இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. (1115)
பொருள்: அவள் தனது உடலின் மென்மை அறியாமல் அனிச்ச மலரைக் காம்பு ஒடிக்காமல் சூடினாள். அந்தக் காம்போடு கூடிய மலரின் சுமையைத் தாங்காது இவளது இடை ஒடிந்து போகும். எனவே, சாவுக்கு அடிக்கப்படும் பறை(சாப்பறை) அன்றி இவள் இடைக்கு இனி நல்ல பறைகள்(திருமண மேள தாளம்) ஒலிக்க மாட்டாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக