செவ்வாய், ஜூன் 04, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள் 
  

10. சாகப் போகிற கிழவனுக்கு யார் நண்பன்?
  சாகப் போகிற கிழவனுக்கு நண்பன் அந்தக் கிழவன் தனது வாழ்நாளில் செய்த தான, தர்மங்களால் கிடைத்த புண்ணியமே ஆகும். அந்தப் புண்ணியமே அவனது மரணத்தின் பின் தனியாகச் செல்லும் உயிரின் கூடவே செல்லும்.

11. பாத்திரங்களுள் எது பெரியது?
  எல்லாவற்றையும் தனக்குள் அடக்கக் கூடிய பெரிய பாத்திரம் பூமியே ஆகும்.

12. எது சுகம்?
  மனிதனின் சுகம் எனப்படுவது அவனது நல்லொழுக்கத்திலே நிலை பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக