பகவத் கீதை
வலிமை படைத்தவனே வாழ்வுக்கு உரியவன். இம்மைக்கும் மறுமைக்கும் உறுதுணையானது வலிமை. வலிமை உயிரை வளர்க்கிறது. பயம் உயிரைத் தேய்க்கிறது. வலிமை நோயை நீக்குகிறது. பயம் நோயை வளர்க்கிறது. வலிமை நல்லறத்தையும், நேர்மையையும் தருகிறது. பயம் எப்போதும் மனக்கோணலையும், ஒழுக்கமின்மையையும். ஆன்மாவுக்கு உணவளிப்பது வலிமை. பிரபஞ்ச உணர்ச்சிகளை அதிகரிப்பது பயம். பந்தங்களை மிகைப்படுத்துவது பயம். மோட்சத்தை வழங்குவது வலிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக