சனி, ஜூன் 21, 2014

உங்களுக்கு தாறுமாறான உணவு பழக்கமா?

உங்களையும், உங்கள் உடலையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

* இதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுங்கள். சவாலாக ஏற்று சாதித்து விடுங்கள்.

* மன நலத்திற்கான மருந்துகளை மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளுங்கள். உணவினை மன மகிழ்விற்காக சாப்பிடுபவர் அநேகம். ஆனால் சரியான அளவில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் கிடைத்தால் மனதில் உணவிற்காக ஏங்கும் பழக்கம் போய் விடும். எனவே, சரி விகித உணவினை வகுத்துக் கொள்ளுங்கள்.

* முழு தானிய உணவு, நார் சத்து உணவு, பச்சை காய்கறிகள், பழங்கள் இவை உடல் நலம் மட்டுமல்ல மன நலத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

* வைட்டமின்-பி வகை மனநலத்திற்கும் மிகவும் அவசியம். சரியான நேரத்தில் உண்ணும் முறையை கண்டிப்பாய் பழகி கொள்ளுங்கள். இது மனநிலையை மிகச் சீராக வைக்கும்.

* காலை உணவு கண்டிப்பாய் உண்ண வேண்டும்.

* புரதம் ஒவ்வொரு வேளை உணவிலும் இருக்க வேண்டும். பருப்பு, சோயா போன்ற புரத வகைகள் மூளையினை நன்கு வேலை செய்ய வைக்கும்.

* பாஸ்ட்புட், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

* நாள் ஒன்றுக்கு சிறிய உணவாக நார்சத்து, சத்துணவு பழங்கள், காய்கறிகள் என ஐந்து முறை உண்ணுங்கள்.

* நிறைய தண்ணீர், அளவான காபி, டீ என எடுத்துக் கொள்ளுங்கள். டீயில் எலுமிச்சை கலந்து குடிப்பது மனநிலையை முன்னேற்றி, மறதித்தன்மையினை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

* வாழைப் பழம் மிக நல்ல உணவு. சத்து அதிகமிக்க இந்த உணவை `டயட்' இருப்பவர்கள் கூட எடுத்துக் கொள்வர்.

* யோகா பயிற்சி மனநிலையில் நல்ல முன்னேற்றம் தருவதால் இன்று வெளிநாடுகளில் யோகா பிரபலம் அடைந்துள்ளது. உடற்பயிற்சி உங்கள் நலம் காக்கும். நண்பன் என்பதினை உணருங்கள். ஒருவரின் மன உளைச்சல் அவருக்கு மனநோயாக மாறலாம். அதற்கு சில காலம் முன்பே அவர்களுக்கு சில அறிகுறிகள் தோன்றும்.
* தற்கொலை எண்ணம்.
* எதிலும் கவனம்இன்மை, அதிக மறதி.
* அதிக கோபம், எரிச்சல்.
* ஒரு நேரம் போல் ஒரு நேரம் இல்லாமை.
* தேவையற்று தன்னை சுற்றி இருப்பவர் மீது சந்தேகம்.
* எதிலும் ஒதுங்கி இருத்தல். இந்த அறிகுறிகளில் மனநல மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருத்துவம் இழந்த வாழ்வை மீண்டும் பெற வைக்கும்.

நன்றி: மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக