திங்கள், ஜூன் 23, 2014

இயக்குனர் இராம நாராயணன் திடீர் மரணம்!

 'காசேதான் கடவுளடா' ரீமேக்கை கைவிட்டார் இராம.நாராயணன்
பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான இராம. நாராயணன் நுரையீரல் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (22.06.2014) சிங்கப்பூர் மருத்துவ மனையில் மரணமடைந்தார்.

தயாரிப்பாளர் சங்க தலைவராக மூன்று முறை பதவி வகித்த அவர், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட 9 மொழிகளில் 128 திரைப்படங்களை இயக்கியுள்ளார். திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக அரசின் இயல், இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். 

மிருகங்களைப் பயன்படுத்திப் பல பக்தி படங்களை எடுத்துள்ள இவர் 'பட்ஜெட்' படங்களை எடுப்பதில் புகழ் பெற்றவர். இவரது மிகக் குறைந்த 'பட்ஜெட் படங்கள்' பல அதிக அளவில் வசூலை அள்ளிக் குவித்துள்ளன.
பட்ஜெட் படங்கள் எடுப்பதில் புகழ்பெற்றவர், இவரின் மிகக்குறைந்த பட்ஜெட் படங்கள் அதிக அளவில் வசூல்களை அள்ளியுள்ளன. - See more at: http://www.satrumun.net/2014/06/director-ramanarayanan-passed-away.html#sthash.Wmdd2a5c.dpuf
பட்ஜெட் படங்கள் எடுப்பதில் புகழ்பெற்றவர், இவரின் மிகக்குறைந்த பட்ஜெட் படங்கள் அதிக அளவில் வசூல்களை அள்ளியுள்ளன. - See more at: http://www.satrumun.net/2014/06/director-ramanarayanan-passed-away.html#sthash.Wmdd2a5c.dpuf
அவர் சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்த "கண்ணா லட்டு தின்ன ஆசையா? என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
இவரது படைப்பில் 'ஆடி வெள்ளி', 'ராஜ காளியம்மன்' ஆகிய படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளன. மேலும் இவர் ஒரு 'மலாய்' (மலேசிய மொழி) மொழிப் படத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகில் அதிக மொழிகளில் பல படங்களை இயக்கிய சாதனையாளர் இவர். அவரது உடல் நாளைய தினம் (செவ்வாய்) சென்னையில் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக