இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினர்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி. (1131)
பொருள்: காம நோயால் துன்புற்று வருந்துபவர்களுக்கு, வலிமையான பாதுகாப்பு எதுவென்றால் 'மடலேறுதல்' (பொது இடத்தில் நான்கு பேர் அறியத் தம் காதலைக் கூறி தம்மைச் சேர்த்து வைக்குமாறு நான்கு பேரிடம் வேண்டுதல்) அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக