- இரண்டு பெரியோர், இரண்டு சிறியோர் கொண்ட ஒரு சராசரி டேனிஷ் குடும்பத்தால்(டென்மார்க்) வருடமொன்றுக்கு 10.000 குரோண்கள் (ஏறக்குறைய இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள்) பெறுமதியான உணவுப் பொருட்கள்(பண்டங்கள்) குப்பைத் தொட்டியில் வீசப் படுகின்றன.(ஆதாரம்:விவசாயம் மற்றும் உணவுத் திணைக்களம், டென்மார்க் 2010)
- சாதாரணமாக குப்பைத் தொட்டியில் வீசப்படும் உணவுப் பொருட்களை அவதானித்ததில் காய்கறிகள், பாலுணவுப் பொருட்கள், பாண்/ரொட்டி (Bread) போன்றவையே அதிகமாக வீசப் படுகின்றன எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.(ஆதாரம்:விவசாயம் மற்றும் உணவுத் திணைக்களம், டென்மார்க் 2010)
- வருடாந்தம் டேனிஷ் மக்களால்(டென்மார்க் மக்களால்) 680.000 தொன் எடையுடைய உணவுப் பொருட்கள் வீணாகக் குப்பைத் தொட்டியில் வீசப் படுகின்றன.(ஆதாரம் விவசாயம் மற்றும் உணவுத் திணைக்களம்,டென்மார்க் 2006)
- டென்மார்க்கில் குப்பைத் தொட்டிகளில் வீசி எறியப்படும் உணவுகளில் 89% வரையானவை குடும்பமாக வாழ்கின்ற பொதுமக்களாலேயே எறியப் படுகின்றன.(ஆதாரம்: சுற்றுச் சூழல் துறை, டென்மார்க் 2008)
என்ன செய்யலாம்?
- ஒவ்வொரு வேளை உணவையும் திட்டமிட்டுத் தயாரிப்பதன் மூலம் உணவுப் பொருட்கள் வீணாகிக் குப்பைத் தொட்டியில் வீசப்படுவதைத் தவிர்க்கலாம்.
- குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவரும் எவ்வளவு உணவு உண்பார்கள்? என்பதைத் திட்டமிட்டு அந்த அளவில் உணவினைத் தயாரிக்கலாம்.
- வீட்டில் தயாரிக்கப்படும் பிரதான உணவுகளில்(உதாரணமாக இலங்கைமக்கள் சோறு, புட்டு, இடியப்பம்/ தமிழக மக்கள் இட்லி,தோசை,உப்புமா) எதைக் குடும்ப உறுப்பினர்கள் அதிகமாக விரும்பி உண்கின்றனர், எதைக் குறைவாக உண்கின்றனர் என்ற 'மதிப்பீடு' மிகவும் அவசியமானது.
- இவ்வாறு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட உணவுகூட அதிக அளவில் மீதமுள்ளதா? உடனடியாக குளிரூட்டியிலோ(Refrigerator) அல்லது கடும் குளிரூட்டியிலோ(Freezer) பாதுகாப்பாக வைத்து அடுத்தநாள் உண்ணலாம்.
- எமது குடும்பத்துக்கு என்ன பொருள், எந்த அளவில் தேவை?
- நாம் வாங்குகின்ற பொருளை அதன் முடிவுத் தேதிக்கிடையில்(Expiry Date) பயன்படுத்துவோமா?
- வீட்டில் கையிருப்பில் என்னென்ன பொருட்கள், எந்தெந்த அளவில் உள்ளன?
- எந்தெந்தப் பொருட்களின் முடிவுத் தேதி(Expiry date) நெருங்கி வருகிறது?
- குளிர்சாதனப் பெட்டியில்(Refrigerator), கடும் குளிரூட்டியில்(Freezer) என்னென்ன பொருட்கள் உள்ளளன எனக் கவனித்தோமா?
3 கருத்துகள்:
Tak
useful information.
yes we want to know how many people are not geting food,,,,,,,,,,,,,,,
கருத்துரையிடுக