சனி, ஆகஸ்ட் 31, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 84 பேதைமை

மையல் ஒருவன் களித்துஅற்றால் பேதைதன் 
கைஒன்று உடைமை பெறின். (838)
பொருள்: பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால் அவன் நிலைமை, பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போன்றதாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பொறாமை ஒரு கொடிய குணம். அது ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் செல்வத்தை அழிப்பதோடு அவனைத் தீய வழியிலும் செலுத்தும்.

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை
 
 
ஏதுஇலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை. (837)

பொருள்: பேதை பெருஞ்செல்வம் அடைந்தபோது தொடர்பில்லாத பலர் நன்றாக அனுபவிப்பர், ஆனால் அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.

இன்றைய பொன்மொழி

அன்னை தெரேசா

பிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வரவேண்டுமானால் அத் துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.

வியாழன், ஆகஸ்ட் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப் 
பேதை வினைமேல் கொளின். (836)
 
பொருள்: செயல்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அச்செயல் முடிவு பெறாமல் போய்விடும்; அவனும் குற்றவாளியாகித் தளை(உடல் முழுவதும் சங்கிலியாற் பிணைக்கும் விலங்கு) பூணுவான்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்

இளைஞர்களே! பெருஞ்செயல்களைச் செய்து
முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள்.
ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும்
இரக்கம் காட்டும் போது, நமக்கு மரணமே வாய்த்தாலும் கூட,
அவர்களுக்கு இரக்கம் காட்டுவதே நமது லட்சியமாக இருக்கட்டும்.

புதன், ஆகஸ்ட் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும் 
தான்புக்கு அழுந்தும் அளறு (835)
 
பொருள்: ஏழு பிறப்புகளிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தை, பேதை தன் ஒரு பிறவியிலேயே தேடிக் கொள்ளுவான்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

உன்னிடம் இல்லாததைப் பற்றிக் கவலைப்படுவது; உன்னிடம் உள்ளதை வீணடிப்பதற்குச் சமம் ஆகும்.

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

நன்றி: இருவர்உள்ளம்

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான்அடங்காப் 
பேதையின் பேதையார் இல். (834)
 
பொருள்: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும், தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதை போல வேறு பேதையர் இல்லை.

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

34. தர்மம் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது?
 தர்மம் மனிதனின் முயற்சியில் நிலைபெறுகிறது.

35. புகழ் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது?
 புகழானது ஒரு மனிதனின் தானத்தில் நிலைபெறுகிறது.

36. சுவர்க்கம்(சொர்க்கம்) எதில் முக்கியமாக நிலைபெறுகிறது?
 சொர்க்கம் என்பது மனிதனின் சத்தியத்தில் நிலைபெறுகிறது.

சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

சர்க்கரை நோய்க்கு  நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து  சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

நாம் உண்ணும் உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும்.   அரிசி, கோதுமை ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகம் இருந்தாலும் கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து  (fibre content)  சக்கரையின் அளவு  இரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.


சாப்பிட வேண்டியவை
 காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. 
முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.

 வெங்காயத்தின் முக்கியமான பயன்... மேலும் 

திங்கள், ஆகஸ்ட் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

நாணாமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்
பேணாமை பேதை தொழில். (833)
பொருள்: பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின்(அறிவிலியின்) தொழில்கள் ஆகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

அனைத்திலும் குறைகளைக் காண முற்பட்டால்; உறவினர்கள் கூட நம்மை நாட மாட்டார்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 84 பேதைமை

பேதைமையுள் எல்லாம் பேதைமை; காதன்மை 
கையல்ல தன்கண் செயல். (832)
பொருள்: ஒருவனது பேதைமை(அறியாமை) எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, தனக்கு ஆகாத ஒழுக்கத்தின் கண் விருப்பத்தைச் செலுத்துதல்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து  

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
 உங்கள் ஒளி சக மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றி புகழ்வார்கள்.

சனி, ஆகஸ்ட் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு 
ஊதியம் போக விடல் (831)
 
பொருள்: பேதைமை(அறியாமை) எனப்படுவது யாதென்றால் அது தனக்குக் கெடுதியானவற்றைக் கைக்கொண்டு(எடுத்துக் கொண்டு) ஊதியமானதைக்(நன்மை தரும் விடயத்தைக்) கைவிடுதல் ஆகும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

தான் உண்மையாக நேசிக்கும் பெண்ணை, ஒருவனால் வெற்றி கொள்ளவே முடியாது.

தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.


ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

நன்றி: nikalvu.com

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 83 கூடா நட்பு

பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு 
அகநட்பு ஒரீஇ விடல். (830)
பொருள்: பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக் கொண்டு, உள்ளத்தில் போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்.

இன்றைய பொன்மொழி

புத்தர்

முன்னேறிக் கொண்டேயிரு! முறையற்ற ஒரு செயலைச் செய்துவிட்டதாக நீ நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். அவை போன்ற தவறுகளை நீ முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளேதான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும். உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். இலட்சியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு!

வியாழன், ஆகஸ்ட் 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு
 
மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து 
நட்பினுள் சாப்புல்லல் பாற்று. (829)

பொருள்: புறத்தில் நட்புச் செய்து அகத்தில் நம்மை இகழும் பகைவரை நாமும் அவரை மகிழச் செய்து அத்தொடர்பை விலக்கிக் கொள்ள வேண்டும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

பிறர் குறைகளை உன்னிடம் கூறுபவன் நிச்சயமாக உன் குறைகளையும் பிறரிடம் கூறுவான் என அறிந்து கொள்.

நன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்

தூக்கமின்மை காரணமாக மனிதனுக்கு 80 வகையான பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கார் விபத்துக்களில் 33 சதவீதமான விபத்துக்கள் சரியான தூக்கம் இல்லாததால் தான் ஏற்படுகின்றன. இன்றைய காலத்தில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குறிப்பாக சாக்லெட், இனிப்புகள் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டால், மனம் சந்தோஷம் அடைகிறதே தவிர, சரியான தூக்கம் மட்டும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா- அவைகளில் கார்போ ஹைட்ரேட் அதிகமாக உள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், அவை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

எனவே தான் இரவில் தூங்கச் செல்லும் முன், இந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர். மேலும் தூக்கமின்மை அதிக வேலைப் பளு மற்றும் குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாகவும் தடைபடும். எனவே என்னதான் பிரச்சினை இருந்தாலும், உடலைப் பாதுகாக்க வேண்டியது நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.

எனவே அதனை உணர்ந்து, பிரச்சனையைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இருந்தாலும் சில நாட்களில் இந்த 8 மணிநேரத் தூக்கம் நமக்கு இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட நாட்களுக்கு மறுநாள் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாமல், ஒருவித வருத் தத்துடனேயே மனம் மற்றும் உடல் இருக்கும்.

ஆகவே தூக்கமின்மை எதற்கு வருகின்றது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அதனை சரிசெய்ய முயல வேண்டும். ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகளால் கூட தூக்கமின்மை ஏற்படும். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை தவிர்த்து வந்தால், சரியான தூக்கத்தைப் பெறலாம். முதலில் தூக்கத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்து கொள்ளலாம்.

அதிகமான தண்ணீர் குடிப்பது நல்லது தான். ஆனால் காலை மற்றும் மதிய வேளையில் தான் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். மாலை மற்றும் இரவு வந்தால், தண்ணீர் குடிக்கும் அளவு குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். அதனால் நமது உறக்கம் தடைபடும். அடுத்து காப்பைன் உணவுகள் எப்படி நமது உறக்கத்தை பாதிக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்..

ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு வடிவில் காப்பைன் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வோம். அதிலும் டீ, காப்பி, சாக்லேட் மற்றும் ஊக்க பானங்கள் போன்றவற்றை நிச்சயம் சேர்ப்போம். இத்தகைய உணவுப் பொருட்களில் தான் காப்பைன் அதிகம் உள்ளது. இவை நம்முடைய நரம்புகளைத் தூண்டி மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தும்.

ஆனால் உண்மையில் அந்த சுறுசுறுப்பு சோர்வின் வெளிப்பாடு தானே தவிர உண்மையான புத்துணர்ச்சி அல்ல. அதனால் காப்பைன் அதிகமாக இருக்கும் பானங்களை அளவோடு அருந்துவது நமது உறக்கத்திற்கு நல்லது. மது அருந்தினால் உடலில் வறட்சி ஏற்பட்டு, தூக்கத்தை ஏற்படுத்தும் செரோட்டின் அளவு குறையும். அதனால் சரியான தூக்கம் இல்லாமல், அடிக்கடி நடு இரவில் எழுவது போன்றவை ஏற்படும்.

புரோட்டீன் உணவுகள்..........

 புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான மாட்டு இறைச்சியை, இரவில் படுக்கும் போது சாப்பிட்டால், அவை செரிமானம் ஆவது கடினமாகிவிடும். அதனால், செரிமான செயல்பாடுகளால், செரோட்டின் உற்பத்தியானது தடைபட்டு, தூக்கம் தடைபடும். வாயு மற்றும் நெஞ்செரிச் சலை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிட்டு தூங்கினால், வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, நல்ல தூக்கம் வருவது நின்றுவிடும்.

எனவே தூக்கம் நன்கு வரவேண்டுமெனில் கார உணவுகள் மற்றும் வாயுவை ஏற்படுத்தும் உணவுகளான பட்டாணி, பீன்ஸ் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் குழந்தை பருவம் மகிழ்ச்சி யாக அமையாதவர்களுக்கு, நடுத் தர வயதில், இதயநோய் வர வாய்ப்பு அதிகம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில், 377 பேரிடம் நடத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகுபவர்களுக்கு, அவர்கள் நடுத்தர வயதாகும் போது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஏழு வயதில், அதிகமான மனச்சுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு, அவர்களின் நடுத்தர வயதில், இதயநோய் வருவதற்கு, 31 சதவீதம் வாய்ப்பு உள்ளது, என்கிறது அந்த ஆய்வு. அதே சமயம், ஆண்களுக்கு, 17 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தை பருவத்தில், நல்ல கவனிப்பும், மகிழ்ச்சியான சூழலும் அமைபவர்களுக்கு, இதயநோய் வர வாய்ப்பு குறைவு என்கிறது இந்த ஆய்வு.

முறையான தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து ஒருவார காலத்திற்கு ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

 இந்த ஆய்வுக்காக 26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர் களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒருவார காலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.

இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே போதுமான தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தூக்கமின்மை காரணமாக, இதயநோய்கள், சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், குறைவான மூளைச் செயற்பாடு ஆகியவை உருவாகலாம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை..
நன்றி: www.muruganandam.in

புதன், ஆகஸ்ட் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் 
அழுதகண் ணீரும் அனைத்து. (828)
பொருள்: பகைவர்கள் கூப்பித் தொழும் கையுள்ளும் கொலைக்கருவி(ஆயுதம்) மறைந்திருக்கும். அவர்கள் அழுத கண்ணீரும் அவ்வாறே கொல்வதற்கு உரியதாக இருக்கும்.

இன்றைய சிந்தனைக்கு

 மூத்தோர் சொல்

அடுத்தகணம் நமக்கு எதுவும் நடக்கலாம். ஆனாலும் ஏதோ பல்லாயிரம் வருடங்கள் வாழப்போவதுபோல எங்கள் திமிரும் ,ஆணவமும் இதுபோன்ற மனவழுக்கும் இதனால் நிம்மதியின்மையும் கடைசிவரை எங்களுடனே வருகிறது........ முடிவில் திரும்பி பார்க்கும் போது வாழ்க்கை என்பது வெறுமையாகவே இருக்கும்.

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க; வில்வணக்கம் 
தீங்கு குறித்தமை யான் (827)
பொருள்: வில்லின் வளைவு தீமையைக் குறியாகக் கொண்டது.இவ்வாறே பகைவர்களுடைய பணிவான சொல்லும்(வணக்கம் சொல்லுதல் மற்றும் பணிவான பேச்சு) தீமை தரும் என்று தள்ளிவிட வேண்டும்.

திங்கள், ஆகஸ்ட் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் 
ஒல்லை உணரப் படும். (826)

பொருள்: நண்பர்போல நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத்தன்மை விரைவில் உணரப் படும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

உள்ளங்காலில் இருக்கும் அழுக்கை அகற்றுவதற்கு முன்னால் உனது உள்ளத்தில் இருக்கும் அழுக்கை அகற்றிக்கொள்.

கவுண்ட மணி பற்றிய அரிய சுவையான தகவல்

சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!.

கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை.

ஆனால், பேச்சில் முற்போக்கான மேற்கோள்கள் தெறிக்கும்.

`பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

பாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார்.

`16 வயதினிலே’ தான் அறிமுகப் படம்!

அம்மாவை `ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார்.

வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டுத்தான் நகர்வார்.

மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது.

அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!·

மிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.


இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.
கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரி’ என்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்–கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!


உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!·

சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!


கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப்பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

புகைப் பழக்கம் அறவே கிடையாது.

வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி!

கவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார்.

நாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!
· கவுண்டருக்கு எந்தப்பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது.

`என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா!’
என்பார்.

சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்று வேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார்.!

கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ `வரவு எட்டணா செலவு பத்தணா’, `நடிகன்’,

அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

`மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார்.

ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார்.

ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகுகுணமானார் கவுண்டர்.
அப்போது மருந்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

நன்றி : பறையோசை

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும் 
சொல்லினால் தேறற்பாற்று அன்று. (825)
பொருள்: மனத்தால் தம்மோடு பொருந்தாதவரை அவர் கூறும் சொற்களைக் கொண்டு எத்தகைய செயலிலும் நம்பி ஈடுபடக்கூடாது.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து



4. நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
5. இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
6. தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக்காண்பர்.

சனி, ஆகஸ்ட் 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும். (824)
பொருள்: கண்டபோது முகத்தால் இனியவாகச் சிரித்து, எப்போதும் மனத்தால் துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை விட்டு விட வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

இருண்ட வானிலே மின்னல் தோன்றுவது போல துர்க்குணமாகிய இருள் சூழ்ந்தவன் நெஞ்சிலும் நற்குணமாகிய ஒளி தோன்றத்தான் செய்யும்.

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு
 
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் 
ஆகுதல் மாணார்க்கு அரிது. (823)

பொருள்: நல்லனவாகிய பல நூல்களைக் கற்ற போதிலும் அதனால் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை.

இன்றைய பொன்மொழி

நபிகள் நாயகம்

பிச்சை எடுப்போரை இறைவன் விரும்பவில்லை. நம் முயற்சிகளுக்குத் தக்க பலனை இறைவன் அருளுகிறான் என்பதை மறந்து விடாதே.

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

இனம்போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும். (822) 
பொருள்: இனம் போலவே இருந்து(எமது உறவினர் போலவே பழகினாலும்) இனம் அல்லாதாரின் நட்பு, விலை மகளிர்(பணத்துக்காகத் தம் உடலை விற்கும் பெண்கள்) மனம் போல, பெறுகிற பயனுக்குத் தகுந்த படி மாறி விடும். 

இன்றைய பொன்மொழி

புத்தர் 

நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக.
உயர்ந்த ஒரு
லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது
பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். அடுத்தவரின் உயர்ந்த லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். உயர்ந்த ஒரு லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் முயல வேண்டாம்.

புதன், ஆகஸ்ட் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு. (821)
பொருள்: உள்ளத்தில் நெருக்கமில்லாமல் பழகுகிறவரது நட்பு, நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால் எறிதற்கு உரிய பட்டடையாகும்.(நம்மைத் தீயில் போட்டு எரிக்கக் கூடிய உலைக்கல் ஆகும்)

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

"பிறகு படித்துக் கொள்ளலாம், இந்த வேலையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இதைக் கடைசியாகச் செய்து முடித்து விடலாம்" என்று பேசுகிறவர்கள் தமக்குத் தாமே துரோகம் செய்வது மட்டுமன்றி தமக்குத் தாமே விரோதிகள் ஆகின்றனர். இவர்களது வாழ்க்கையை பிறர் அழிக்க வேண்டிய தேவை இல்லை.

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. (820)
 
பொருள்: வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொது மன்றில்(சபையில்) பழித்துப் பேசுபவரின் நட்பு, நம்மைச் சிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

28. எல்லா உயிர்களுக்கும் தலைவன் யார்?
 எல்லா உயிர்களுக்கும் தலைவன் அக்கினி 

29. எந்த அறம் நிலையானது?
 மோட்சத்திற்கு ஏதுவான தர்மத்தின் வழி நிற்கும் அறமே நிலையானது.

30. அமிர்தத்திற்கு நிகரானது எது?
 அமிர்தத்திற்கு நிகரானது பால்

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 82 தீ நட்பு


கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு 
சொல்வேறு பட்டார் தொடர்பு. (819)

பொருள்: சொல்வது வேறு செய்வது வேறு என ஒன்றுக்கொன்று வேறுபட்டவருடைய நட்பானது நனவில் மட்டுமல்லாமல் கனவிலும் துன்பம் தரும் என்பதாம்.