அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
இலங்கையில் யாழ் மாவட்டத்திலுள்ள தீவகக் கிராமங்களுள் ஒன்றாகிய 'அல்லைப்பிட்டியில்' கோவில் கொண்டு, இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேய மாலுமிகள், மற்றும் படைத் தளபதிகளால் பய பக்தியுடன் பூசிக்கப்பட்டு, அதன் பின்னர் வந்த ஒல்லாந்த, ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும் பேணிப் பாதுகாக்கப்பட்டு, வணங்கப்பட்ட'உத்தரிய மாதாவின்' ஆலயத் திருவிழா கடந்த வியாழக்கிழமை (07.07.2011) கொடியேற்றத்துடன் ஆரம்பித்து இன்றைய தினம்(16.07.2011) இறுதி நாட் திருப்பலி நடைபெறுகிறது. மேற்படி ஆலயம் கிறீஸ்தவ மக்களால் மட்டுமன்றி, இந்துக்களாலும் போற்றித் துதிக்கப்படுவது என்பதும் குறிப்பிடத் தக்கது. புலம்பெயர்ந்து வாழும் அல்லையூரின் அனைத்துக் கிறீஸ்தவ மக்களின் மகிழ்வில் நாமும் பங்கு கொள்கிறோம். உத்தரிய அன்னையின் அருள் மழை நம் அனைவர்மீதும் நிறைவாகப் பொழியட்டும்.

ஆசிரியபீடம்
அந்திமாலை
2 கருத்துகள்:
god plass for all
only god can give peace full life
கருத்துரையிடுக