முகம்மது நபி
உங்கள் அண்டை வீட்டார் உதவி கேட்டால் உதவுங்கள். ஆறுதல் தேவைப்படும்போது ஆறுதல் அளியுங்கள்; அவருக்குத் தக்க சமயத்தில் கடன் கொடுங்கள்; அவர் துயரப்பட்டு நிற்கும்போது அவரின் துயரைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர் நோய் வாய்ப்படும்போது நலம் விசாரியுங்கள்; அவர் மரணமடைய நேரிட்டால் இறுதிச் சடங்குகளில் மனமுவந்து கலந்துகொள்ளுங்கள்; அவர் நல்லது செய்தால் பாராட்டுங்கள். வாழ்த்துங்கள்; அவருக்குத் துன்பம் நேரும்போது அவர் துயர் களைய முற்படுங்கள்; அவருக்குக் காற்று கிடைக்காதவாறு உங்கள் சுவரை அவர் அனுமதியின்றி உயரமாக எழுப்ப வேண்டாம்; அவருக்குத் தொல்லைகள் ஏதுமில்லாமல் நடந்துகொள்ளுங்கள். இதன் மூலம் இறை அன்புக்குப் பாத்திரம் ஆகுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக