டேனிஷ் மொழியில்: Johan Joelsson மற்றும் Jonathan Jacobson
தமிழில்: இ.சொ.லிங்கதாசன்
வெகு விரைவில் ஐரோப்பியக் கடைகளில் ஒட்டகப் பால் !
"தற்போதுள்ள சூழலில் எங்களால் உள்ளூர்த் தேவையை நிறைவு செய்யக்கூடிய அளவிற்கூட ஒட்டகப் பாலை உற்பத்தி செய்ய முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒட்டகப் பாலை ஏற்றமதி செய்வதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நாம் எமது உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும். இதற்காக நாம் வளர்க்கும் ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருக்கும்.இது ஒரு நீண்டகாலத் திட்டமாகும். இருப்பினும் இதனை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம் " என்கிறார் EICMP நிறுவனத்தைச் சேர்ந்த திரு பீட்டர் நாகி.
நாம் எதிர்பார்ப்பதுபோல் சகல விடயங்களும் சுமூகமாக நடக்கும் எனவும், ஐரோப்பிய ஒன்றியம் 'ஒட்டகப்பால் ஏற்றுமதிக்கு' அனுமதி வழங்கும் எனவும் நாங்கள் நம்புகிறோம், இன்னும் ஒரு சில வருடங்களுக்குள் ஐரோப்பியக் கடைகளில் ஒட்டகப் பாலை வாங்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு நாங்கள் கூறுவதைப் பார்த்து டேனிஷ்(டென்மார்க்) பால் உற்பத்தியாளர்கள் கவலை அடையத் தேவையில்லை.
"ஐரோப்பிய விவசாயிகளுடன் போட்டியிடுவது எங்கள் நோக்கம் அல்ல, பசுப்பாலுடன் ஒப்பிடும்போது 'ஒட்டகப் பால்' மிகவும் விலை கூடியதாக இருக்கும், அத்துடன் இது ஒரு ஆரோக்கிய பானமாகவே விற்பனை செய்யப் படும். இவற்றிலிருந்து நாங்கள் ஐரோப்பிய பால் உற்பத்தியாளர்களுடன் போட்டியிடவில்லை என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்" என்கிறார் EICMP நிறுவனத்தைச் சேர்ந்த பீட்டர் நாகி(Peter Nagy)
உலக அளவில்:
உலகில் உற்பத்தியாகும் ஒட்டகப் பாலில் அரைப் பங்கு 'சோமாலியாவில்' உற்பத்தி செய்யப்படுகிறது.
சோமாலியாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் 'ஒட்டகப் பாலை' உற்பத்தி செய்யும் நாடு 'சவுதி அரேபியா' ஆகும்.
முற்றும்)
நன்றி: Samvirke juli 2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக