ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

உங்கள் அனைவருக்கும் நன்றி

கடந்த 20.09.2010 ல் நானும் எனக்கு வேண்டிய சிலரும் இணைந்து டென்மார்க் நாட்டில் கூகுளின் வலைப்பக்கத்தில்(Blog) இணைந்து 'அந்திமாலை' (www.anthimaalai.dk) எனும் பெயரில் ஒரு இணையத்தை ஆரம்பித்தோம். அக்டோபர் 2014 வரை மிகவும் வெற்றிகரமாக இயங்கிய எமது இணையத்தின் செயற்பாட்டை தவிர்க்க முடியாத சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் எமது


பழைய பதிவுகளை கூகுள் தேடு பொறியின்(Search Engine) மூலம் தேடிக் கண்டு பிடித்து அதைப் படிப்பதற்காக வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. அந்த அளவிற்கு சுமார் 1700க்கு மேற்பட்ட தரமான ஆக்கங்களை எமது செயற்பாட்டுக் காலத்தில் பதிவிட்டுள்ளோம் என்பதில் பெருமை அடைகிறோம். 2014 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆறு வருடங்களாக எமது 'அந்திமாலை இணையம்' ஒரு தேக்க நிலையில் இருப்பினும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.💗🙏🙏🙏 எங்கள் பத்தாவது ஆண்டு நிறைவில் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"

🙌


மிக்க அன்புடன்

இரா.சொ.லிங்கதாசன்

-நிர்வாகி- 

www.anthimaalai.dk

அந்திமாலை இணையம் 

டென்மார்க்