இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்கு உரை; மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை. (1151)
பொருள்: என் காதலா! என்னைப் பிரிந்து செல்லாத செய்தியாக இருந்தால் அதை எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருவது பற்றிய செய்தியானால் அதுவரையில் உயிரோடு இருப்பவரிடம் சொல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக