ஒளவையார்


நன்றி ஒருவற்குச்
செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ
லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட
நீரைத்
தலையாலே தான்தருத லால்.
தலையாலே தான்தருத லால்.
பொருள்: அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும்போது அதனால் நமக்கு என்ன பயன் விளையும் என்று ஆராய்ந்து, நன்மை செய்ய வேண்டாம். நாம் செய்யும் அந்த உதவி நமக்கு எப்போது திரும்பக் கிடைக்கும் என்றெல்லாம் கணக்குப் பார்க்க வேண்டாம். தென்னை மரத்திற்கு அதன் காலில்(அடியில்) நாம் ஊற்றுகின்ற தண்ணீரை அது தனது தலையாலே 'இளநீராகத்' தரவில்லையா? நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ்
சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதை அறிவீர்கள் அன்றோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக