ஞாயிறு, ஜூலை 06, 2014

4000 தமிழர்கள் மட்டும் வாழும் உள்ளத்தை அள்ளும் ஆபிரிக்கத் தீவு.

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவுகள், ஆப்பிரிக்க கண்டத்திற்குரிய நாடாகும். செல்வந்த நாடான சீஷெல்ஸ் தீவுகளில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த பலர் அங்கு தொழில் புரிந்து வருகின்றனர்.1700 ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பியர் சீஷெல்ஸ் தீவுகளை கைப்பற்றும் வரை அந்த தீவு அரேபிய மற்றும் ஆசியா இடையில் பயணிக்கும் கப்பல்களை கொள்ளையிடும் கொள்ளையர்களின் புகலிடமாக இருந்து வந்தது.
சீஷெல்ஸ் என்பது 116 சிறுசிறு தீவுகள் கொண்ட தீவுக்கூட்டம். 130 லட்சம் சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் 30 தீவுகள் மட்டுமே மக்கள் வசிக்கும் பகுதிகளாக இருக்கின்றன். இதில் மிகப்பெரிய தீவு மாஹே என்பதாகும். இது 27 கி.மீ நீளமும் 11 கி.மீ அகலமும் உடையது. சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா இதில்தான் உள்ளது. துறைமுகமும், விமான நிலையமும் தலைநகரில்தான் உள்ளன. சீஷெல்ஸின் மொத்த நிலப்பரப்பே 455 சதுர கி.மீ தான். இதில் 49 சதவீதம் பாதுகாக்கப்பட்ட அல்லது தேசீய பூங்கா. கணக்கில் அடங்கா தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மொத்த மக்கள் தொகை 85 ஆயிரம்.

இதில் 72 ஆயிரம் பேர் மாஹே தீவில் வசிக்கின்றனர். இதில் இந்தியர் 8000 பேர். அதில் தமிழர்கள் சரிபாதி. இவர்களில் 800பேர் மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து சென்றிருப்பவர்கள். முதன் முதலில் அங்கு வேலைக்காகவோ, வியாபாரம் செய்யவோ சென்றவர்கள் பின்னர் தங்கள் உறவினர்கள் வேண்டியவர்கள் என்று அழைத்துச் சென்று பெருகி விட்டவர்கள்.
Arulmigu Navasakti Vinayagar
தலைநகர் விக்டோரியாவில் உள்ள நவசக்தி விநாயகர் ஆலயம்.
இதேவேளை இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்று கருதும் இவர், இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.
Alagu Kavadi procession
நம்மவர்களின் 'அலகு குத்திக் காவடி எடுக்கும்'
கலாச்சாரம் அங்கும் உள்ளது.
சீஷெல்ஸ் தீவுகள் ஒருகாலத்தில் மடகாஸ்கர் தீவுகளுக்கு வடக்கே இருந்ததை சுட்டிக்காட்டும் நிலவியலாளர்கள், இந்த தீவின் நிலப்பகுதி இதுவரை நினைத்ததைவிட மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், இந்திய பெருங்கடலில் விரவிக்கிடக்கும் வேறு நில தீவுப்பகுதிகளையும் ஆராயவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
இப்படியாக கடலுக்குள் காணாமல் போன உலகின் ஆதிகண்டமான மொரீஷியாவின் மிச்ச சொச்சங்களை கண்டறிவதற்கான மேலதிக ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம் என்கிறார் பேராசிரியர் டோர்ஸ்விக்.


சுற்றுலாத்துறைக்கு பெயர்போன சீஷெல்ஸ்:-
குடும்பத்தினரோடு சென்று விடுமுறையை சிறப்பாக கழிக்க விரும்புபவர்களுக்கு சீஷெல்ஸ் நாடானது சிறந்ததாகும். அவர்களின் கலாசாரம் உபசரிப்பு பண்பு காலநிலை என்பது எமது நாட்டை ஒத்ததாக அமைந்துள்ளமை ஒரு விஷேட அம்சமாகும்.
இந்து சமுத்திரத்தில் கிழக்கு ஆபிரிக்காவுக்கு அருகாமையில் 116 வரையிலான தீவுகளை கொண்ட சிஷெல்ஸ் நாடானது உலகின் அனைத்து பாகங்களிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் பல சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய நாடாகவும் திகழ்கின்றது.
பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷாரின் ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டிருந்த வரலாற்றைக் கொண்ட இந்நாடு 94000 வரையான சனத்தொகையை கொண்ட  சிறிய நாடாகும்.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றின் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் பெற்றுக்கொண்ட ஆளுமைகளின் எதிரொலியாக இந்நாட்டில் க்ரேயோல் எனப்படும் பிரெஞ்சு மொழி சார்ந்த மொழியே பிரதானமாக பேசப்படும் அரசு மொழியாக காணப்படுகின்றது.
Women devotees carry Pal Kudam in the Taippoosam Kavadi procession
அங்கு வாழும் நமது தமிழ்ப் பெண்களும்
தைப்பூசத் திருவிழாவின்போது
'பால்குடம்' தூக்கிச் செல்வர்.
அத்தோடு இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லின மொழி பேசும் மக்கள் தமது வாழ்விடமாக சீஷெல்ஸ் விளங்குகின்றமையினால் பல மொழி பேசும் சுற்றுலாப் பயணிகளுக்கு தமது தேவைகளை தமது மொழிகளிலேயே நிறைவு செய்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அத்துடன் பல தேசத்தவர்களின் கலாசாரமும் ஒருக்கிணைந்த நாடாக இது திகழ்கின்றது.இதற்கு சிறந்த உதாரணமாக அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களையும் அவர்களால் சீஷெல்சில் தலைநகரான மானே விக்டோரியா நகரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விநாயகர் ஆலயத்தினை குறிப்பிடலாம்.
 இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விசேட அம்சமாக கடற்கரைகள் விளங்கிய போதிலும் மேற்குலக நாடுகளின் ஆளுமை இத்தீவில் பல்வேறு பாரம்பரிய கட்டடக் கலையிலும் தேசிய புராதனச் சின்னங்களிலும் தாக்கத்தினை எற்படுத்தியுள்ளமையை இத்தீவில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சியகங்கள் பறைசாற்றுகின்றமை புராதன கலை அம்சங்களை ரசிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தளமாகும்.
115 தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்நாட்டில் சுமார் 75 தீவுகளில் மாத்திரமே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த தீவுகளுக்கு பயணத்தை மேற்கொள்ள அம்மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக தீவுகளுக்கு இடையிலான  சொகுசு படகு சேவை சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தினை தருகின்றது. ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்கு சென்றதும் ஒரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கு வருகை தந்ததை போன்ற உணர்வினை எமக்களிக்கின்றது.காரணம் அங்குள்ள ஒவ்வொரு தீவுகளிலும் தனித்தனியான துறைமுகங்கள் உள்ளன, விமான சேவையில் ஈடுபடும் விமானங்களுக்கான விமான நிலையங்கள் என ஒரு நாட்டிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளன.
சீஷெல்ஸ் தீவில் இயற்கையின் கொடையால் அமையப் பெற்றுள்ள வெண்மணல் கடற்பரப்புகளும் நீலப்பச்சை நிற கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும தளங்களாக விளங்குகின்றமை இந்நாட்டிற்கு உரித்தான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அது மாத்திரமன்றி இத்தீவிலுள்ள பிரத்தியேக கடற்கரைகளும் தனிமையான மலைக்குகைகளும் ஏனைய கடல் சார் இடங்களும் புதிய அனுபவத்தினை எமக்களிக்கின்றது.
Anse Intedance, Mahe, Seychelles (Nature)அரிய வகை கடல் இனங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளினைக் கண்டு களிப்பதற்கும் மீன்பிடி பொழுது போக்கு அம்சங்களையும் சீஷெல்ஸ் கொண்டிருப்பதுடன் நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் தெளிந்த நீரில் நீந்தும் ஆர்வம் கொண்டவர்களுக்கும் அழகிய கடல் மீன்களுடன் இணைந்து நீந்தும் அனுபவம் என்பனவற்றை அனுபவிக்கவும் முடியும். இந்த அனுபவங்கள் அனைத்தையும் குறுகிய நேரத்தில் அனுபவிக்க முடிகின்றமை மற்றுமொரு விசேட அம்சமாகும் காரணம் சிறிய தீவு நாடான சீஷெல்ஸின் குறுகிய நேரப்பயணத்துடன் இவை அனைத்தையும் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
கடல் சார் உணவு வகைகளை ருசி;ப்பதற்கும் அங்குள்ள பல்வேறு வகையான உணவு வகைகளை ருசிப்பதற்கான சந்தர்ப்பம் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கின்றது.
இங்குள்ள கடற்கரைகளில் உள்ள கற்பாறைகள் வித்தியாசமான தோற்றத்தில் அமையப் பெற்றுள்ளமை மற்றுமொரு விஷேடம்சமாகும். சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டது போன்ற உருவ அமைப்பை கொண்டுள்ள இக் கற்பாறைகள் எமது கண்களுக்கு வித்தியாசமான காட்சியினை பிரதிபலிக்கின்றது.
சுற்றுலாத்துறையை பிரதானமானதாக கொண்டுள்ள இந்நாடு  பொருளாதார ரீதியிலும் உயர் நிலையை வகிக்கின்றது. சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான ஹோட்டல் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாராளமாக கொண்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தமது விடுமுறையை சிறப்பாக கழிக்க முடியும்.


 

கடந்த 1990 ஆம் ஆண்டளவில் இயக்குனர் மணிரத்தினம் அவர்களால் தயாரிக்கப் பட்டு, இயக்குனர் K.சுபாஷ் அவர்களால் இயக்கப் பட்ட, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களுக்குப் புகழைத் தேடித் தந்த 'சத்ரியன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற "மாலையில் யாரோ மனதோடு பேச" என்ற பாடல் இந்தத் தீவிலேயே படமாக்கப் பட்டது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இந்தத் தீவுகளுக்குப் படப் பிடிப்பிற்காக சென்ற ஒரேயொரு தமிழ்த் திரைப்படக் குழு இதுவாகும்.


அந்திமாலையின் வாசகர்களுக்காகத்
தொகுத்தவர்: இ.சொ.லிங்கதாசன்.

2 கருத்துகள்:

RAM சொன்னது…

அருமையான தகவல்கள்..முழுமையாக பகிர்ந்ததற்கு நன்றி!
www.revmuthal.com

பெயரில்லா சொன்னது…

PLEASE PUBLISH HOTEL PRIZE DETAILS,TAMIL NADU STYLEVEG. RESTRUNTS LIST.

கருத்துரையிடுக