திங்கள், ஏப்ரல் 16, 2012

திருவிழாத் தேவதைகள்



நான் நொய்டாவிலிருந்து மாற்றல் வாங்கி வந்த செய்தியைச் சொன்னதும் அம்மா சொன்னாள், " இந்த தடவையாது ஊர்த் திர்ழாக்கு ஒழுங்கா வந்து சேரு". ித்திரை மாதம் என்றாலே திருவிழாக்கள் கலைகட்டிவிடும். எங்கள் இராசையில் ஒரு மாதத்திற்கு முன்னரே மாரியம்மன் கோவிலில் கொடியேற்றிவிடுவார்கள். அன்று அந்தக் கொடியைஒரு பல்லக்கில் வைத்து ஏழூர் தெருக்களையும் சுற்றி வருவர். அன்று தொடங்கும் திருவிழாக் கலை. எனது சிறுவயது திருவிழாக் காலங்களைக் கொஞ்சம் தூசு தட்டுகிறேன் இங்கே.

ிருவிழாவிற்கு சில நாட்கள் முன்னரே அம்மனை வேண்டி முளைப்பாரி போடுவது வழக்கம். தெருவில் பொதுவிடமொன்றில் அத்தெருவிலிருந்து முளை போடும் அனைவரும் ஒன்று கூடி தங்களது முளைப்பாரிகளை வைத்து தினமும் இருமுறை நீரிட்டும், இரவினில் அதைச் சுற்றி கும்மியடித்தும் பாட்டுப்பாடியும் அம்மனை வணங்குவர். அதுதான் பல இளம் காதல்கள் முளைவிடும் தருணம் கூட. தழையத் தழைய தாவணியணிந்து உச்சியில் முடி திருத்தி, நெற்றியில் திலகமிட்டு, மலைப்பாம்புக் கூந்தலில் மல்லிகைப்பூச் சரம் சூடி கும்மியடிக்க வரும் இளம்பெண்களின் ஓரப்பார்வைகளுக்காக காத்திருப்பர் கட்டழகுக் காளைமார்கள்.

கடைக்கணோர சிறுபார்வை, உதட்டோரக் குறுஞ்சிரிப்பு இவைதான் அவர்களின் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக