புதன், ஏப்ரல் 11, 2012

மரணங்கள் சில...

நான் பார்த்த மரணங்கள் பற்றி பதிவு எழுதவேண்டுமென்று நெடுநாளாய் யோசித்து வைத்திருந்தேன்.மரணம் பற்றி பதிவு எழுத போகிறேன் என நண்பர்களிடம் கூறியதற்கு.. அப்படியெல்லாம் பதிவு வேண்டாம் என்றார்கள். ஆனால் எனக்கு எழுதவேண்டுமென்றே தோன்றியது. மரணம் பற்றி பேசுவதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்..? என்றோ ஒரு நாள் மரணம் நம்மை நேசம் கொள்ளத்தான் போகிறது... பிறகு என்ன..பேசுவதற்கு தயக்கம் ?? 

தூங்கிகொண்டிருக்கும் பொழுதே நம் உயிர் பிரிந்து விட வேண்டும். நோய் நொடி இல்லாத மரணம் நிகழ வேண்டுமென்பது நம்மில் பலரது ஆசையாக இருக்கும். மரணம் கூட ஒரு வகை வரம் தான். நம் கண்முன்னே நிகழும் மரணங்கள் எப்போதும் மறக்க முடியாத நிகழ்வாய் மாறிவிடும். அப்படி எனக்கு முன் நடந்த நிகழ்வுகளை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.வாருங்கள்...

நான் சந்தித்த நிகழ்வுகளை கூறும் முன் என் தாத்தாவின் அப்பா இறந்த கதை பற்றி சொல்கிறேன். எங்கள் தாத்தா எங்களிடம் அடிக்கடி கூறிய கதை இது. எங்கள் தாத்தாவின் அப்பா மழை பெய் என்றால் மழை பெய்யுமாம். அப்படி ஒரு சக்தி அவரிடம் இருந்ததாம். தான் இறந்து போகப்போகிறோம் என்பது அவருக்கு முன்பே மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக