செவ்வாய், மார்ச் 13, 2012

நாடுகாண் பயணம் - பிஜி



நாட்டின் பெயர்:
பிஜி (Fiji)


வேறு பெயர்கள்:
பிஜி குடியரசு(Republic of Fiji)
*இந்நாடும் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் இந்நாட்டின் தேசியக் கொடியில் அவுஸ்திரேலிய, நியூசிலாந்துக் கொடிகளைப் போல் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் யூனியன் ஜாக்(Union Jack) அடையாளம் இருப்பதைக் காணலாம்.


அமைவிடம்:
தெற்குப் பசுபிக் சமுத்திரம் / மெலனேசியா


எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் பசுபிக் சமுத்திரம் இருப்பினும் கடலுக்கு அப்பால் உள்ள அண்டை நாடுகளாக 
தென் மேற்கில் - நியூசிலாந்து 

மேற்கில் - வனுவாட்டு(Vanuatu)
தென் மேற்கில் - பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசமாகிய நியூ கலிடோனியா(New Caledonia)
தென் கிழக்கில் - நியூசிலாந்திற்குச் சொந்தமான கர்மாடெக்(Karmadec)
கிழக்கில் - டொங்கா(Tonga)
வட கிழக்கில் - சமோவா(Samoa) மற்றும் பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான வலிஸ் மற்றும் புட்டுனா தீவுகள்(Wallis and Futuna)
வடக்கில் பிரித்தானியாவின் முன்னாள் கடல் கடந்த ஆட்சிப் பிரதேசமாகிய துவாலு((Tuvalu) தீவு ஆகியன உள்ளன.


தலைநகரம்:
சுவா(Suva)


அலுவலக மொழிகள்:
ஆங்கிலம், பெள பிஜியன்(பிஜித் தீவுகளின் பழமையான மொழி), பிஜிக் ஹிந்தி/ஹிந்துஸ்தானி (இந்தியாவில் பேசப்படும் ஹிந்தி மொழியிலிருந்து சிறிது மாறுபட்ட ஹிந்தி) மற்றும் சிறிய அளவில் தமிழ் மற்றும் ஏனைய ஆபிரிக்க, இந்திய மொழிகள்.


இனங்கள்:
பிஜியர்கள் 57%
இந்தியர்கள்(தமிழர்கள் உட்பட) 38%
ரோட்டுமன் இனத்தவர் 1,2%
பசுபிக் தீவுகளின் இனத்தவர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்கள் 3,9%


சமயங்கள்:
புரட்டஸ்தாந்துகள் 55,4%
இந்துக்கள் 27,9%
ரோமன் கத்தோலிக்கர் 9%
முஸ்லீம்கள் 6,3
சீக்கியர் மற்றும் ஏனையோர்


கல்வியறிவு:
93%


ஆயுட்காலம்:
ஆண்கள் 69 வருடங்கள் 
பெண்கள் 74 வருடங்கள்   


ஆட்சி முறை:
இராணுவத்தால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி.


ஜனாதிபதி:
எபலி நைலடிகெள(Epeli Nailatikau) *இது 13.03.2012 அன்று உள்ள நிலவரமாகும்.


பிரதமர்:
பிராங் பைனிமாரமா(Frank Bainimarama)


சம்பிரதாயபூர்வமாக நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத்(பிரித்தானிய அரசி)


பிரித்தானியாவிடமிருந்து விடுதலை:
10.10.1970


பரப்பளவு:
18,274 சதுர கிலோ மீட்டர்கள். 


சனத்தொகை:
849,000 (2009 மதிப்பீடு)


நாணயம்:
பிஜியன் டாலர்(Fijian dollar / FJD)


இணையத் தளக் குறியீடு:
.fj


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 679


இயற்கை வளங்கள்:
காடுகள், மீன்பிடி, கனிய வளங்கள் 


நாட்டு மக்களின் பிரதான தொழில்கள்:
விவசாயம் செய்வோர் 70% 
சிறு கைத்தொழில்கள், அரசுப் பணிகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணி புரிவோர் 30%


வேலையில்லாத் திண்டாட்டம்:
7,6%


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
25%


விவசாய மற்றும் பண்ணை உற்பத்திகள்:
கரும்பு, சீனி மற்றும் சர்க்கரை, தேங்காய், மரவள்ளிக் கிழங்கு, வற்றாளங் கிழங்கு, அரிசி, வாழைப்பழம், ஆடுகள், பன்றிகள், குதிரைகள், மீன்கள்.


வருமானம் தரும் தொழில்கள்:
சுற்றுலா, சீனி உற்பத்தி, துணிவகைகள் உற்பத்தி, கொப்பரை(கொப்பராத் தேங்காய்) தங்கம், வெள்ளி, மரங்கள், மரவேலை, குடிசைக் கைத்தொழில்கள்.


ஏற்றுமதிகள்:
சீனி, துணிவகைகள், தங்கம், மரம், மீன், தேங்காய், தேங்காய் எண்ணெய்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • போர்த்துக்கேயர்கள் மற்றும் டச்சுக்காரர்களால் கண்டு பிடிக்கப் படும்வரை இத் தீவுகளின் மக்கள் வெளி உலகோடு தொடர்பைக் கொண்டிருக்கவில்லை.
  • இந்நாடு பிரித்தானியக் குடியேற்ற நாடாகிய பின்னர் தீவுகள் அபிவிருத்தி அடைந்தன.
  • இத் தீவுகளில் கரும்பு பயிர் செய்யப் பட்டால் மிகவும் சிறப்பாக விளையும் என்பதையும், அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்பதையும், ஆங்கிலேயர்கள் கண்டு கொண்டனர்.
  • நாடு முழுவதும் கரும்புத் தோட்டங்கள் உருவாகின. கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பிரிட்டிஷ் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக் கணக்கான இந்தியர்கள் அடிமைகளாகவும், ஒப்பந்தக் கூலிகளாகவும் பிஜி தீவுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். இவர்களில் பல ஆயிரம் தமிழர்களும் அடங்குவர். இவர்கள் அத் தீவுகளில் கரும்புத் தோட்டங்களில் உழைத்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தீவுகளில் பரவிய 'அம்மை நோய்' காரணமாக தீவின் பூர்வீகக் குடிகள் உட்பட 40,000 பேர் வரையில் மாண்டனர். இவர்களில் அப்பாவித் தமிழர்களும் அடங்குவர்.
  • இந்நாட்டில் தங்கம், வெள்ளி உட்பட பல இயற்கை வளங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால் நாடு பணக்கார நாடாகியது.
  • இந்நாடு 1970 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் 1987 ஆம் ஆண்டிலும், 2000 ஆவது ஆண்டிலும் இராணுவச் சதிப் புரட்சியைச் சந்தித்தது.
  • இந்நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமராகப் பதவியேற்ற திரு.மகேந்திரா சௌத்திரி அவர்கள் 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற இராணுவ சதிப் புரசியின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
  • இந்நாட்டில் தற்போது 125,000 வரையான தமிழர்கள்(தமிழ்நாட்டுத் தமிழர்களின் வம்சாவளியினர்) வாழ்ந்து வருகின்றனர்.(மேற்படி தகவலுக்காக அந்திமாலை இணையம் திரு.மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கும், டெல்லித் தமிழ்ச் சங்கத்திற்கும், 'காற்று வெளி' இதழுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.)
  • முன்பு ஒரு காலத்தில் இந்நாட்டில் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்தன, தமிழ் வானொலி ஒலிபரப்புகள் நடைபெற்றன.தமிழ்ப் பண்பாடு இறுக்கமாகக் கடைப்பிடிக்கப் பட்டது.
  • தற்போது தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியை மறந்து போனாலும், இந்து சமயத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். மூன்று பெரிய இந்து ஆலயங்களும், இருபதுக்கும் மேற்பட்ட சிறிய ஆலயங்களும் உள்ளன. இவ் ஆலயங்களில் வருடாந்தம் காவடியாட்டம், தீமிதிப்பு, பொங்கல் போன்றவை நிகழ்கின்றன.

    3 கருத்துகள்:

    ப.கந்தசாமி சொன்னது…

    நல்ல தகவல்கள்.

    துளசி கோபால் சொன்னது…

    இந்த நாட்டில் ஆறு வருடங்கள் வாழ்ந்த வகையில் 'ஃபிஜித்தீவு' என்னும் புத்தகம் எழுதி அதை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    anthimaalai@gmail.com சொன்னது…

    டாக்டர். பழனி கந்தசாமி அவர்களின் கருத்துக்கும், வருகைக்கும் உளமார்ந்த நன்றிகள். சகோதரி துளசி கோபால் அவர்களின் வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

    ஆசிரியர்
    அந்திமாலை
    www.anthimaalai.dk

    கருத்துரையிடுக