முருங்கைக்காய் என்ற பேரைக்கேட்டாலே நமக்கெல்லாம் ஞாபகத்துக்கு வர்றது
பாக்யராஜ் கெளப்பிவிட்ட 'கில்மா' சமாச்சாரம்தான். பொண்டாட்டிகளுக்கு புருஷனோட ஆசையை கிளறிவிட்டு கெஞ்சவெக்கிறதுக்கான ஆயுதமா 'முருங்கைக்காய்
சமாச்சாரம்' பதிஞ்சிபோச்சு.
இது உண்மையாகவே ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. ஆனால் இதன்
சுபாவம் 'சூடு'. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும்
தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய
உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கையின் நன்மைகள் அதான் பெனிபிட்
1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை சேர்க்கக் கூடாது.
2. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், மாதவிலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
3. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தினமும் இரு வேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும்.
4. முருங்கை பிஞ்சை சமைத்து சாப்பிட்டால் எலும்புருக்கி நோய், சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.
5. மேலும் முருங்கை இலையை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும்.
6. குடற்புண்(அல்சர்), டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும்.
ஆகவே முருங்கையை சாப்பிடுங்க!!! முறுக்கோடு இருங்க!!!
முருங்கையின் நன்மைகள் அதான் பெனிபிட்
1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை சேர்க்கக் கூடாது.
2. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், மாதவிலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
3. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தினமும் இரு வேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும்.
5. மேலும் முருங்கை இலையை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும்.
6. குடற்புண்(அல்சர்), டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும்.
ஆகவே முருங்கையை சாப்பிடுங்க!!! முறுக்கோடு இருங்க!!!
நன்றி: myoor.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக