உடலானது நல்ல அழகான வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி ஓட்டமும், மெல்லோட்டமும்தான் (ஜாகிங்) இவை நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர், நீச்சல், நடை, சைக்கிளிங் என்று எந்த உடற்பயிற்சியையும் தேர்வு செய்து, அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.
'ஜிம்' பயிற்சியின் போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜனமில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்ப யிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை.
தசை சோர்வு அடைந்திருப்பதையும், அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம். வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இளவயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது மிகவும் தவறான கருத்து. உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு 'ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்' அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும். மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் என் உடம்புக்கு ஏற்றவை தான் என்று நினைக்க கூடாது.
வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை என்றால், உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
நன்றி:மாலைமலர்
1 கருத்து:
சிறந்த வழிகாட்டல்
கருத்துரையிடுக