செவ்வாய், ஜூலை 26, 2011

அந்திமாலையில் அறிமுகம்

திரு.ஜோ மில்டன் அவர்கள் தமிழார்வம் மிக்க ஒரு வளர்ந்துவரும் எழுத்தாளர். சிந்தனைக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர். தமிழகத்தின் தென்முனையான 'கன்னியாகுமரியைப்' பூர்வீகமாகக் கொண்ட இவர் திருச்சி செயின்ட்.ஜோசப் கல்லூரியில் 'கணனித் துறையில்' பட்டப் படிப்புப் படித்தவர். கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கணனித் துறையில் மென் பொருள் (Software) பிரிவில் பணியாற்றி வருகிறார்.ஒரு கணனித் துறைப் பட்டதாரியாக இருப்பினும் தனது சிந்தனைகளை அழகிய தமிழில் வடிக்கும் ஆற்றல் மிக்கவர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் வலைப் பதிவில் எழுதிவரும் இவர் cdjm.blogspot.com எனும் வலைப்பதிவை இயக்கி, எழுதி வருகிறார். தமிழ்மீது இவருக்கு இருக்கும் ஆர்வத்தையும், பற்றுதலையும், சமூக அக்கறையையும் இவரது எழுத்துக்களில் காணலாம். இவரது வலைப்பதிவின் 'தாரக மந்திரம்' "இயன்றவரை இனிய தமிழில் பேசுவோம்""  என்பதாகும்.
இன்றைய தினம் 'அந்திமாலையில்' இவர் எழுதிய 'சீனரும் மதமும்' என்ற ஒரு சிறிய பயணக் கட்டுரை இடம்பெறுகிறது. இன்றைய தினம் அந்திமாலையில் 'நாடுகாண் பயணத்தில்' சீனா பற்றிய தகவல்கள் இடம்பெறுவதாலும், இவரது கட்டுரை சிறியதாக இருப்பினும் அதில் சீனா பற்றிய சில முக்கியமான தகவல்களை அவர் நம்மோடு பகிர்ந்து கொள்வதால் வாசகர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அந்திமாலையின் தளத்திற்குப் புதிய படைப்பாளியாக வருகை தரும் ஜோ மில்டன் அவர்களை நல்வரவு கூறி வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.
"ஒன்றுபட்டு உயர்வோம்"

ஆசிரிய பீடம் 
அந்திமாலை 

12 கருத்துகள்:

Loganathan Denmark சொன்னது…

Welcome.

suthan சொன்னது…

all best to you mildan

vinothiny pathmanathan dk சொன்னது…

Welcome.

Paransothinathan, Denmark சொன்னது…

Welcome to www.anthimaalai.dk
Looking forward to read your articles.

Uthayan சொன்னது…

we are waiting from your articles

Sakthy, DK சொன்னது…

I read your article about China. Excellent. I look forward to reading more of your articles

Amutha, France சொன்னது…

Very Good.. Welcome to Jo Milton

kowsy சொன்னது…

Well come. I am waiting for your thoughts

ஜோ/Joe சொன்னது…

அறிமுகம் செய்த அந்திமாலை ஆசிரிய பீடத்துக்கும் வரவேற்று நல்வார்த்தைகள் நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

kovaikkavi(vetha) சொன்னது…

nal vaalthukal!

பெயரில்லா சொன்னது…

"இயன்றவரை இனிய தமிழில் பேசுவோம்"

வரவு நல்வரவாகுக !!

நட்புடன் நடா சிவா.

ஜோ/Joe சொன்னது…

கோவைக்கவி , நடா சிவா ..மிக்க நன்றி

கருத்துரையிடுக