பல வியாபார ஸ்தலங்களிலும், வீடுகளிலும் வடக்கு திசையில் குபேரர் அமர்ந்திருந்தால் அதிருஷடம் வீடு தேடி வரும் என்ற நம்பிக்கை இருக்கும் பார்த்தாலே ஆனந்தம் பொங்கும் சந்தோஷமான செழிப்பான தோற்றத்துடன் இருக்கும் பொம்மைகள்  உண்மையான குபேரர் அல்ல உண்மையில் அது  சீனாவின் சிரிக்கும் புத்தர்  என்ற பெயரில் தொந்தியும் தொப்பையுமாக சிரித்த முகத்துடன் ஒரு சிலை கிடைக்கும் இந்தப் பொம்மைச் சிலை பலவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒன்றில் பணம் மடியில் கொட்டும் ஒன்றில் தன் இரு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டிருப்பது போல இருக்கும். இதுவும் குபேரன் தான் என்று சொல்கிறார்கள். உண்மையில் குபேரர் வேறு சிரிக்கும் புத்தர் பூடேய் வேறு.

சிரிக்கும் புத்தர் பூடேய் வரலாறு:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிரிக்கும் புத்தரைப் போலவே ஒருவர் வாழ்ந்திருந்தார் என்பது  சீனத்தில் நிலவும் நம்பிக்கை.அவர் பெயர் பூடேய். அவர் லியாங் முடியாட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு ச்சான் பிக்கு.மிகுந்த கருணையும் தயாள குணமும் கொண்ட இவரை முக்கிய ஏழு கடவுளர்களுள் ஒருவராக தாவோ மற்றும் ஜப்பானிய ஷிண்ட்டோ மதங்கள் கருதுகின்றன.

சிரிக்கும் புத்தரின் தொப்பையைத் தடவினால் பெரிய அதிருஷ்டமும்செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முடித்திருத்தகம் மற்றும் உணவகங்களில் இந்த புத்தர் சிலையை வைத்திருந்தால் அதிருஷ்டம் பெருகும் என்பதும் பரவலானதொரு நம்பிக்கை.இதனாலேயே உணவகம்,விடுதிகள் போன்ற இடங்களில் நுழைவாயிலிலேயே சிரிக்கும் புத்தரை நாம் காணலாம்.

வணிகப் பயணிகள் மற்றும் பிக்குகள் பௌத்ததை கிழக்கில் ஜப்பான் கொரியாபோன்ற நாடுகளை நோக்கியும் வடக்கில் ஆஃப்கானிஸ்தான் திபெத் நோக்கியும்தெற்கில் இந்தோனேசியா மற்றும் ஸ்ரீலங்கா நோக்கியும் நூற்றாண்டுகளாகக் கொண்டு சென்று பரப்பியிருக்கிறார்கள். பல்வேறு கலாசாரங்கள் பௌத்ததைஉள்வாங்கியதால் பௌத்தத்தில் ஏற்பட்ட சின்னச் சின்ன மாற்றங்கள் இயல்பாய்நிகழ்ந்தன.

10ஆம் நூற்றாண்டில்தான் சீனத்து பௌத்ததில் மகிழ்ச்சியின் கூறுகளையெல்லாம் சேர்த்து உள்வாங்கி, ஒரு கையில் மணிமாலையும் மற்றொரு கையில் பொற்காசுகள் நிறைக்கப்பட்ட பையுமாக சிரிக்கும் புத்தர் என்ற... மேலும்