சனி, செப்டம்பர் 27, 2014

இந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்

crime against women
இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படும் ஒருவகை மனநிலைக்கு ஆளாகிறார்கள் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று. அதென்ன ஸ்டாக்ஹோம் சின்ரோம்?
கடத்தப்பட்டவருக்கும் கடத்தல்காரருக்கும் இடையே ஏற்படும் ஒரு வகையான நேர்மறையான உறவே ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படுகிறது. 1973ல் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளைக்காரர்கள், 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 6 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட அந்த பிணைக்கைதிகள், தங்களை பிடித்து வைத்திருந்த கொள்ளையர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க மறுத்ததோடு, அவர்களுக்கு எதிரான வழக்குக்கு பொதுமக்களிடன் பணம் வசூலித்து கொடுத்தனர். தங்களை கடத்தியவர்கள் மீது கடத்தப்பட்டவர்கள் காட்டும் இந்த கரிசன மனநிலையை குறிக்க அதன் பின்னர் 'ஸ்டாக்ஹோம் சின்ரோம்' என பிரபல உளவியலாளர் நீல்ஸ் பெஜொருட் பெயரிட்டார்.
இதற்கு சமீபத்திய உதாரணத்தைச் சொல்ல முடியும் ஈராக்கில் தங்களை கடத்தி வைத்திருந்த தீவிரவாதிகள் பற்றி அவர்களிடமிருந்து தப்பிய செவிலியர்கள் சொன்ன கருத்துக்கள் இந்த மனநிலையில் சொல்லப்பட்டவைதான். தங்களை தீவிரவாதிகள் நன்றாக நடத்தியதாகவும் நேரம் தவறாமல் உணவளித்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். பவரை கொன்று குவித்தவர்களாக அவர்கள் இருந்தபோது தங்களை நன்றாக நடத்தினார்கள் என்று அவர்கள் சொன்ன கருத்து ஒருவகையான இக்கட்டான மனநிலையில் தோன்றுவது என்கிறார் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
founder-img2‘பலவிதங்களில் மனதில் குடிகொள்ளும் பயம், பதட்டம், இனி உயிர் வாழ்வோமா என்கிற கேள்வி இதையெல்லாம் சேர்ந்து கடத்தப்பட்டவர்கள் ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். கெட்டதிலே நல்லதைப் பார்க்கும் விதமாக இவர்களுக்கு தங்களை கடத்தியவர்கள் மீதே ஒரு நேர்மறையான தாக்கம் உண்டாகும். அவர்களிடம் உள்ளதை தேடி ஆரம்பிப்பார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணத்தை நம் அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலேயே பார்க்க முடியும். கணவன் எப்படிப்பட்ட வன்முறையாளனாக இருந்தபோதும் அவனிடம் உள்ள நல்லதைப் பற்றி பேசுவாள் அந்த மனைவி. இது ஒருவகையில் உயிர்வாழ்தலுக்கான கட்டாயத்தில் வரும் எண்ணம். இதுவும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்தான்!
வீடுகளில், அலுவலகங்களில் என்று  தினசரி வாழ்க்கையில் ஸ்டாக்ஹோம் சின்ரோம் உள்ளவர்கள் நிறையவே பார்க்க முடியும். இந்த பிரச்னையிலிருந்து மீள முடியாது, இனி வாழ்வதற்கு வேறு வழியில்லை, மிகவும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு தப்பிக்கவே முடியாது என நினைப்பவர்கள் தங்களை துன்பப்படுத்துபவர்கள் மீது அன்பு கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தவனையே திருமணம் செய்துகொண்ட சம்பவங்கள் உலகம் முழுக்க நடந்ததுண்டு. இதுவும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்தான்!” என்கிறார் பிருந்தா ஜெயராமன்.

நன்றி:fourladiesforum.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக