ஞாயிறு, ஜூலை 13, 2014

மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு மீசாலையை பிறப்பிடமாகவும், சுமார் 10 வருடங்கள் அல்லைப்பிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட, அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயம், அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயம், அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயம்(சருகுப் பிள்ளையார் கோயில்), மண்கும்பான் கருப்பாத்தி அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களின் முன்னாள் பிரதம அர்ச்சகரும், தற்பொழுது கொழும்பில் வசித்தவருமான பிரம்மஸ்ரீ. அண்ணாச்சாமி ஐயர் சபாரட்ணஐயர் அவர்கள் நேற்றுமுன்தினம் (11.07.2014) வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.


image அன்னார் காலஞ்சென்ற அண்ணாச்சாமிஐயர் அலமேலு அம்மா தம்பதியரின் அன்பு மகனும், சிவகடாட்சசர்மா, காலஞ்சென்ற கோமதி அம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும், சுலோஜனா தேவியின் அன்புக் கணவரும், சங்கீதா(ஜெர்மனி), அனுஷா(அவுஸ்திரேலியா), கார்த்திகா(அவுஸ்திரேலியா) மற்றும் கெளதம் ஆகியோரின் அன்புத் தந்தையும், கணேசராஜன், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சரண்யன், சானுஜா, சங்கீர்த்தன், ராகவி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.07.2014) திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியவில் இலக்கம் 881/4, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15 இல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் மூன்று மணியளவில் மாதம்பிட்டிய இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்: சொர்ணலிங்கம் சதீஸ்வரன், யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
0094- 112 529 924 (மகன்-கெளதம்)
0094- 773 606 409
0094- 725 333 678(மனைவி)

முகவரி:  இலக்கம் 881/4, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15(சுவர்ணா மோட்டோர்ஸ் மற்றும் மக்கள் வங்கிக்கு முன்பாக)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக