வெள்ளி, ஜூன் 28, 2013

பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய பொங்கல்விழா நிகழ்வுகள்.


"கண்ணுக்கு இமையாகிக் கற்புக்கோர் தெய்வமாகி
மண்ணில் உதிக்கின்ற மாயைக்கு ஒளியாகித்  - தலைத்தீவின்
பூமாவடியெனும் பூம்புகார் அமர்ந்த தாயே 
தயவாய் அருள்புரிவாய் தணிந்து"

அம்பிகை அடியார்களே, வாசகப் பெருமக்களே!

எமது இலங்கைத் திருநாட்டின் வடபால் அமைந்த யாழ் மாவட்டத்தில் மேற்கில் அமைந்திருக்கும் சப்த தீவுகளில் தலையாய் விளங்கும் 'மண்டைதீவுக் கிராமத்தில்' வேண்டிப் பணியும் அடியார்க்கு நல்லருள் புரிய எழுந்தருளி இருக்கும் காவல் தெய்வமாம் கண்ணகை அம்மனின் வருடாந்தப் பொங்கல் விழா இம்மாதம் 17.06.2013 திங்கட் கிழமை தொடக்கம் ஆனி உத்தரப் பூசைகளுடன் ஆரம்பமாயின. அன்றைய பூசைகளையும், அன்னதான நிகழ்வினையும் மண்டைதீவு 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சி. செல்வராசா குடும்பத்தினர் பொறுப்பேற்றுச் செம்மையுற நடாத்தினர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 21.06.2013 வெள்ளிக்கிழமை அன்று அம்மனின் முத்தரிசித் தண்டலுடன் ஊர்வலமும், அன்னதானமும் இடம்பெற்றன. அன்றைய நிகழ்வுகளை வழமை போலவே விசுவமடுவைச் சேர்ந்த அமரர்.சின்னத்தம்பி செல்லத்துரை அவர்களின் குடும்பத்தினரும், கனடாவில் வாழும் மண்டைதீவைச் சேர்ந்த அமரர்.சின்னத்தம்பி தம்பிஐயாவின் பிள்ளைகளும் உபயகாரர்களாகப் பொறுப்பேற்று நடாத்தினர்.
அதற்கு அடுத்த படியாக அன்னையின் பொங்கல் பெரு விழா மற்றும் தீ மிதித்தல் வைபவத்தின் உபயகாரர்களாக அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர்கள் திரு.திருமதி இராசரத்தினம் மகேஸ்வரி அவர்களின் பிள்ளைகள் திரு.இ.பாலச்சந்திரன், திரு.இ.அருட்சோதி மற்றும் திரு.இ.உதயசோதி ஆகியோர் பொறுப்பேற்று மிகவும் சிறப்புற நடாத்தினர்.
இதேபோல அன்னையின் ஆலயத்தில் 'எட்டாம் மடை' நிகழ்வு நடைபெறும் தினமாகிய எதிர்வரும் 1.07.2013 தேதிவரை தினமும் நண்பகல் 12.00 மணிக்கு அம்பிகைக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெறவுள்ளன. 
மேற்படி ஆலயத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வருடாந்தச் சிறப்பு வழிபாடுகளின் புகைப்படங்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம். 
 - ஆசிரியர்- 


படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்


புகைப்படங்களுக்கு நன்றி: திரு.செ மதியழகன் மற்றும் அல்லையூர் இணையம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக