புதன், ஜூலை 20, 2011

ஒட்டகத்தைக் கட்டிக்கோ.., பகுதி 1.3

டேனிஷ் மொழியில்: Johan Joelsson மற்றும் Jonathan Jacobson

தமிழில்: இ.சொ.லிங்கதாசன்

வெகு விரைவில் ஐரோப்பியக் கடைகளில் ஒட்டகப் பால் !
முதன் முதலில் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த மிருக வைத்தியராகிய உல்ரிச் வேர்னறி(Ulrich Wernery) என்பவரே இத்திட்டத்தை முன்மொழிந்தார். உல்ரிச் வேர்னறியும் அவரது மனைவியாகிய ரீனேட் வேர்னறி(Renate Wernery) அவர்களும் துபாயிலுள்ள 'கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில்' பணிபுரிந்து வருகிறார்கள். "எமது முக்கிய இலக்கு ஓட்டகப்பாலை ஏற்றுமதி செய்வதாகும், ஏனெனில் ஒட்டகப்பால் மருத்துவக் குணம் கொண்டது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்" என்கிறார் மேற்படி ஆராய்ச்சி நிலையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான திருமதி.ரீனேட் வேர்னறி.
மேலும் அவர் கருத்துக் கூறுகையில் "ஒட்டகமானது மிகவும் வெப்பமான கால நிலையைச் சமாளித்துப் பால் தரக் கூடியது, ஆனால் சராசரிப் பசுக்கள் வெப்பமான சூழலைச் சமாளிக்க முடியாது திண்டாடும் தன்மை உள்ளவை. இதேபோல் குளிர், வெப்பம் ஆகிய இரு சூழலையும் சமாளிக்கும் வல்லமை ஓட்டகங்களிடம் மட்டுமே காணப்படுகின்றன" என்றார் அவர்.
ஐரோப்பாவில் போதுமான அளவில் 'பசுப்பால்' கிடைக்கின்ற சூழலில் ஐரோப்பியர்கள் ஒரு பாலைவன மிருகத்தின் "சிறிது உப்புச் சுவையுடைய" பாலைப் பருக ஏன் விரும்புகிறார்கள்?
(தொடரும்)
நன்றி: Samvirke juli 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக