ஆக்கம்: பழனி கந்தசாமி, கோயம்புத்தூர்,தமிழ்நாடு.
நாம்
ஒன்றாவது வகுப்பு படிக்கும்போது கற்றுக் கொடுக்கப்பட்ட வாக்கியம் இது. சுத்தமாக இருக்கவேண்டும் என்பது நமது கலாசாரத்தில் ஒன்றிப்போன ஒரு குணம்.
தினமும்
குளிக்கவேண்டும். சுத்தமான ஆடைகளை அணியவேண்டும். சாப்பிடும் முன்பும், பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். இத்தியாதிகள். கடைப்பிடிக்கிறோமோ இல்லையோ, இவைகளை நாம் அறிவோம்.
சமீபத்தில்
ஒரு விசேஷத்திற்குப் போய் காலை டிபன் சாப்பிட்டேன். நான் இப்போதெல்லாம் வெளியில் சாப்பிடுவது என்றால் அரை வயிறு மட்டுமே சாப்பிடுவேன். அன்றும் அப்படித்தான் சாப்பிட்டுவிட்டு வந்தேன். இதைத் தவிர வெளியில் வேறு ஒன்றும் சாப்பிடவில்லை. அன்றெல்லாம் ஒன்றும் தொந்திரவு இல்லை. மறு நாள் காலையிலிருந்தே நெஞ்சுப் பகுதியில் ஒரு மாதிரி இருந்தது. சரிதான், மிருத்யுவின் ஓலை வந்துவிட்டது போல் இருக்கிறது, பரவாயில்லை, அதனால் என்ன ? நாமதான் ரெடியாகத்தானே இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். மாலையில் இரண்டு தடவை லூஸ் மோஷன் போயிற்று. கை, கால்கள் எல்லாம் சோர்ந்து விட்டன.
மாலை
7 மணிக்கே படுத்துவிட்டேன். அப்படியே துங்கி விட்டேன். சுமார் 9 மணி வாக்கில் விழிப்பு வந்துவிட்டது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னை அறியாமல் வயிற்றுப் போக்கு ஆகியிருக்கிறது. உடனடியாக எழுந்து பாத்ரூம் சென்று துணி மாற்றிவிட்டு அசுத்தமான துணிகளை அலசி, பாத்ரூமைக் கழுவி, என்னையும் கழுவி எல்லாம் முடிக்க அரை மணி நேரம் ஆயிற்று. மனைவியும் ஒத்தாசைக்கு வந்தாள். நான் நிஜமாகவே கொடுத்து வைத்தவன்.
வயதான
காலத்தில் ஒருவனுக்கு இந்த நிலை வரக்கூடாது. வந்தால் அதை விடக் கேவலமான சூழ்நிலை ஒன்றும் இல்லை. ஏனென்றால் இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் நலம் விசாரிக்கும் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் தொடுக்கும் கண்டனக்கணைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு வந்திருக்கும் வியாதியை விட அந்தக் கண்டனங்கள்தான் அதிகம் வருத்தத்தைத் தரக்கூடியவை. “வயதான காலத்தில் கண்டதையும் தின்றுவிட்டு இப்படிப் பண்ணினால் யாரால் பார்த்துக் கொள்ள முடியும்?”
இதுதான்
மிகவும் அன்பான கண்டனம். இந்த ரீதியில் சுருதி படிப்படியாக ஏறும். வேறு வழியில்லாமல் இந்தக் கண்டனங்களைத் தாங்கித்தான் ஆகவேண்டும்.
பிறகு
என் டாக்டர் மகள் கொடுத்த மருந்துகளினால், வேறு தொந்திரவு இல்லாமல் நலமானேன். இதனால் நான் கற்ற படிப்பினை என்னவென்றால், இனிமேற்கொண்டு விசேஷங்களுக்குப் போவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை, அவசியம் போகவேண்டுமானால், போய் தலையைக் காட்டிவிட்டு எதுவும் சாப்பிடாமல் வந்து விட வேண்டும். ஒன்றும் சாப்பிடாமல் வந்தால் உறவினர்களின் கண்டனம் இருக்கிறதே, அவை இன்னும் மோசம். அதைக் கேட்பதை விட போகாமல் இருப்பதே உத்தமம்.
“கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்” என்று ஒரு சினிமாவில் ரங்காராவ் பாடியிருக்கிறார். அந்த உணவு தற்காலத்தில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பாருங்கள்.
எவ்வளவு பேர் கல்யாண மண்டப சமையல் அறையைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அடுத்த முறை போனால் அவசியம் சென்று பாருங்கள். பல உண்மைகள் புரியும். எனக்குப் பட்ட சில விஷயங்களை மட்டும் இங்கே எழுதுகிறேன்.
1.
சமையலுக்கு எந்தக் காயையும்
கழுவும் வழக்கம் இல்லை. காலிபிளவர், முள்ளங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய் முதலிய காய்களுக்கு எவ்வளவு பூச்சி மருந்துகள் அடிக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் அப்புறம் ஆயுளுக்கும் அந்தக் காய்களை சாப்பிடமாட்டீர்கள்.
2.
மளிகை
சாமான்களை அப்படியே பாத்திரங்களில் போடுவார்கள். குப்பை ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கும் வழக்கம் இல்லை.
3.
மிளகாய்த்தூள்,
சாம்பார்ப் பொடி, மஞ்சட்பொடி, மல்லிப்பொடி இவைகள் கடைகளில் வாங்கப்பட்டு அப்படியே உபயோகிக்கப்படும்.
4.
சமையலுக்கு
உபயோகப்படுத்தப்படும்
தண்ணீருக்கு எந்த மரியாதையும் இல்லை.
5.
அங்கு
வேலை செய்யும் ஆள்காரர்களில் 90 சதம் பேர் குளிக்காமல், அழுக்கு ஆடைகளுடன் பீடி குடித்துக் கொண்டு இருப்பார்கள். பல சமயங்களில் பீடித்துண்டு காய்கறிகளில் இருக்கும்.
6.
சாமான்கள்
லிஸ்ட்டில் இரண்டு லிட்டர் தேங்காய் எண்ணை எழுதியிருப்பார்கள். அது இந்த ஆட்கள் தலைக்குத் தேய்ப்பதற்காகத்தான். அவர்கள் தலைக்கு எண்ணை அடுத்த கல்யாணத்தில்தான்.
7.
மாஸ்டர்
குக்குகளின் மேல் துண்டை அடுப்பில் போட்டாலும் எரியாமல் அப்படியே இருக்கும்.
8.
இந்த
ஆட்கள் பாத்ரூம் போய் விட்டு வந்து அப்படியே வேலை பார்ப்பார்கள்.
9.
காய்கறிகளை
வெறும் தரையில் கொட்டித்தான் வெட்டுவார்கள்.
10. சப்பாத்தி தேய்ப்பது கழுவாத டைனிங்க் டேபிளின் மேல்தான்.
11. தோசை சுடும் இரும்புக்கல்லை கழுவும் வழக்கமே இல்லை.
12. சுட்ட எண்ணை, சுடாத எண்ணை என்கிற வேறுபாடுகள் எல்லாம் சமையல்காரர்களுக்கு இல்லை.
இன்னும்
பல கொடுமைகள் உள்ளன. விசேஷம் நடத்துபவர்கள் 'அஜினோ மோட்டோ' போடக்கூடாது என்று சொன்னால் சமையல்காரர் அதை லிஸ்ட்டில் எழுதமாட்டார். ஆனால் தனியே வாங்கி வந்து சமையலில் சேர்ப்பார். ஜிலேபிக்கு குங்குமப்பூ வாங்கிக்கொடுத்தால் அதை திருடுபவர்கள்தான் அதிகம்.
இதையெல்லாம்
பார்த்தும் விசேஷங்களில் சாப்பிட வேண்டுமானால் தனி மனோதைரியம் வேண்டும். அதைத் தவிர அந்த உணவை ஜீரணம் பண்ணக்கூடிய உடல்நிலையும் வேண்டும். எனக்கு இந்த இரண்டும் காலியாகி விட்டன.
இந்த
தர்ம சங்கடத்திலிருந்து விடுபட சரியான வழிமுறைகளை யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் பதிவர்கள், தங்களுக்குத் தெரிந்த யோசனைகளை தெரிவிக்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
4 கருத்துகள்:
சின்னத்தம்பி ராஜகோபால் அவர்களுக்கு, இந்தப்பதிவின் ஆக்கம் பழனி.கந்தசாமி என்று போட்டிருக்கிறீர்கள். என் முதல் சந்தேகம். அது உண்மைதானா? ஏனெனில் இந்த கருத்துக்களை நான்தான் எழுதினேனா என்று சந்தேகம் வருகிறது.
எப்படியோ என் மருத்துக்களை மறுபடியும் பிசுரித்து என்னை கௌரவித்ததில் மிக்க மகிழ்ச்சி.
சிறந்த பகிர்வு
திரு.பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு, 'அந்திமாலை' எனும் இந்த இணையத்தை இயக்குவது நானும், எனது மனைவியும், நண்பர்களும் ஆகும். இந்த இணையத்தில் மக்களுக்குப் பயன்படும் பலவகைப்பட்ட ஆக்கங்களை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய தினம் தங்களால் கடந்த 24.02.2012 எழுதப்பட்ட மேற்படி 'சுத்தம் சோறு போடுமா? என்ற ஆக்கத்தை வெளியிட்டோம். இது இன்னும் பல வாசகர்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதே எமது ஆவல். இந்த இணையத்தை இயக்குபவர் திரு.சின்னத்தம்பி ராஜகோபாலன் என்று தாங்கள் தவறாக எண்ணி விட்டீர்கள். அவரும் எமது இணையத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட ஒரு வாசகர், அபிமானி, நலன் விரும்பி ஆவார். துரதிர்ஷ்டவசமாக கடந்த 06.01.2014 அன்று அவர் இயற்கை எய்தி விட்டார். அவரது 'மரண அறிவித்தலையே' தாங்கள் எமது இணையத்தின் முகப்பில் இடது பக்கத்தில் காண்கிறீர்கள். தொடர்ந்தும் அந்திமாலையுடன் இணைந்திருங்கள் என அன்புரிமையோடு வேண்டிக் கொள்கிறோம்.
"ஒன்றுபட்டு உயர்வோம்"
அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
அந்திமாலை இணையம்
டென்மார்க்
Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/
To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/
நன்றிகள் பல...
நம் குரல்
கருத்துரையிடுக