ஞாயிறு, ஏப்ரல் 21, 2019

உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துகள்!


மண்டைதீவில் இலவச மருத்துவ முகாம்!

அன்பார்ந்த மண்டைதீவு, அல்லைப்பிட்டி வாழ் மக்களே!
இன்றைய தினம் (21.04.19 ஞாயிற்றுக் கிழமை ) மண்டைதீவில் நடைபெறவுள்ள இந்த இலவச மருத்துவ முகாமில் மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி மக்களும் கலந்து கொள்ளலாம் எனவும், பார்வைக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் 150 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடியும் வழங்கப் படவுள்ளது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆகவே தேவை உள்ள பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


செவ்வாய், ஏப்ரல் 09, 2019

வருடாந்த திருவிழா விஞ்ஞாபனம்

அல்லைப்பிட்டி இனிச்ச புளியடி முருகன் ஆலய வருடாந்த திருவிழா சித்திரை - 2019 


சனி, மார்ச் 30, 2019

இன்று நள்ளிரவில் நேர மாற்றம் மறக்க வேண்டாம்.

இன்றைய தினம் (30.03.2019 சனிக்கிழமை) 
நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு
( 31.03.2019 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)  ஐரோப்பாவில் 'நேரமாற்றம்' நிகழ்கிறது என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். 
இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து வைத்தபின் உறங்கச் செல்லுதல்  சாலச் சிறந்தது. 
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நேர மாற்றத்தை முற்றாக நிறுத்தி, ஒரே நேரத்தை தொடர்வது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் விவாதம் நடைபெற்று வருவதும் குறிப்பிடத் தக்கது.
ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த 10.03.2019 அன்று நிகழ்ந்தமையும், 
அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியாவில்) இந்த நேரமாற்றம்(கோடை காலத்துக்கான நேர மாற்றம் / நேரக்குறைப்பு) எதிர்வரும் 07.04.2019 அன்று நிகழ உள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இங்ஙனம் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை இணையம்.