ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 11, 2012

ஆன்மீகம் - 10


ஆக்கம்:வேதா இலங்காதிலகம், டென்மார்க்



ஐந்து டமைகள்.


கடமைகள் ஐந்து இஸ்லாம் கொண்டது.
கலிமாவெனும் மூல மந்திரம், தொழுகை,
கருத்துடை நோன்பு, ஜகாத், ஹஜ்;
கணக்காய் இஸ்லாமியர் பின்பற்றுவார்.
அல்லாஹ் தொழுவதற்குரியவர், முகம்மது
அல்லாஹ்வின் இறுதித் தூதுவர் என்று
உறுதியாய் நம்பி நடத்தலும் அதை
உண்மையாய் மொழிதலும் கலிமாவாகும்.
நாளும் ஐந்து வேளை தொழுகை
நல்ல ஒன்பதாம் மாதம் ரம்லான்
நாட்கள் முழுவதும் நோன்பு இருத்தல்.
நோன்பும் தொழுகையும் இரகசியமல்ல
இருக்கும் செல்வம் நாற்பதில் ஒன்றை
இல்லாதோருக்கு ஆண்டு தோறும் வழங்குதல்
இனிய ஜகாத் எனும் கடமையாம்.
இணைத்து நடப்பார் வாழ்வை வெல்ல.
வசதி வாய்ப்பும் இணைந்தால் மக்காவிற்கு
வாழ்நாளிலொரு முறை யாத்திரையாகுதல்
வாய்த்திடும் ஹஜ் எனும் கடமையாகும்.
ஏய்த்திடலின்றி வாழ்தல் நிறைவாகும்.

வெள்ளி, மே 04, 2012

ஆன்மீகம் - 9

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


ஆன்மீகச் சிந்தனைகள்.
இறைவனைக் கோயிலிலும் வணங்கலாம், வீட்டிலும் வணங்கலாம். கோயிலில் அதே மனநிலை கொண்டவர்களின் மன அதிர்வுகள் சுவர்களில் எதிரொலிக்க, கோயிலின் சூழலும் ஒரு மனக்கோலத்தை உருவாக்குகிறது. அதனால் மனதிற்கு மகிழ்வு அமைதி கிட்டுகிறது.
இறைவனுக்குத் தொண்டு (ஊழியம்) செய்வது என்றுமே வீணாகாது. காரணம் தொண்டினால்(தெய்வ வழிபாடு) அதீத மன வலிமை பெறலாம்.
திருமொழிகள் போன்ற திருமுறைப் பதிகங்களை இறைவன் திருவடி எண்ணி ஒரு முறையேனும் ஓதினால் வாழ்வில் திருப்தி கிடைக்கும். திருப்பமும் நேரும்.
முதிர்ந்த இறை பக்தர்கள் இறைக்கும் ஆன்ம சிந்தனைகள், மன ஆறுதலையும், இறைபக்தியையும் தரவல்லன. பாலைவன மனங்களில் அருள் நீர் இறைக்கும் உணர்வு தருபவை.

வெள்ளி, மார்ச் 30, 2012

ஆன்மீகம் - 8


தஞ்சைப் பெரிய கோயில்…..

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


நெஞ்சை உயர்த்தி நிற்கும்
விஞ்சும் இந்தியப் பெருமை
தஞ்சைப் பெரிய கோவில்.
இராஐராஐனின் உருவாக்கம்.
கட்டிடக் கலையின், தொழில்
நுட்ப அறிவின் வியப்பு!…..
அடுக்கடுக்காகப் பாறைகள் சேர்த்து
அடுக்கிய உருவகம் கோயிலாம்.
யிரத்து நான்கில் ஆரம்பம்.
ஆயிரத்துப்பத்து வரை கட்டிய
ஆறுவருட அளப்பரிய சாதனை.
கட்டுமானத் தலைமைப் பொறியியலாளராய்
கட்டியவர் குஞ்சரமல்லராம்.
தெய்வபக்தியுடை மனிதசக்திகளால்
செய்திட்ட தமிழின் உன்னதம்.
சோழப் பேரரசின் முத்திரை.
மூன்றடி உயர லிங்கபீடம்
ஐம்பத்தைந்து அடி சுற்றளவாம்.
ஆறு அடி கோமுகத்துடன்
ஒரே கல்லில் உருவாக்கியதாம்(?)
இருநூற்றிப்பதினாறடி உயர
கோயில் விமானமாம். ஆயிரம்
வருட இந்திய ஓவியங்களின்
சேகரிப்புக் குவியல்கள் உள்ளேயாம்.
ந்தியாவின் நெற்றிப்பட்டமாக இது
குந்தியிருப்பதிது தஞ்சாவூரில்.
இரண்டாயிரத்தப் பத்தாம் வருடம்
ஆயிரமாம் பிறந்தநாள் நிறைவு.
பிரகதீஸ்வலர் ஆலயம் என்பர்.
உலக மரபுச் சின்னமென்பது
யுனெஸ்கோவின் அங்கீகாரமாம்.
தஞ்சைப்பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

ஆன்மீகம் - 7


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

திட்டமான தேவ உதயம்


தேவாலயமணி ஓசைகள்

தேவகீத இசைவில்,
தேவதைகள் பூச்சொரிய
தேவபாலன் உதிக்கிறார்.

தேய்ந்தவரை ஆதரித்து

தேவ நற்கருணை தர,
தேவ நன்நாளிலே
தேவ கிருபை நிறைகிறது.

ரிய பாக்கியமிதுவே

மரியாள் மைந்தன்
தரிசனமே, மகிழ்வு
விரிய வைக்கிறது.

போதுமெனும் வரையில்

புண்ணிய தினத்திலே
போற்றுவோ மவன் கருணை.
பொக்கிசமான தேவகருணை.

மாட்டுத் தொழுவத்தில்

காட்டிய அற்புதம்
திட்டமான தேவ உதயம்,
ஒளிவட்டமானது உலகில்.

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

ஆன்மீகம் - 6

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
இறைவனை நினைக்க


(இசையோடு  பாட.. )
றைவனை நினைக்க இதயம் இளகும்.
சிறையெனும் வாழ்வின் குறைகள் மறையும்.
மறைகள் ஓதி மாண்புற வாழ்ந்தால்
நிறைவு பெருகும் நிம்மதி நிலவும்.  
   (இறை)

விடைகள் நோக்கா வேத முதல்வர்
சடையில் கங்கை சதுரத்தில் மங்கை.
படைகள் இன்றி பாதம் ஊன்றும்
குடையின் கீழே குடிகள் சிறக்கும்.
     ( இறை)

முக்கண் முதல்வன் முன்னின்றெமக்கு
தக்க கணத்தில் இடுக்கண் களைவான்.
தக்கன் மகளைத் தன் துணையாக
பக்கலில் ஆக்கிய அர்த்தநாரீசுவரன்.
    (இறை).

வெள்ளி, அக்டோபர் 21, 2011

ஆன்மிகம் - 5

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.


        ஆலயம் 


தேவசபையாக ஆலயம் விளங்க
தேவராசர்களாக தெய்வங்களை நினைந்து
தேவாரப் பண்களால் ஆராதனை செய்து
தேவதாசர்களாய் தொண்டு செய்கிறோம்.  (தேவசபை)
செய்வினை, வெற்றி, தோல்வி கூறி
பெய்திடு அருளென வேண்டும் ஆலயம்.
உயத்;திட உலகில் வழிகள் திறக்க
கொய்திடும் வினைகளின் ஊதியக் கந்தோர். (தேவசபை)
ஆசீர்வாதம் கூலியாகும் அருளரங்கம்
ஆன்மஞானம், ஆன்மசுத்தி பெறுமரங்கம்
ஆன்மா ஈடேறும் முயற்சியரங்கம்
ஆலயமாம் புனித இறை சந்நிதானம்.     (தேவசபை)

வெள்ளி, அக்டோபர் 14, 2011

ஆன்மீகம் - 4


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

ஆயர்குலத்தான். 
யர்குலத்தான் காரணப் பெயரான்
ஆயர்பாடியில் ஆளாகினாண்டி.
ஆயர்கள் தெயவமாய்த் தவழ்ந்தவனை
ஆலிங்கனம் செய்வோம் பக்தியாலடி.  (ஆயர்…)

தொந்தரவான காட்டுத் தீயை விழுங்கி
அந்தரத்து ஆயரின் ஆநிரையை
தந்திரமாய்க் காத்த ஆயர்பாடியான்,
மந்திரக்காரன் மாயக் கண்ணனடி.     (ஆயர்...)

ந்திரன் பேய் மழை பெய்விக்க
பிந்தாது மலையைக் குடையாக்கி
மந்தைகள் – ஆயரைக் காத்தாண்டி.
முந்தை வினை போக்கும் முகுந்தனடி.  (ஆயர்…)

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

ஆன்மீகம் - 3


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.


சரஸ்வதி துதி.   
ம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்                                                                                              ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஒம்
சுந்தர வதனி சுகுண மனோகரி மந்தகாசமுடை மதிவதனி
   எனும் ராகத்தில்……)
சிந்து பாடும் அடியார்கள் கரங்கள்
ஏந்தி உன்னைத் தொழுதிடவே
காந்த ஒளியுடை அருள் முகத்தோடு
சிந்திடுவாய் உன் காட்சியினை…..                      ( ஓம் சக்தி ஓம் )
ந்துகளான தேவர்கள், பாணர்கள்
வந்து புடை சூழ அலங்காரமாக
துந்துபி நாதங்கள் ஒலித்திடவே
சுந்தரமாயிங்கு வந்திடுவாய்.                                    (ஓம் சக்தி ஓம்…)
ரமுடை வீணை அணியாக
உரமுடன் வாழ்ந்திட நூலொன்று
கரத்தினில் ஏந்திய மதுரவாணி
பிரம்மவிலாசினி வருவாய் அருள்வாய்.          (ஓம் சக்தி ஓம்…)
லர்ந்த தாமரை ஆசனம்அமர்ந்த
அலர்ந்த முகத்தழகு நாயகி
அறிவின் அரசி அர்ச்சிக்கிறோம்.
அற்புத நாயகி சரணம் சரணம்.                                ( ஓம் சக்தி ஓம்….)
ரஸ்வதி பூசையென்பதால் இசையெடுத்து, யேர்மனிய சிறுமி காயத்திரி சிவநேசன் இலண்டன் தமிழ் வானொலியில் பாடினார் )

புதன், செப்டம்பர் 28, 2011

ஆன்மிகம் - 2


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
சக்திகளின் இரவுகள்

க்திகளின் இரவுகள் நவராத்திரி. முத்தியுடை முதல் மூன்றும் வீரஇரவுகள். ஆண்டி முதல் அரசனும் ஆதரிப்பது. ஆங்காரம் அழித்து அனுக்கிரகமாவது. ஆளும் வினை பொடிக்கும் சூலக்காரிமகிசாசுரமர்த்தனியின் மகாராத்திரி.மகாசக்தி காளியின் தைரிய இரவுகள்.
மகாதேவி துர்க்காவின் மூன்று இரவுகள்.
செல்வத்திருமகளின் நடு மூன்று இரவுகள்செயங்கள் சேர்க்கும் ஐசுவரிய இரவுகள்.செந்தாமரை நாயகிக்குச் சேவைகள் புரிந்துசெழிப்பை, அதிஷ்டத்தைத் தனதேவியிடம்செறிவான நவமணி நுகர்ச்சி தேடல்.செல்வம் குவியென திருமால் நாயகியிடம்சேர்த்தவை காத்து, வரங்கள் கேட்கும்
சொர்ண சொரூபி இலட்சுமியின் இரவுகள்.

டை மூன்றிரவுகள் வெண்கலை வாணியின்
கடாட்சம் குவித்து கலைகளை வேண்டுதல்.
கல்வி முதலாம் காணும் கலைகள்
நல்கும் கலைமகள், படைப்போன் நாயகி.
எல்லா வித்தைகளும் விஐயதசமியில்
வித்யாரம்பமாய் நவராத்திரி முடியும்.
வெண்மலர்த் தேவி, ஞான வாணியை

வேண்டுவோர் விருப்பு வெற்றியாய் முடியும்.
(2007 ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியில் திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களால் வாசிக்கப்பட்டது)