில் அடையக் கூடிய இன்பங்கள் பலவாகும்.

இன்றைய சிந்தனைக்கு

பைதகரஸ் 

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும். எந்த விடயத்தையும் "ஏன்" என்ற கேள்வியுடன் நோக்கத் தெரியாதவன் பகுத்தறிவு உள்ள மனிதன் அல்ல.

சனி, ஏப்ரல் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன் (341)


பொருள்: ஒருவன் எந்தெந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
இன்றைய பொன்மொழி

சுவாமி விவேகானந்தர்

கஷ்டத்திலும் நேர்மையாய் இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உன் வாழ்நாளிலே அதன் பயனைக் காண்பாய்.

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?

ஆக்கம்:தோழன் மபா,சென்னை ,தமிழ்நாடு.

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் படித்த போது, கூட படித்த ஒரு நண்பரின் பெயர் சிட்டுக்குருவி (நாங்கள் வைத்த செல்லப் பெயர்). மனுசன் மகா சுறுசுறுப்பு அதனாலயே அந்த பெயர வச்சோம். திண்டுக்கல்லிலிருந்து வருவார். கூடவே தலைப்பாகட்டி பிரியாணியும் வரும். (ஹூம்... அதெல்லாம் ஒரு காலம்!)

சரி, இந்த பதிவுக்கு அவர் ஒரு 'லீடு' மட்டும்தான். விஷயத்திற்கு வருவோம்.

நவீன மயமாக்கலில் அழிந்து வரும் உயிரினங்களில் 'சிட்டுக்குருவி'யும் ஒன்று. சிட்டுக்குருவிகளை நாம், நமது வாழ்வில் சந்தோஷம் மற்றும் சுதந்திரத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கின்றோம்.

அழியும் குருவிகள்.
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்று சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நன்பனான சிட்டுக் குருவி சங்க இலக்கியங்களில் பாடப் பெற்ற உயிரினம் ஆகும். பாரதியார் தனது கவிதைகளில் சிட்டுக் குருவியின் பெருமைகளை பாட மறக்கவில்லை.
காகங்களை போல மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அறிவுத் திறன் கொண்டது சிட்டுக்குருவிகள். சிதறிய தானியங்களை தலையை சாய்த்து சாய்த்து அது தின்னும் அழகே அழகு!.

அழிந்து வரும் சிறு உயிரினங்களில் சிட்டுக் குருவி மட்டுமல்லாமல் பல்வேறு குருவி இனங்களும் அழியும் தருவாயில் இருக்கிறது.

அதுவும் அறுவடை காலம் என்றால் குருவிகளுக்கு கொண்டாட்டம்தான். எங்கள் ஊரில் வயல் வரப்புகள் ஊடே இரயில் பாதை நீண்டு இருக்கும். இரு புறமும் தந்தி மரங்கள், இரயில் பாதையை தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்கும். தந்திக் கம்பிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி,கருவாட்டுவாலி, மீன் கொத்தி, நானத்தான் குருவி (மைனா), அக்கா குருவி, பச்சைக் கிளி, என்று ரகத்திற்கு ஒன்றாய் குருவிகள் வரிசை கட்டி அமர்ந்து இருக்கும்.
வயலில் ஆட்கள் நெற்கதிர்களை அறுக்க அறுக்க, அதிலிருந்து பூச்சிகள், வெட்டுக்கிளி, அந்துப் பூச்சி, தட்டான், என்று வித விதமான பூச்சிகள் பறக்கத்தொடங்கும். வரிசை கட்டி காத்திருக்கும் குருவிகள் பறந்து பறந்து பூச்சிகளை வேட்டையாடும். பிறகு தந்தி கம்பங்களில் அமர்ந்து கொள்ளும்.
அத்தகைய கவின் மிகு காட்சிகள் ஆயிரம் இலக்கியத்திற்கு சமம்!.

சில துணிச்சலான சிட்டுக்குருவிகள் மட்டும் ஆட்கள் நெற் கதிர்களை அறுத்து போடும் இடத்திற்கு அருகிலேயே நின்றுக் கொண்டு பூச்சிகளை பிடிக்கும்.

அரி காடை (அறுத்து போட்ட அரிகளில் அமர்ந்து இருக்கும் அதனாலயே அந்த பெயர்), கவுதாரி, கானாங் கோழி போன்ற பறக்க இயலா கோழியினங்கள் அறுவடை நடைபெறும் வயல்களில் மனிதர்களிடமிருந்து கூப்பிடு (ம்) தூரத்தில் இருந்துக் கொண்டு புச்சிகளை பிடிக்கும். இத்தகைய அரிய குருவியினங்கள் இன்று அழிவின் பிடியில் சிக்கியுள்ளது.

மொபைல் போன்களால் ஆபத்து.

களங்கள், வீட்டு முற்றம், மளிகை கடைகள், தானியத் தோட்டங்கள், உணவு தானியங்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகள், தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், வீட்டின் கூரை என்று மனிதன் புழங்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிட்டுக்குருவிகள் மொபைல் போன் களின் வருகையால் 90 சதவீதம் அழிந்துவிட்டன என்கின்றன ஆய்வுகள்.

மொபைல் போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது. அதோடு மீதமுள்ள குருவிகளின் கருப்பையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மெல்ல மெல்ல அருகி வரும் சிட்டுக்குருவியை காப்பது நமது கடமை.

குருவிகளை காக்கும் வழி.

1 பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அடிப்பதை தவிற்போம்.
2 சிறிய வீடானாலும், அபார்ட்மெண்டானாலும் குருவிகளை பாதுகாக்க சிறிய தோட்டங்களை பால்கனியில் அமைக்கலாம்.
3 வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து குருவிகளுக்கு உணவிடலாம்.
4 குருவிகள் குடிக்க சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.
5 முக்கியமாக ஜன்னலில் வந்தமரும் குருவிகளை 'அச்சூ' என்று விரட்டாத மன நிலை வேண்டும்.

'காக்கை குருவி எங்கள் ஜாதியென்ற பாரதியின் கனவை புத்துயிர் பெறச் செய்வோம்'.


குறிப்பு:இக்கட்டுரை கடந்த 20.03.2010 அன்று உலக சிட்டுக்குருவிகள் தினத்திற்காக எழுதப்பட்டது.


◦ நன்றி:www.tamilanveethi.blogspot.com

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் 
துச்சில் இருந்த உயிர்க்கு. (340)

பொருள்: நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு நிலையாகத் தங்கியிருப்பதற்குரிய வீடு இதுவரையில் அமையவில்லை போலும். 

இன்றைய பொன்மொழி

பிளேட்டோ

'பணம்' என்ற செல்வத்தைத் தேடி உலகம் முழுதும் அலையவேண்டாம். பல துறைகளில் அறிவு இருப்பதே உலகில் கிடைத்தற்கரிய செல்வமாகும்.

இதுதான் வாழ்க்கை!


ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு 10 நிலைகளை வகுத்து தந்துள்ளார் வள்ளலார். அவை...
 
1. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
2. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சுகமாக வாழவேண்டும் என்றும் எண்ண வேண்டும்.
3. உலகில் உள்ள எல்லோரும் இன்பமாய் வாழவேண்டும் என்ற உயரிய எண்ணம் வேண்டும்.
4. மனிதனைவிட குறைந்த அறிவுடைய விலங்குகள் மீதும் கருணை காட்ட வேண்டும்.
5. பறவை, ஊர்வன என அனைத்தையும் நேசிக்க வேண்டும்.
6. புழு, மீன் ஆகியவற்றிடம்கூட இரக்கம் காட்ட வேண்டும்.
7. ஓரறிவு உயிர்கள் வாடினால்கூட நாம் வாட வேண்டும்.
8. எல்லா உயிர்களையும் தம் உயிர் என நினைத்துப் பழக வேண்டும்.

* இவை புற வாழ்வு தொடர்பான எட்டு நிலைகளாகும். அடுத்த இரண்டு நிலைகளில் இறை வழிபாட்டுச் சிந்தனை தோன்றி விடுகிறது.
9. எல்லா உயிர்களும் இறைவன் வாழும் நிலையங்கள் என்று எண்ணி அவற்றுக்குத் தொண்டு புரிந்து வாழ்வதே இறைவழிபாடு என்று நினைப்பது.
10. இறைவழிபாட்டின்படி வாழ்ந்து இறுதியில் கருணைமயமான இறைவனோடு இரண்டறக் கலந்து மரணமில்லாத பெருவாழ்வு அடைவது.
* இந்த பத்து நிலைகளையும் நாம் உடனே பின்பற்ற முடியாவிட்டாலும், அவற்றை பின்பற்ற முயற்சியாவது செய்யலாமே..?
நன்றி: இதயபூமி 

வியாழன், ஏப்ரல் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு. (339)

பொருள்: உலகில் மனிதன் இறப்பது தூங்குவதற்கு ஒப்பாகும். மறுபடியும் அவன் பிறவி எடுப்பது என்பது தூங்கி விழித்தெழுந்த நிலையோடு ஒத்திருக்கும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

ஒரு துளி பேனா மை பத்து லட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

நோய் தீர்க்கும் ஆடாதோடா

சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது. ஆடாதோடைவின் முருத்துவ பெயர் (Adhatoda zeylanica) ஆகும்.
இது உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.இவைகளுடன்மேலும் 

புதன், ஏப்ரல் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் துஅற்றே
உடம்போடு உயிர்இடை நட்பு. (338)  

பொருள்: உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டுக்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது. கூட்டைத் தனியே விட்டு பறவை எந்த நேரத்திலும் பறந்து போய் விடும்.

இன்றைய சிந்தனைக்கு

மாவீரன் நெப்போலியன் 

இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாய் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கும் நல்லவர்களால்தான்.

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
கோடியும் அல்ல பல. (337)

பொருள்: அறிவற்றவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணில் எண்ணும் அளவோ ஒரு கோடியும் அல்ல; மிக்க பலவாகும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

கோபத்தை வெளிக்காட்டும் வார்த்தைகளை ஆவேசமாக அள்ளிக் கொட்ட முற்படும் நாவைக் காத்து, ஒரு முறை பேச முன்னர் இரு முறை யோசி.

நாடுகாண் பயணம் பிரெஞ்சுக் கயானா

நாட்டின் பெயர்:
பிரெஞ்சுக் கயானா (French Guiana)
*இது ஒரு சுதந்திர நாடு அல்ல. பிரான்ஸ் நாட்டின் ஆட்சிக்குள் உட்பட்டிருக்கும் கடல் கடந்த பிரதேசங்களுள் ஒன்று.பிரான்ஸ் நாட்டின் 28 வட்டாரங்களுள்(Departments) ஒன்றாகவும் கணிக்கப் படுகிறது.

*தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரேயொரு சுதந்திரமடையாத பிரதேசம்.


வேறு பெயர்கள்:
பிரெஞ்சு மொழியில் குய்அனே(Guyane)
*இதன் அண்டை நாடுகளாக 17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஸ்பானிஷ் கயானா(தற்போதைய பெயர் 'வெனிசுவெலாவில் கயானா பிராந்தியம்/Guayana Region in Venezuela), அதற்கு அடுத்ததாக பிரித்தானியக் கயானா(தற்போதைய பெயர் கயானா/Guiana), அதற்கு அடுத்ததாக நெதர்லாந்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஆனால் 1970 களில் விடுதலை அடைந்த டச்சுக் கயானாவும்(தற்போதைய பெயர் சூரினாம்/Suriname) அமைந்துள்ளன.  


அமைவிடம்:
தென் அமெரிக்கா(வட அத்திலாந்திக் சமுத்திரக் கரையோரம்) 


எல்லைகள்:
தெற்கு மற்றும் கிழக்கில் - பிரேசில் 
மேற்கில் - சூரினாம் 


ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் நாடு:
பிரான்ஸ் 


தலைநகரம்:
கையேன்னே(Cayenne)


ஜனாதிபதி/அரசுத் தலைவர்:
ரொடெல்பே அலெக்ஸாண்ட்ரே(Rodolphe Alexandre)*இது 24.04.12 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


கடல் கடந்த பிரதேசத்திற்கான ஆளுநர்:
அலெயின் டீன் லியோங்(Alain Tien-Liong) *இது 24.04.12 அன்று உள்ள நிலவரம் ஆகும்.

பரப்பளவு:
83,534 சதுர கிலோ மீட்டர்கள் 
*இது இலங்கையை விடவும் பரப்பளவில் பெரிய பிரதேசமாக இருப்பினும் சுதந்திர நாடாக இல்லாமல் பிரான்ஸ் நாட்டின் ஆட்சிக்குள் உள்ளது.


சனத்தொகை:
217,000 (2009 மதிப்பீடு)
*இலங்கையை விடவும் மிகப்பெரிய நிலப் பிரதேசமாக இருப்பினும் சனத்தொகை சுமாராக இரண்டு லட்சம் மட்டுமே. உலகில் சனத்தொகை அடர்த்தி மிகவும் குறைவான நாடுகள்/பிரதேசங்கள் வரிசையில் முன்னணியில் உள்ளது. சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2.6 பேர் ஆகும்.


மொழிகள்:
பிரதான மொழி பிரெஞ்சு, அதனை விடவும் நூற்றுக் கணக்கான பிரதேச மொழிகள் அங்கீகரிக்கப் படாமல் உள்ளன.

கல்வியறிவு:
83%

ஆயுட்காலம்:
ஆண்கள் 74 வருடங்கள்  
பெண்கள் 81 வருடங்கள்

சமயம்:
ரோமன் கத்தோலிக்கம்


இனங்கள்:
கறுப்பர் அல்லது முலாட்டோக்கள் 66%
வெள்ளையர் 12%
கிழக்கிந்தியர், சீனர், அமேர் இந்தியர் 12%
ஏனையோர் 10%

இயற்கை வளங்கள்:
போக்ஸிட், நியோபியம், தந்தாலம்,பெட்ரோலியம், களிமண்(பாத்திரங்கள் செய்யப் பயன்படும் களிமண்), தங்கம்(பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டு விட்டது), மரம், மீன்.

விவசாய உற்பத்திகள்:
சோளம், அரசி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, கொக்கோ, காய்கறிகள், வாழைப்பழம், ஆடு, மாடு, பன்றி, கோழி.
ஏற்றுமதிகள்:
இறால், மீன், மரம், தங்கம், ரம்(மதுபானம்), துணிகள், வாசனைத் திரவியங்கள்.

தொழிற்துறைகள்:
கட்டிடங்கள் கட்டுதல், இறால், மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்தல், காடுசார்ந்த உழைப்பு, மதுபானம் தயாரிப்பு(ரம்), தங்கம் தோண்டி எடுத்தல்(தங்கச் சுரங்கம்)

அடிக்கடி நிகழும் இயற்கை அனர்த்தங்கள்:
இடியுடன் கூடிய புயல். கடும் மழை, வெள்ளப் பெருக்கு.

ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

நேற்றைய தினம் டென்மார்க்கில் நடைபெற்ற நூல் அறிமுக விழா புகைப்படங்கள்

அந்திமாலையின் ஆசிரியர்.திரு.இ.சொ.லிங்கதாசன் அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.

'நடிக வினோதன்' திரு.த.யோகராஜா அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார்.
நேற்றைய தினம்(21.04.2012) டென்மார்க்கில் ரணாஸ்(Randers) நகரில் உள்ள 
'போபரேத பாடசாலை' மண்டபத்தில் நடைபெற்ற 'பெயரிடாத நட்சத்திரங்கள்' கவிதை நூல் அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காண்கிறீர்கள். புகைப்படங்களைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு புகைப்படங்களின் மீது அழுத்தவும்.
புகைப்படங்கள்: அந்திமாலையின் நிருபர்.செ.பாஸ்கரன் 


இலக்கிய விமர்சகர் திரு.சி.ராஜகோபாலன் அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.

விழாவிற்கு வருகை தந்தவர்களில் ஒரு பகுதியினர்


விழாவிற்கு வருகை தந்தவர்களில் ஒரு பகுதியினர் 
திரு.தி.சிறீதரன் அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார்.

பேராசிரியர் ஆதவன் அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.
கவிஞர் எம்.சி.லோகநாதன் அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.

அலைகள் இணைய ஆசிரியரும், பிரபல எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமாகிய திரு.கி.செல்லத்துரை அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.

நூலின் முதற் பிரதியை விழா ஏற்பாட்டாளர் திரு.கரன் நடராஜா அவர்களும், நூலின் தொகுப்பாசிரியை திருமதி.ரஞ்சனி(சுவிட்சர்லாந்து) அவர்களும் வெளியிட்டு வைக்க முதற் பிரதியைப் பெற்றுக் கொள்ளும் திரு.சந்திரன் அவர்கள்.
நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றும் ரணாஸ் நகரைச் சேர்ந்த திரு.சந்திரன் அவர்கள்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. (336)   

பொருள்: நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையாகிய தன்மையை உடையது இவ்வுலகம்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயல வேண்டும். இதன் மூலம் எல்லாம் வல்ல பரம்பொருளின் அருள் எம்மை நிறைவாக வந்தடைகிறது.


தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கு?


உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உணவு என்றால் அது தாய்ப்பால்தான். இதற்கு இணையான பொருள் எதுவும் இல்லை. பிறந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அருமருந்தாக செயல்படுகிறது. தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.
பிரசவித்த தாய்மார்கள் அனைவருக்கும் தாய்பாலில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்திருப்பதில்லை. அது தெரியாத காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு தாய் பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர் சிலர். தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்பவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
பச்சிளம் சிசுக்கள்
பிறந்த சிசுக்களுக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் தாய்ப்பாலில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். ஆனால் பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது.
பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ whey புரோட்டீன். இந்த whey புரோட்டீன் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. இந்த புரோட்டீன்தான் பச்சிளம் குழந்தைகளுக்கு பொருத்தமான வகை புரோட்டீன். ஆனால் மேலும் 

பெண் பார்க்கும் படலம்

இரண்டு வருடங்களாகத் தேடியும், அவன் மனதிற்குப் பிடித்த மாதிரி பெண் அமையாததில் வெறுப்புற்றிருந்தான் குமார். அதற்கு முக்கிய காரணகர்த்தா, அவன் அப்பாவின் நம்பிக்கைக்குரிய குடும்ப சோதிடர்.

'ஜாதகப் பொருத்தமில்லை' என்று காரணம் சொல்லியே பெரும்பாலான பெண் ஜாதகங்களைத் தள்ளுபடி செய்வதில் குறியாக இருந்தார் அவர்.

ஒரு காலத்தில் நல்ல வருமானம் ஈட்டித் தந்த அவரது தொழில், தற்காலத்தில் பெருகி வரும் காதல் திருமணங்களால் சுத்தமாகப் படுத்துவிட்டது. மேலும் கணிணியில் 'சாப்ட்வேர்' போட்டு ஜாதகம் கணிக்கும்(!) இக்காலத்தில், தம்மிடம் வரும் ஒன்றிரண்டு நபர்களின் திருமணம் விரைவில் முடிந்து விடக்கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாயிருந்தார்.

"7க்குடைய புதன் ராகுவுடன் சம்பந்தப்பட்டு, 2ம் இடத்தில் இருப்பதால் களத்திர தோஷம் உள்ளது. 4ல் செவ்வாய் அமர்ந்து தோஷம் அடைந்துள்ளது" என்று ஏதேதோ சொல்லி குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார்.

"மாமா, இந்தச் செவ்வாய், புதன் எல்லாம் அவங்களுக்குப் புடிச்ச இடத்துல சஞ்சரிச்சிட்டுப் போகட்டும். அவங்களைத் தொந்தரவு பண்ணாதீங்க. எனக்குக் கொஞ்சம் கருணை காட்டுங்க" என்று அவ்வப்போது அப்பாவிற்குத் தெரியாமல் தனியே சந்தித்து குமார் அளித்த 'சன்மான'த்தினால், போனால் போகிறது என்று பெரிய மனது பண்ணி, ஜாதகங்கள் ஒன்றிரண்டு பொருந்துவதாக எடுத்துக் கொடுப்பார்.

அறிவுமதி என்ற பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தபோது, தனது கற்பனை கதாநாயகி கிடைத்துவிட்டாள் என்று அகமகிழ்ந்தான் குமார். பெயருக் கேற்றாற்போல் அறிவும் அழகும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற வளாகவே அவள் இருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.

பெண் பார்க்கப் போன இடத்தில், காரில் துவங்கி கைக்கடிகாரம் வரை, அவன் அம்மா கேட்ட வரதட்சிணைப் பட்டியலைக் கேட்டு மலைத்துப் போன அப்பெண், " கார் கேட்டீங்க சரி. உங்க மகனுக்குச் சொந்தமா ஒரு கைக்கடிகாரம் வாங்கிக்கக் கூடவா துப்பில்லை?" என்று கேட்டு விட்டாள். முகத்தில் காறித் துப்பாத குறைதான்!.

'நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டு விட்டாளே!', என்று புலம்பியவன், "அம்மா, இனிமே வரதட்சிணை அது இதுன்னு கேட்டு நீங்க வாயே திறக்கக்கூடாது" என்று உத்தரவு போட்டுவிட்டான். இப்போதெல்லாம் அம்மா, பெண் வீட்டில் சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறப்பதோடு சரி.

அதற்குப் பிறகு வந்த ஏழெட்டு வரன்களும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மாலதி என்ற பெண்ணைப் பார்த்தபோது ஓரளவுக்குத் திருப்தியேற்பட்டது. இந்த வரன் முடிந்து விடும் என்ற நம்பிக்கையேற்பட்ட நிலையில், அவன் அப்பா சும்மாயில்லாமல், "உங்கப் பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா?" என்று வழக்கமாகத் தாம் கேட்கும் கேள்வியைக் கேட்டுவிட்டார்.

அதைக் கேட்டதும், அவள் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

"எங்கப் பொண்ணை வைச்சுக் கூத்துப் பட்டறையா நடத்தப் போறீங்க? அவளுக்கு எது முக்கியமாத் தெரியணுமோ, அதை நான் கத்துக் கொடுத்திட்டேன்" என்றார், அவன் அம்மாவைப் பார்த்து முறைத்தபடி.

வாயைத் திறந்து அவரை ஏதோ மேலும் 

சனி, ஏப்ரல் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (335)

பொருள்: மேல் மூச்சு, நாக்குத் தழுதழுத்தல் போன்ற மரண உபாதைகள் வருவதற்கு முன்னே வேகமாக நற்கதி பெற நல்லறம் செய்யவேண்டும்.

இன்றைய பொன்மொழி

பிளேட்டோ

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான். கடமையைச் செய்தால் வெற்றி, கடமைக்குச் செய்தால் தோல்வி.

நிலவில் தமிழன் கால் வைக்கும் நாள்உலகில் வெறும் இரு நூறு ஆண்டுகள் வரலாற்றினை உடைய ஆஸ்திரேலியா இன்று உலகமே வியந்து நோக்கும் வண்ணம் சகல துறைகளிலும் முன்னேறியிருக்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டி போடுமளவிற்கு, அமெரிக்க நாணயப் பெறுமதியினை அடிக்கடி முந்தும் அளவிற்கு வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நாடு தான் ஆஸ்திரேலியா. நம்ம தமிழர்களின் வரலாறு என்ன என்று கேட்டால் நாம் அனைவரும் வாய்ல இருந்து சீத்துவாய் ஊத்தா குறையா "கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி” அப்படீன்னு ஒரு வசனத்தை திரும்ப திரும்ப பேசி, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இனம் தமிழினம் அப்படீன்னு சொல்லி எம் பெருமையை நாமே பீத்திக்குவோம். 

ஆனால் வெள்ளைக்காரங்க சொல்லை விட எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதனால எல்லா துறைகளிலும் துரித கதியில் வளர்ச்சி காண்றாங்கோ. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஓர் இனத்தால மூனுக்குப் (நிலாவுக்கு) போக முடியலை எனும் போது வெட்கமா இல்லையா? எம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சுக்கனுமுங்க. தமிழர்களின் ஒரே பண்பு என்ன தெரியுமா? எதற்குமே ஓர் எல்லை வைப்பது. இத்துப் போன கலாச்சாரப் பண்பிலிருந்து விலக முடியாது இந்த வழியில் தான் நாம வாழ்வோம் என அடம் பிடிப்பது. இந்தப் பண்புகள் உள்ள வரை எந்த ஜென்மத்திலும் தமிழனால முன்னேறவே முடியாதுங்க. 

முதல்ல இந்த கேவலமான குணங்களை தூக்கி குப்பையில போடனுமுங்க. எம்மில் நூற்றுக்கு 99 வீதமான தமிழர்கள் பெற்றோர் சொற்படி, எம் முன்னோர் சொற்படி எதற்குமே ஓர் எல்லை வைத்து வாழ்வதையே பழக்கமாக கொண்டிருக்கிறோம். கல்வி என்றாலும் சரி, வாழ்க்கை என்றாலும் சரி ஓர் கோடு கீறி அதன் மேலே வாழ்றோமுங்க. உதாரணமா ஒருத்தன் கம்பியூட்டர் டிகிரி படிக்கிறான் என்றால் அவன் டிகிரி முடிச்சதும் எப்படா வேலை கெடைக்கும் என்று தேடிக்கிட்டு இருப்பான். வேலை கிடைச்சதும் அந்த வேலையே கதி என்று கிடந்து காலத்தை ஓட்டிக்குவான். பொத்தாம் பொதுவா அநேக தமிழர்கள் இப்படித் தானுங்க.

டிகிரிக்கு அப்புறமா மாஸ்டர்ஸ் மேலும் 

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (334) 

பொருள்: வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்வினைப் பெற்றவர்க்கு, 'நாள்' என்பது ஒரு கால அளவைப் போலத் தன்னைக் காட்டி உயிரின் வாழ்நாளைச் சிறிது சிறிதாக அறுக்கும் வாள் என்பது விளங்கும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

கடினமான செயலின் சரியான பெயர்தான் 'சாதனை'. முட்டாள்கள் அதற்குக் கொடுக்கும் தவறான விளக்கம் 'கடினம்'.

பக்தியென்னும் படிகளேறி....மாதங்களில் மார்கழியான இறைவன்... விடியற்காலையிலேயே எழுப்பும் பாடல்கள்... சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை கேட்கும் ஆந்திரக் கோயில்கள்...
தையிலே தைப்பூசம் - நடந்தே செல்லும் பக்தர்கள் கூட்டம். மாசி, பங்குனி என்று உற்சவங்களும், வெயிலில் வெறுங்காலுடனே கலசம் ஏந்திச் செல்லும் அன்பர்கள்..... பங்குனி, சித்திரைகளில் தேர்த்திருவிழாக்களும் மற்றைய இறை கல்யாண வைபோகங்களும்.... வருஷா வருஷம் நடக்கும் நிகழ்ச்சியானாலும் குவியும் மக்கள் கூட்டம்!

எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக பக்தி!!

என்னைப் பொறுத்தவரை இறைசக்தி உண்டென்று நம்புகிறேன். அந்த சக்தியை எந்த வடிவில் வேண்டுமானாலும் கும்பிடலாம். இறைவன்/இறைவி இந்த வடிவில் கும்பிட வேண்டும் என்பது அவரவர் விருப்பமே. என் ஆங்கிலோ-இந்தியத் தோழி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போகும் தோழியரைப் பார்த்து, "என்ன, சர்ச்சுக்கா?" என்று கேட்பார்; அவரைப் பொறுத்த வரை இறைவன் குடியிருக்கும் இடத்துக்கு சர்ச் என்று பெயர்!!

இறைசக்தியைக் குறித்த இந்த  மேலும் 

வியாழன், ஏப்ரல் 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். (333) 

பொருள்: செல்வம் நிலைக்காத இயல்பினையுடையது. அத்தகைய செல்வத்தைப் பெற்றால், நிலையான அறங்களை அப்போதே செய்ய வேண்டும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

'விதி' என்றால் என்ன? சர்வாதிகாரி கொடுமை புரியப் பயன்படுத்தும் ஆயுதம், தோல்விக்கு முட்டாள் கூறும் சமாதானம்.

டென்மார்க்கில் நூல் அறிமுகம்


குடிப்பழக்கத்தை மறக்கத் தீர்வு


லேசாக உடம்பு காய்ந்தால், உடனே பாராசிட்டமால்...தலை வலித்தால் ஏதேனும் ஒரு பெயின்கில்லர்...தும்மினால் மாத்திரை, இருமினால் மருந்து...
அளவின்றி, அறிவுரையின்றி எடுத்துக்கொள்கிற எந்த மருந்தும், உயிருக்கே உலை வைக்கிற ஆபத்தில் முடியலாம் எனத் தெரிந்தும், யாருக்கும் அக்கறையில்லை. எடுத்ததற்கெல்லாம் மருத்துவரையும், மருந்துகளையும் தேட நினைக்கிற மக்களின் மனப்பான்மையை மாற்றும் முயற்சியாக ‘வீட்டுக்கொரு சித்த உணவியல் நிபுண’ரை உருவாக்கும் புதுமையான முயற்சியில் இறங்கியிருக்கிறார் சித்த மருத்துவர் அருண் சின்னையா. ‘நோயற்ற வாழ்க்கைக்கு மட்டுமின்றி, பிழைப்புக்கான ஒரு வழியாகவும் அமையும் சித்த உணவியல் துறை’ என்கிறார் அவர்.


‘‘நாம குடிக்கிற தண்ணீர்லேர்ந்து, சாப்பிடற ஒவ்வொரு உணவுக்கும் ஒரு மருத்துவக் குணம் உண்டு. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாடி எழுதப்பட்ட ‘பதார்த்த குண சிந்தாமணி’ங்கிற புத்தகத்துலயே இதுக்கான குறிப்புகள் இருக்கு. நாகரிகம் என்ற பேர்ல மாறிப் போன விஷயங்கள்ல முதலிடம் நம்ம உணவுப் பழக்கத்துக்குத்தான்.
பெருசா, குண்டா இருக்கிற அரிசிதான் சத்தானது. சத்தே இல்லாத, மெல்லிசான, பாலிஷ் போட்ட அரிசியைத்தான் நாம விரும்பறோம். வைட்டமின் இல்லை, கால்சியம் கம்மினு நாமளாவே மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடறோம். நம்ம வீட்டு சமையலறைக்குள்ள இருக்கிற மிளகு, சீரகம், வெந்தயத்துக்கு எந்த சத்து மாத்திரையும் இணையாகாது’’ என்கிற டாக்டர் அருண் சின்னையா, தொடர்ந்து சொல்கிற தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.
‘‘குடிப்பழக்கத்தை மறக்கடிக்க இன்னைக்கு என்னென்னவோ சிகிச்சைகள் செய்யறாங்க. குடிக்கிறவங்களுக்கு தினம் 100 கிராம் சிறுபருப்பையும், ஏதாவது ஒரு கீரையையும் சேர்த்துக் கடைஞ்சு கொடுத்தாலே, குடிக்கணும்ங்கிற எண்ணம் மாறும். பருப்புக்கு அப்படியொரு மகத்துவம் உண்டு.
அதேபோல உடல் பருமன்... தினம் காய்கறி சாலட்டையோ கீரையையோ ஒருவேளை உணவா சாப்பிட்டா, கணிசமான எடை குறையறதைப் பார்க்கலாம். எடை ஏறக்கூடாதுனு நினைக்கிறவங்க, அடிக்கடி ஓட்டல்ல ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடறதைத் தவிர்க்கணும்.
‘ஜங்க் ஃபுட்’ மோகத்துலேர்ந்து குழந்தைங்களை எப்படி மீட்கறதுங்கிறது எல்லா பெற்றோருக்கும் மிகப்பெரிய கவலையா இருக்கு. அந்த உணவுகளை சாப்பிடறதால உடனடியா அவங்களோட ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவு குறையுது. பார்வைக்கோளாறு வருது. அலர்ஜி தாக்குது. அந்தக் குழந்தைங்களுக்கும் தினம் ஒரு கீரையும் பருப்பும் ஃப்ரெஷ் ஜூசும் கொடுத்துப் பழக்கப்படுத்தினா, ஜங்க் ஃபுட் மோகத்துலேர்ந்து மீட்கலாம். இது ஒருநாள், ரெண்டு மேலும்