சனி, ஆகஸ்ட் 24, 2013

தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.


ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

நன்றி: nikalvu.com

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Eatharku enna aatharam? Engirunthu kidaithathu ivai?

பெயரில்லா சொன்னது…

//Eatharku enna aatharam? Engirunthu kidaithathu ivai? //

இவற்றிற்கெல்லாம் ஆதாரம் எதுவும் தேவை இல்லை.இவை எல்லாம் நம் மூதாதையர்கள் பழகி பயன் பெற்று நமக்கு கற் பாறையிலும் ஓலைகளிலும் பதிவிட்டுச் சென்றுள்ளனர்.இவைகளால் இதை சொல்பவருக்கோ இல்லை இதனை(பொருட்களை) விற்பவருக்கோ பெருத்த லாபம் ஒன்றும் கிடைக்கப் போவது இல்லை.ஆனால் இதனை தொடர்ந்து செய்து வருபவர்கள் பலன் பெறுவது கண்கூடு.

இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தச்சொல்லும் இவரை இத்தனை கேள்வி கேட்கிறீர்களே நவீன முறையில் பொரித்தளிக்கப் படும் சோளத்தில் உடல்நலத்திர்க்குத் தீங்கு விளைவிக்கும் என்னனென்ன பொருட்கள் இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா...?

பல பெயர்களில் உலவும் குளிர்பானவகைகளில் உடலுக்கு தேவையில்லாத பொருட்கள் என்னனென்ன இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா...?

உங்களைச்சொல்லி குற்றமில்லை... எவை எவற்றிற்கு கேள்வி கேட்கவேண்டும் சூழ்நிலைகளை எப்படி நிதானமாக கையாளவேண்டும் என்று உங்களுக்கு கற்பித்தவர்கள் தவறு.இன்று பல நிலைகளில் இந்த போக்குத்தான் காணப்படுகிறது.

முன்னோர்களை மதியாத குறை மதியும் ,பகுத்தறியாதோர் கொண்ட கல்வியும், வளர்ச்சிகுதவா....
நன்றி!

கருத்துரையிடுக