நாட்டின் பெயர்:
சீனா(China)
வேறு பெயர்கள்:
மக்கள் சீனக் குடியரசு (People's Republic of China / PRC)
*தமிழில் 'சீனா' எனும்போது பொதுவாக பெரு நிலப் பரப்பாகிய மக்கள் சீனக் குடியரசையே எண்ணுகிறோம். இருப்பினும் உலகில் இரண்டு சீனாக்கள் உள்ளன என்பதை பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
முதலாவது சீனாவின் பெயர் மக்கள் சீனக் குடியரசு (People's Republic of China) இப்பெரு நிலப் பரப்பு சீனா மற்றும் முன்னாள் பிரித்தானியக் குடியேற்றப் பகுதியாகிய ஹொங் கொங் (Hong Kong), மற்றும் முன்னாள் போர்த்துகேயக் குடியேற்றப் பகுதியாகிய மக்காவு (Macau) ஆகியவற்றைக் குறிக்கும்.
இரண்டாவது சீனாவின் பெயர் 'சீனக் குடியரசு' (Republic of China / ROC) இது தாய்வான்/தைவான் தீவுடன், Penghu, Kinmen, Matsu, மற்றும் பிரட்டாஸ் தீவுக் கூட்டங்களைக் (Pratas Islands) கொண்ட 'தைவான்' நாட்டைக் குறிக்கும். தாய்வான் நாடு 1912 ஆம் ஆண்டு சீனாவுடன் உறவை முறித்துக் கொண்டாலும், உலக அரங்கில் சீனாவின் ஒரு பகுதியாகவே பார்க்கப் படுகிறது. தற்போதும் உலக அங்கீகாரத்தை எதிர்பார்த்தபடியும், 'தனிநாட்டுப் பிரகடனம் செய்தால்' மக்கள் சீனக் குடியரசால் தாக்கப்படும் 'அபாயத்தை' எதிர்நோக்கியபடியும் உள்ள 'இறைமை' குறைந்த ஒரு விதமான 'சுயாட்சி' நாடு ஆகும்.
கிழக்கு ஆசியா
எல்லைகள்:
வடக்கு - மொங்கோலியா, ரஷ்யா,கஜகஸ்தான்.
தெற்கு - வியட்னாம், லாவோஸ், பர்மா
மேற்கு - இந்தியா, நேபாளம், பாகிஸ்தான்.
தலைநகரம்:
பெய்ஜிங் (Beijing)
ஷங்காய் (Shanghai)
அலுவலக மொழி:
மண்டரின் (புட்டொங்குவா / Putonghua)
ஏனைய பிராந்திய மொழிகள்:
கன்டோனீஸ் (Cantonese), ஆங்கிலம், போர்த்துக்கேய மொழி, உய்க்கர் (Uyghur), திபெத்திய மொழி(Tibetan), மொங்கோலிய மொழி(Inner Mongolia) இவை தவிரவும் 292 வகையான சீன மொழியின் கிளை மொழிகள்.
இனங்கள்:
ஹன்(Han) இனத்தவர் 91.5 %
மீதி 56 வகையான வெவ்வேறு இனங்கள்.
93 %
ஆயுட்காலம்:
ஆண்கள் 72.5 வருடங்கள்
பெண்கள் 76.7 வருடங்கள்
ஆட்சிமுறை:
ஒரு கட்சி ஆட்சிமுறை
ஜனாதிபதி:
ஹூ ஜின்டாவோ (Hu Jintao) *இது 26.07.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
பிரதமர்:
வென் ஜியாபாவோ (Wen Jiabao) *இது 26.07.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
9,640,821 சதுர கிலோ மீட்டர்கள்.
சனத்தொகை:
1,339,724,852 (2010 மதிப்பீடு)
நாணயம்:
சீன யுவான் (Chinese Yuan / CNY)
இணையத் தளக் குறியீடு:
.cn
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-86
இயற்கை வளங்கள்:
நிலக்கரி, இரும்பு, இயற்கை எரிவாயு, மெர்க்குரி, தகரம், டங்ஸ்டன், அன்டிமனி, மங்கனீஸ், மொலிபெட்னம், வனாடியம், அலுமினியம், ஈயம், ஸிங், அபூர்வ, இரசாயனப் பொருட்கள், யுரேனியம், நீர் மின்சாரம்(உலகிலேயே மிகப் பெரிய அளவில்)
தொழில்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
உருக்கு, சுரங்கத் தொழில், இரும்பு, வெள்ளீயம், அலுமினியம், நிலக்கரி, இயந்திரங்கள், ஆயுத உற்பத்தி, துணிகள், பெற்றோலியம், சீமெந்து, இரசாயனங்கள், உர வகைகள், பாதணிகள், விளையாட்டுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள், உணவு பதனிடல், வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், ரயில்கள், கப்பல்கள், விமானங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள், வணிக வாகனங்கள், செய்மதிகள்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- உலகிலேயே அதிக சனத்தொகை கொண்ட நாடு.
- உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு இது.(முதலாமிடத்தில் உள்ளது அமெரிக்கப் பொருளாதாரம் ஆகும்)
- உலகின் முதலாவது பெரிய இராணுவத்தைக்(காலாட்படை) கொண்டுள்ள நாடு.
- உலகின் இரண்டாவது இராணுவப் பாதுகாப்புச் செலவினம்(பட்ஜெட்) கொண்ட நாடு.
- உலகில் வெளிப்படையாக அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்று.
- உலகில் அதி வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் முதலாம் இடத்தில் உள்ளது.
- பெரும் எண்ணிக்கையில் பட்டதாரிகள், இராணுவ ஆய்வாளர்கள், பொதுக் கொள்கை வகுப்பாளர்கள், பொருளியல் நிபுணர்கள், ஆகியோரைக் கொண்டிருப்பதால் வல்லரசுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் முதலாம், இரண்டாம் இடங்களில் அமெரிக்காவும், பிரேசிலும் உள்ளன.
- உலகின் பழமை வாய்ந்த ஐந்து நாகரிகங்களில் 'சீன நாகரிகமும்' ஒன்று.
- உலகின் பழமை வாய்ந்த மொழி மட்டுமல்லாமல், உலகிலேயே அதிக மக்களால் பேசப்படுவதும் 'சீன மொழி' ஆகும்.
- உலகில் ஆதி காலத்தில் எழுத்தை உபயோகித்த மனிதர்களில் சீனர்களும் அடங்குவர்.
- உலகில் 7 லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் காணப் படுகின்றன.
- மேற்படி மனிதர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே 'நெருப்பின்' உபயோகத்தை அறிந்திருந்தனர்.
- இவ்வுலகிற்கு வெடிமருந்தின் உபயோகத்தையும், நாம் எழுதுவதற்குப் பயன்படுத்தும் காகிதத்தின்(பேப்பர்) உபயோகத்தையும் அறிமுகம் செய்தவர்கள் சீனர்களே.
5 கருத்துகள்:
Super.
மிகவும் அருமையான தகவல்கள். பாராட்டுக்கள்.
Good facts.
Wonderful.
அருமையான தகவல்கள்.
கருத்துரையிடுக