புதன், மார்ச் 07, 2012

முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்


ஆக்கம்: வினோ ரூபி, சென்னை இந்தியா
 மனிதனுக்கு தேவையான ஆரோக்கியத்தையும், புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கீரையை அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது. எந்த கீரையை சமைப்பதாக இருந்தாலும், அவற்றைக் கழுவி சுத்தம் செய்த பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து சாப்பிடலாம்.

முருங்கை கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் அந்த நேரத்தில் சாப்பிட்டால், ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்.

முருங்கைக் கீரை உண்பதால் தாதுபலம் பெருகுவதுடன் இரத்த அழுத்தமும் குணமாகும்.

மேலும் இந்த கீரையை சாப்பிடுவதால் கொழுப்புச் சத்து குறைவதுடன் நீரிழிவு நோயும் குணமாகிறது.

முருங்கை கீரை சாப்பிடுவதால் காமாலை குறையும். கண்பார்வை தெளிவாகும்.ஆனால் மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக