செவ்வாய், மார்ச் 06, 2012

நாடுகாண் பயணம் - மைக்ரோனேசியா

தீவுகளின் பெயர்:
மைக்ரோனேசியா(Micronesia)
*'மைக்ரொஸ்'(Mikros) என்பது கிரேக்க மொழியில் மிகச் சிறிய என்று பொருள்படும். அதுபோல் கிரேக்க மொழியில் 'நேசொஸ்'(Nesos) என்றால் 'தீவு' என்று பொருளாகும். ஆதலால் இத் தீவுகளின் பெயராகிய 'மிகச் சிறிய தீவுக் கூட்டங்கள்' எனும் பெயர் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. தீவுகளின் பெயர் மிகச் சிறிய தீவுக் கூட்டங்கள் என்று இருந்தாலும் இலங்கையின் 'கச்சதீவு' 'பாலைதீவு' ஆகிய தீவுகளின் பரப்பளவை ஒத்த பல நூற்றுக் கணக்கான தீவுகளும், இலங்கையின் நெடுந்தீவு, தலைமன்னார் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் பரப்பளவை ஒத்த சில தீவுகளும் இத் தீவுக் கூட்டங்களில் காணப் படுகின்றன.


வேறு பெயர்கள்:
மைக்குரோனீசியா


தீவுகளின் எண்ணிக்கை:
ஆயிரத்திற்கும் மேற்பட்டவை.
*பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கு வடக்கில் கடலில் சிதறிக் கிடக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளே 'மைக்ரோனேசியா' தீவுகள் ஆகும். இத் தீவுகளின் உண்மையான எண்ணிக்கை இன்றுவரை கண்டறியப் படவில்லை. மேற்படி தீவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளில் மனிதர்கள் வாழ்கின்றனர். 607 தீவுகளில் சுற்றுலாவுக்கும், படப் பிடிப்பிற்கும்(திரைப்படங்கள்) ஏற்ற அழகான சிறிய மலைகளும், பவளப் பாறைகளும் உள்ளன.


எல்லைகள்:
தீவுகள் என்பதால் சகல தீவுகளிலும் நான்கு பக்கமும் பசுபிக் கடல். இருப்பினும் கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளாக வடமேற்கில் பிலிப்பீன்ஸ் தீவுகளும், மேற்கிலும் தெற்கிலும் இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா, மெலனீசியா ஆகிய நாடுகளும், கிழக்கில் பொலினீசியாவும் உள்ளன.


தீவுக் கூட்டங்களில் உள்ள சில முக்கியமான மற்றும் பிரபலமான தீவுகள்:
குவாம்(Guam)
கிரி பட்டி(Kiribati)
மார்ஷல் தீவுகள் (Marshal Islands)
மைக்ரோனேசிய ஒன்றியம்(federated states of Micronesia /FSM)
நவூரு(Nauru)
வடக்கு மரியானா தீவுகள் (Northern Mariana Islands)
பலாவு (Palau)
வேக் தீவு (Wake island)


மாநிலங்களின் எண்ணிக்கை:
4


நிர்வாகப் பிரதேசங்களின் எண்ணிக்கை:

  
பரப்பளவு:
702 சதுர கிலோ மீட்டர்கள் 


சனத்தொகை:
108,500(2006 மதிப்பீடு)


அமெரிக்காவிடமிருந்து மட்டுப் படுத்தப் பட்ட அளவில் பசுபிக் தீவுகளுக்கான சுதந்திரம்:
03.11.1986


தலைநகரம்:
பலிக்கீர்(Palikir)


பெரிய நகரம்:
வெனோ(Weno)


அலுவலக மொழிகள்:
ஆங்கிலம் மற்றும் ஆறுக்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகள்.


சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம்50%, புரட்டஸ்தாந்துகள் 47%, ஏனைய சமயங்கள் 3%


கல்வியறிவு:
89%


ஆயுட்காலம்:
ஆண்கள் 67 வருடங்கள் 
பெண்கள் 69 வருடங்கள் 


ஆட்சி முறை:
அமெரிக்காவின் இறைமையை ஏற்றுக் கொண்ட ஆனால் தீவுகளின் சுயாட்சி உள்ள அரசுகள்.


ஜனாதிபதி:
எமானுவல் மன்னி மோரி(Emmanuel "Manny" Mori)


நாணயம்:
அமெரிக்க டாலர்(USD)


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 691


இணையத் தளக் குறியீடு:
.fm


பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
மீன்பிடி, விவசாயம், சுற்றுலாத்துறை.


விவசாய உற்பத்திகள்:
ஈரப் பலாக்காய்(Bread Fruit/ ஒரு வகைக் காய்கறி), தேங்காய், வாழைப்பழம், பாக்கு, மரவள்ளிக் கிழங்கு, ஏனைய கிழங்கு வகைகள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • அமெரிக்க ஆட்சியின் கீழ் பல வருடங்கள் வாழ்ந்தாலும் நாகரீகத்தின் வாடை அறியாத மக்களும் இத் தீவுகளில் வாழ்கின்றனர். ஆபிரிக்க மக்களைப் போல் மேலாடை அணியாத, மிகக் குறைந்த ஆடைகளால் உடலை மறைத்து வாழும் மக்களும் இத் தீவுகளில் வாழ்கின்றனர்.
  • தீவு மக்களில் 50% பேர் அரசாங்க வேலையில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக