சனி, ஆகஸ்ட் 10, 2013

தலை முதல் கால் வரை இயற்கை அழகு குறிப்புகள்

• முகத்தை தினமும் நான்கு முதல் ஐந்து முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

• முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு வாரம் ஒரு முறை பெண்கள் ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

•  முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்க மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மிகவும் சிறந்த பழங்கள். கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, இந்த பழங்களை கொண்டு  மாஸ்க் போட்டு வந்தால் முகம் பொலிவுறும்.

• தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

• சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

• எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

• கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும். 
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.

நன்றி: மாலைமலர்
தலை முதல் கால் வரை அழகாகத் தோன்ற கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

கூந்தல்: எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

வாரம் ஒரு முறை: எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும்.

மாதம் ஒரு முறை: மேலே உள்ளது போல் எண்ணெயை தடவவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும்.

முகம்: வாழைப்பழத்தை நன்றாக மசித்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது முகத்திற்கு பட்டுப்போன்ற மென்மையும், பளபளப்பும் தரும். இனி அளவுக்கு அதிகமாக பழுத்த வாழைப்பழங்களை எறிய வேண்டிய அவசியமும் இல்லை! அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்று சேர்ந்தால் விளைவு, பருக்கள்தான்! இதை தடுக்க ஒரே வழி முகத்தை சுத்தமாக வைப்பது. இதற்காக முகத்தை அடிக்கடி கழுவவும்.

கண்கள்: கண்களைச் சுற்றி கருவளயங்கள் இருந்தால், சோர்ந்த தோற்றத்தை உங்களுக்கு தரும். இதை தவிர்க்க
- See more at: http://www.tamilkathir.com/news/4752/58//d,full_article.aspx#sthash.X83J84cj.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக