ஞாயிறு, ஜூன் 01, 2014

மதிய உணவு இப்படி இருத்தல் நலம்

மதிய உணவும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருப்பது நல்லது. சாதம், காய்கறிகள் கலந்த சாம்பார், பொரியல், தயிர் ஆகியவையே சமவிகித ஊட்டச் சத்தைக் கொடுக்கும். வற்றல் குழம்பு என்றால் பருப்பு சேர்க்கப்பட்ட கூட்டு அவசியம்.

ஏனெனில் சாம்பாருக்குப் பதிலாக கூட்டில் பருப்பு, காய்கறிகள் சேர்க்கப்படுவதால் வற்றல் குழம்புக்குக் கூட்டு அவசியம். தயிர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சிப்ஸ், வடகம், அப்பளம் வேண்டாம்: அப்பளம் சாப்பிடுவதால் நாக்குக்கு வேண்டுமானால் ருசியாக இருக்கலாம். ஆனால் உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. மதிய உணவில் மேற்சொன்ன காய்கறி  பொரியலுடன் வேண்டுமானால் அப்பளம் தொட்டுக் கொள்ளலாம். ஆனால் காய்களுக்குப் பதிலாக அப்பளம், வடாம், சிப்ஸ் போன்றவற்றை மட்டுமே தொட்டுக் கொண்டு சாப்பிடுவது எவ்விதப் பலனையும் தராது.

ரசம் போதாது: சில நேரங்களில் கூட்டு, பொரியல், சாம்பார் வைப்பதற்கு நேரம் இருக்காது. எனவே பலர் ரசம் வைத்து அப்பளம் பொரித்துச் சாப்பிடுவார்கள். இது தவறு. ரசத்தில் போதிய ஊட்டச்சத்துகள் கிடையாது. எனவே பருப்பு துவையல் வைத்துக் கொள்ளலாம். அதோடு காய்கறிகளை (கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம்) பச்சையாக நறுக்கிச் சாப்பிடலாம்.

நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக