வியாழன், ஜூலை 03, 2014

மனிதர்களில் மிகவும் சந்தோஷமானவாய் இருக்க…

 ஆக்கம்:ரஹ்மத் பரூக், மலேசியா.


  • வணக்கம் என்பது மகிழ்ச்சியானது. இறை வணக்கத்திற்கு அடுத்தபடியாக, உன் பெற்றோர்களை, புனிதமானவர்களை, அறிஞர் பெருமக்களை, அன்பானவர்களை, பண்பானவர்களை, உன் ஆசிரியர்களை வணங்கு.
  • சீர்திருத்தம் என்பதே வெற்றிதான். அதிகமான பிரார்த்தனையிலும் பாவமன்னிப்பிலும் ஈடுபடுகிறவர் இந்த உலகிற்கு நன்மை செய்பவர்களில் ஒருவர்.
  • நல்ல நண்பன் என்பவன் உறுதியோடு இருப்பான். ஆறுதல் அளிப்பான். உனது களைப்பை நீக்குவான். உனது கவலையில் பங்கு கொள்வான். இரகசியத்தைப் பேணுவான்.
  • நீயிருக்கின்ற நிலையை விட அதிக மகிழ்ச்சியை எதிர்பார்க்காதே. நீ உனது கைகளாலேயே நஷ்டமடைந்து விடுவாய். பதவிகளை எதிர்பார்க்காதே. அது கவலையையும் சோகத்தையும் தரும்.
  • மறதி என்பது நன்மையையும் தரும் அதே மடங்கு தீமையும் தரும். நல்ல மனிதர்களின் குறைகளை மன்னித்து விடு கூடுமானவரை மறந்து விடு.
  • பழி வாங்குவதனை விட மன்னிப்பதானது இனிமையானது. ஓய்வினை விடச் செயல் இன்பமளிக்கக் கூடியது. செல்வத்தை விட திருப்தி பெரியது. சொத்துக்களை விட தேக ஆரோக்கியம் சிறந்தது.
  • இரவுத் தொழுகை பகலின் சிறப்பாகும். தூய உள்ளமானது மனிதர்களுக்கு நல்லதையே விரும்பும். சுதந்திரத்தை எதிர் பார்ப்பது வணக்கமாகும்.
  • சோதனையில் பின்பற்ற வேண்டிய நான்கு கடமைகள் :   
 -கூலியை எதிர்பார்த்தல்
- பொறுமையோடு வாழ்தல்
 -நல்லதை நினைத்தல்
-வெற்றியை எதிர்பார்த்தல்
  • இறைவனின் கட்டளைக்குப் பணிந்து நடப்பதை எவ்வாறு தெரிவிக்கலாம்?
கூட்டுத் தொழுகையில், கடமையை நிறைவேற்றுவதில், முஸ்லிம்களை விரும்புவதில், பாவத்தை விடுவதில், ஆகுமானவற்றைச் சாப்பிடுவதில், இம்மை ஈடேற்றத்தை அடைவதில் ஆர்வமாய் இருத்தல். 

  • மடமையின் அடையாளங்கள்:
-    நேரத்தை வீணாக்குதல்
-    மனிதர்களைப் பகைத்துக் கொள்ளுதல்
-    பெற்றோரை மனம் வருந்தச் செய்தல்.
-    இரகசியங்களை அம்பலப்படுத்தல்.

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

கருத்துரையிடுக