மத்திய ஆபிரிக்கக் குடியரசு (Central African Republic)
பொதுவாகவே இந்நாட்டின் பெயரைப் பற்றிக் கல்வியறிவு உள்ளவர்களுக்கும் குழப்பம் நிலவுகிறது. தனியே 'மத்திய ஆபிரிக்கா' எனும் சொல் புருண்டி, மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ ஜனநாயகக் குடியரசு , ருவாண்டா ஆகிய நாடுகளைக் குறிக்கும். ஆதலால் இந்நாட்டின் பெயரை எழுதும்போது 'மத்திய ஆபிரிக்கக் குடியரசு' என்று எழுதப்படல் வேண்டும்.
CAR
அமைவிடம்:
மத்திய ஆபிரிக்கா
எல்லைகள்:
வடக்கு - சாட்
தெற்கு - கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் கொங்கோ குடியரசு
மேற்கு - கமரூன்
தலைநகரம்:
பங்குய் (Bangui)
அலுவலக மொழிகள்:
கல்வியறிவு:
48.6 %
ஆயுட்காலம்:
ஆண்கள் 48.8 வருடங்கள்
பெண்கள் 51.3 வருடங்கள்
அரசாங்க முறை:
குடியரசு
ஜனாதிபதி:
பிராங்கொயிஸ் போஸிஸே(Francois Bozize) *இது 05.07.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
பிரதமர்:
பவுஸ்டின் அசாங்கே டுவாடேரா (Faustin Archange Touadera) *இது 05.07.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
13.08.1960
பரப்பளவு:
622,984 சதுர கிலோமீட்டர்.
சனத்தொகை:
4,422,000 (2009 மதிப்பீடு)
நாணயம்:
மத்திய ஆபிரிக்க பிராங்(CFA / XAF)
இணையத் தளக் குறியீடு:
.cf
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-236
விவசாய உற்பத்திப் பொருட்கள்:
மரம், ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள்(மூலிகைகள்), காட்டு மிருகங்களின் இறைச்சி, புகையிலை, கிழங்குகள் விசேடமாக மரவள்ளிக் கிழங்கு, வேர்க்கடலை, சோளம், இறுங்கு(கம்பு), வாற்கோதுமை, எள்ளு, சாம்பல் வாழை(கறி வாழை), பருத்தி, காபி(கோப்பி).
ஏற்றுமதிப் பொருட்கள்:
வைரக்கல், தங்கம், யானைத் தந்தம், காட்டு மிருகங்களின் இறைச்சி, மதுபானம், காலணிகள்(சப்பாத்து, செருப்பு), மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- நாட்டுச் சனத் தொகையில் அரைவாசிப் பேர் கல்வியறிவு இல்லாதோர்.
- நாட்டில் ஒரேயொரு பல்கலைக் கழகம் மட்டுமே உள்ளது(The University of Bangui)
- ஐ.நாவின் அறிக்கைகளின்படி இந்நாட்டிலுள்ள மக்களில் 15 வயதிற்கும் 49 வயதிற்குமிடைப்பட்ட வயதுள்ளவர்களில் 11 % பேர் எயிட்ஸ் நோயாளிகள் ஆவர். இவர்களில் 3% பேருக்கு மட்டுமே எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சை கிடைக்கிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் 130,000 எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர்(தகவலுக்கு நன்றி:en.wikipedia.org)
- நாட்டின் சுகாதாரம், மருத்துவம் போன்றவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு லட்சம் நோயாளிகளுக்கு 8 மருத்துவர்கள் என்ற நிலை காணப்படுகிறது.
- இந்நாடு பிரான்ஸ் நாட்டின் குடியேற்ற நாடாக இருந்த காரணத்தால் தற்போதும் பிரெஞ்சுச் சட்டங்களே பின்பற்றப் படுகின்றது.
- இந்நாட்டில் 80 வெவ்வேறு மொழிகளைப் பேசும் 80 இன மக்கள் வாழ்கின்றனர்.
- உலக வியாபாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள நாடு இது. சர்வதேச வர்த்தகத்தில் 182 ஆவது இடத்தில் உள்ளது. உலகில் சர்வதேச வியாபாரத்தில் முதலாமிடத்தில் உள்ளது சிங்கப்பூர் ஆகும்(தகவலுக்கு நன்றி:www.doingbusiness.org)
- இந்நாட்டிற்குப் பிரான்ஸ் மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் பல நிதியுதவிகளைச் செய்து இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முற்பட்ட போதும், இந்நாட்டுப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியவில்லை.
- நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவையும் மிகவும் மட்டுப்படுத்தப் பட்ட நிலையிலேயே உள்ளன.
- 2006 ஆம் ஆண்டில் இந்நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு வன்முறைகள், கடும் வரட்சி காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் அகதிகளாக அண்டைநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பிலிருந்து ஐ.நாவினால் காப்பாற்றப் பட்டனர்.
- தற்போது இந்நாட்டில் நூற்றுக் கணக்கான சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும், ஐ.நா.அமைதி காக்கும் பிரிவினரும், ஐ.நா முகவர் அமைப்புகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
8 கருத்துகள்:
நன்றாக உள்ளது .
Super.
எப்படி (50% ) அரைவாசி
மக்கள் கல்வி அறிவில்லாமல் இருக்கும் நாட்டை நான் அறியவே இல்லை
இப்போ கம்ப்யூட்டர் காலத்திலும் இப்படி கல்வி அறிவு illamal irukka முடியாது காரணம் வறுமையே
என்ன்ருதன் சொல்லவேண்டும் நன்றி அந்திமாலை
மக்கள் தொகை அதிகம்::::: பொருளாதாரம் மிகவும் குறைவு::::::::::: அதுவே மக்கள் துன்பத்துக்கு
காரணம் நாட்டின் தலைவர் நல்ல வழியில் மக்களுக்கு எடுத்துகாட்டி குழந்தைகள்
பிறப்பதை குறைத்து பொருளாதரத்தை விருத்தி செய்தால் நாடு வளரும்
i hope you will wriet like this article more
very sad affrica countrys are must to think to life
only the can give peace full lifehappy
human must to thinking to them life selp
எத்தனை ஆபிரிக்கப் பெண்கள் டெனிஸ் ஆண்களை மணந்து இங்கு வந்துள்ளனர். வறுமை தான் காரணம். சொன்னபடி கேட்டு குடும்பம் நடத்தி குழந்தை குட்டிகளைப் பொறுப்பாகப் பார்ப்பார்கள் என்பது அடுத்த காரணம்.
கருத்துரையிடுக